Sunday, October 24, 2010

முனைவர். க. பத்மநாபன்,
ம்யுட்சென்டார்ப்ஸ்டீட் 46, 22179 ஹேம்பர்க், ஜெர்மனி.

தொலைபேசி எண்: +49 40 642 028 36
மின்னஞ்சல்: drkpadmanaban@gmail.com

Friday, October 8, 2010

நூதனமாகக் காத்திருப்பதை விட அவளுக்கு வேறு வழியில்லை. அவளுக்குத் தனது நகங்களால் அவனது முகத்தில் பிரான்டலாம் போலிருந்தது. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அவனைக் காயப்படுத்த அவள் விரும்பவில்லை. அவனது அழகான முகத்தை எப்படி பிராண்டமுடியும் என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள். ராமன் முதலில் பாம்பனுக்குப் போய்விட்டு இறுதியாக ராமேஸ்வரம் கோவிலுக்கு டிரைவரைக் காரை ஓட்டச் சொன்னான். கார் எதுவரை போகமுடியுமோ அது வரை அவர்கள் சென்றார்கள்.

அங்கு ஏறக்குறைய ஒன்றுமேயில்லை. இந்தக் காடுகளை நன்றாக அடர்த்தியாக்கலாம். இன்னும் பல காரியங்களை இங்கு செய்யலாம் என்று அவன் எண்ணினான். இந்த இடங்களுக்கெல்லாம் ராமர் தீவின் பகுதியாக ஆவதற்கு நல்ல தகுதி இருக்கிறது என்று எண்ணினான். இதை அவன் கீஎதாவுக்கு அர்ப்பநித்திருப்பதையும் நினைவு கொண்டான் ராமன். இந்தச் செய்தியை ராமேஸ்வரத்தில் வைத்து அவளிடம் சொல்ல அவன் விரும்பவில்லை. மதுரையில் வைத்துத்தான் சொல்லவேண்டும் என்று முடிவு செய்தான். "நான் ரயில்வே ஸ்டேசனுக்குப் போவதற்கு முன்னாள் அவளிடம் சொல்வேன்", என்று நினைத்தான்.

"உங்களுக்கு எல்லாமே தெரியும் போலிருக்கிறதே. ராமேஸ்வரத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்", கீதா ராமனைக் கேட்டாள்.

அவன் அவளை இனிமையான புன்முறுவலுடன் பார்த்தான்.

"ராமேஸ்வரத்தில்தான் ராமர் தனது மனைவி சீதையை இலங்கையின் இராவணனிடமிருந்து காப்பாற்ற கடலுக்கு மேல் பாலத்தைக் கட்டினார். இங்குதான் ராமன் சிவனைத் தொழுது இராவணனைக் கொன்ற பாவத்தையும் கழுவிப் போக்கினார். எல்லா இந்துக்களும் இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு வருகிறார்கள். இதை தென்னகத்தின் வாரணாசி என்று கூறுகிறார்கள். வாரணாசிக்கு புண்ணிய யாத்திரைக்குப் போய்விட்டு ராமேஸ்வரத்திற்குப் போகாவிட்டால் இந்தப் புண்ணிய யாத்திரை முழுமையானது ஆகாது", ஆரம்பித்து ஒரே மூச்சில் முடித்தான் ராமன்.

"மன்னார் வளைகுடாவில் இந்தியாவின் கீழ்ப்பகுதியில் இருப்பதுதான் ராமேஸ்வரம் என்னும் தீவு", என்றான் ராமன்.

ராமனுடைய ஆழமான அறிவைக் கண்டு வியந்தாள், பெருமைப்பட்டாள் கீதா. ஆனால் அவளுக்கும் அவனை புகழ சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை.

"நீ என்ன கனவுலகத்தில் இருக்கிறாயா?" ராமன் கேட்டான்.

"இல்லை, நீங்கள்தான் நேற்று இரவு கனவு கண்டு கொண்டிருந்தீர்கள் என்று நான் எண்ணினேன். ஐந்து மணி நேரங்கள் நான் உங்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன்", பதிலளித்தாள் கீதா.

"அப்படியா?" என்றான் ராமன்.

அதற்கு மேல் அவன் எதுவும் சொல்லவில்லை.

"இங்குள்ள கடவுளைப் பற்றிச் சொல்லுங்களேன்", என்றாள் கீதா.

திரும்பவும் அவன் அவளைப் பார்த்து அழகாக சிரித்தான்.

"இங்குள்ள முக்கியக் கடவுள் ரங்கநாதரின் லிங்கம்தான். இது இந்தியாவிலுள்ள முக்கியமான 12 லிங்கங்களில் ஒன்று", விளக்கினான் ராமன்.

"மிகவும் அற்புதம். நீங்கள் என்னிடம் என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டால் உடனே உங்களைத் திருமணம் செய்துகொள்வேன்", என்றாள் கீதா.

அவளது முகம் சிவந்தது. தனது முகத்தை அவன் பார்க்காமலிருக்க அவள் வேறுபுறம் திரும்பிக் கொண்டாள். அவன் அதற்குப் பதில் கூறுமுன் ராமேஸ்வரம் கோவில் வந்துவிட்டது.

புதுக்கொபுரம் பார்ப்பதற்கு பிரம்மாண்டமானதாக இருந்தது. இந்தியாவிலுள்ள எல்லா மக்களையும் அங்கு காண முடிந்தது. எல்லோரும் தாங்கள் செய்யும் வேலைகளில் கோவிலைப் பார்ப்பது, புனித நீராடுதல் மற்றும் பூஜை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அவனுடைய கனவு நகரம் இங்குதான் உருவாகி இந்தியாவை எல்லா வகைகளிலும் மேலும் பலப்படுத்தும் என்று எண்ணினான் ராமன். உலகப்படத்தில் இதற்கு ஒரு முக்கியமான இடம் ஒதுக்கப்படும். எல்லோரும் இங்கு வர விரும்புவார்கள். இந்தியாவின் வருங்கால ராமர்தீவைப் பற்றி நினைக்க நினைக்க ராமன் மிகவும் பெருமையடைந்தான்.

கீதாவின் குரலை கேட்டவுடன்தான் தனது நினைவுகளிலிருந்து வெளியே வந்தான் ராமன்.

"நீங்கள் இப்படி நின்று கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களையும் ராமேஸ்வரத்திலுள்ள ஒரு கடவுள் என்று நினைக்கப்போகிறார்கள்", என்றாள் கீதா.

இனிமையான சிரிப்புடன், "நாம் இப்பொழுது கோவிலுக்குள் போவோமா?" அவனைப் பார்த்துக் கேட்டாள் கீதா.

ராமன் அவளை முழித்துப் பார்த்தான். "கோவிலுக்குள் நாம் போக வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை. நாம் ஊருக்குத் திரும்பிப் போவோம். இன்னொரு தடவை நமது வாழ்வில் நிச்சயம் இங்கு வருவோம். அப்பொழுது நீ கோவிலுக்குள் போகலாம்", என்றான் ராமன்.

அவனது குரல் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என்று கீதா எண்ணினாள். ஆனால் அவன் என்ன அர்த்தத்தில் சொன்னான் என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. விபரங்களைத் தெரிந்து கொள்ள மறுநாள் வரை காத்திருக்க அவள் முடிவு செய்தாள்.

"கடந்த நாட்களில்தான் நான் அவனை நன்றாக புரிந்துகொண்டேன். இல்லாவிட்டால் இவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்றே முடிவு செய்திருப்பேன்", கீதா நினைத்தாள். அவன் சொன்னதை அவள் ஏற்றுக்கொண்டாள். அவளுக்குப் பயங்கரப் பசி. அவர்கள் எங்காவது சாப்பிடுவது என்று முடிவு செய்தார்கள்.

இரவு 10 மணிக்கு அவர்கள் மதுரை திரும்பினார்கள். பாட்டியும் அவர்களைத் திரும்பவும் சந்தோசமாக வரவேற்றாள். அவர்கள் பாட்டியின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னார்கள். அவன் விருந்தினரின் அறைக்குள் நுழைந்த பொழுது இரவு மணி 12க்கு மேல் ஆகிவிட்டது. படுக்கையில் படுத்தபடியே அவன் கடந்த ஏழு, எட்டு நாட்களைப் பற்றி எண்ணினான். இனிமேல் தனது வாழ்க்கை முன்பிருந்ததைப் போலிருக்காது என்று அவனுக்கு உறுதியாகத் தெரிந்தது. ஆனால் கீதாவை மணக்க, தான் ஒரு செத்த எலியைக் கூட விழுங்கத் தயங்கப் போவதில்லை என்று முடிவு செய்தான். அவனுக்கு சிரிப்பும் வந்தது. அவளுடன் என்ன, எப்பொழுது, எப்படிச் சொல்வது என்பதே அவனது தீர்க்கமுடியாத பெரிய பிரச்சினையாக இப்பொழுது இருந்தது. எந்தவிதக் கனவுமில்லாமல் அன்று அவன் நன்றாகத் தூங்கினான்.

"நாளை எனது வாழ்வில் ஒரு முக்கியமான நாள். அவன் என்னைக் காதலிக்கிறான். ஆனால் அவன் சொல்ல வெட்கப்படுகிறான்", நினைத்தாள் கீதா. அவளது அறையில் அவளுக்கு மறுநாள் வரை காத்திருக்கப் பொறுமையில்லை. இந்த இரவிலும் அவளுக்கு அதிக நிம்மதியில்லை. ராமன் வாயைத் திறக்காவிட்டால் நானே அவனிடம் சொல்வேன் என்று நினைத்தாள் கீதா. இந்தச் சிந்தனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளும் தூங்கினாள். அப்பொழுது நேரம் காலை 4 மணி.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

அலுமினியம் எங்கும் இருக்கிறது – உணவு, குடிநீர், காற்று மற்றும் நாம் உபயோகப்படுத்தும் பல பொருட்களிலும் இருக்கிறது. அளவிற்கு மேல் உடம்பில் அலுமினியம் இருந்தால் அது நச்சுத்தன்மை உடையது.

கீழ்க்கண்ட பொருட்களில் அதிக அளவில் அலுமினியம் உள்ளது. அவை:

உணவு – பொதுவாக எல்லா உணவுப்பொருட்களிலும் குறைந்த அளவில் அலுமினியம் இருக்கிறது. தேயிலை, வெள்ளரிக்காய், மசாலாப்பொருட்க்கள், மூலிகைகளில் அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது. இப்பொருட்களில் அலுமினியம் மற்ற பொருட்களுடன் சேர்ந்திருப்பதால் அதிக அளவில் உறிஞ்சப்படுவதில்லை. தேயிலை, காப்பி, தானியங்கள் மற்றும் மென்குடிபானங்களில் அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது. பதனிடப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது. பதனிடப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் இரசாயனப்பொருட்களான E173, E541, E554 மற்றும் E556 களில் அலுமினியம் அல்லது அலுமினிய உப்புக்கள் இருக்கின்றன. தாய்ப்பாலோடு ஒப்பிடும்பொழுது பசும்பாலிலிருந்து தயாரிக்கப்படும் குழந்தை உணவுகளில் 10 முதல் 20 பங்கு அலுமினியம் கூட இருக்கிறது. சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் குழந்தை உணவுகளில் 100 பங்கு வரை அதிகம் அலுமினியம் இருக்கிறது. சமையல் சோடா பொடியில் (baking powder) மிக அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது.

குடிநீர் – குடிநீரில் மிகக்குறைந்த அளவில் அலுமினியம் உள்ளது. ஆனால் இது இலகுவாக இரத்தத்திற்குள் உறிஞ்சப்படுகிறது. பல நாடுகளில் கலங்கிய குடிதண்ணீரை சுத்தப்படுத்த அலுமினியம் உப்புக்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன. இந்தக் குடிநீரில் மிக அதிக அளவில் அலுமினியம் இருக்கும். குடிநீரைச் சுத்தப்படுத்த உபயோகிக்கப்படும் பல வடிகட்டிகள் (filter) அலுமினியத்தை நிறுத்துவதில்லை.

அலுமினியம் சமையல் பாத்திரங்கள் – பொதுவாக அலுமினியம் சமையல் பாத்திரங்கள் மோசமானவையில்லை. அதிக அமிலமுடைய உணவுப்பொருட்களைச் சமைக்கும்பொழுதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இதில் அதிக அளவு அலுமினியம் வெளியேறி உணவில் கலக்கிறது.. ஆகையால் அலுமினியம் சமையல் பாத்திரங்களை தவிர்ப்பது நல்லது. நல்ல முறையில் சமைக்க பல சிறந்த பாத்திரங்கள் இப்பொழுது கிடைக்கின்றன.
சிப்பத்திற்கு உதவும் அலுமினியப் பொருட்கள் – சிப்பதிற்கு உதவும் அட்டைப் பெட்டிகள், தகர டப்பாக்களின் உட்புறத்தில் மெல்லிய அலுமினியத் தகடு ஒட்டப்படுகிறது. இவைகளில் மிகக் குறைந்த அளவிலேயே அலுமினியம் இருக்கிறது. ஆனால், அமிலமுள்ள உணவு அலுமினியப் பாத்திரத்திலோ அல்லது அலுமினியத் தாளில் சுற்றப்பட்டுச் சமைக்கப்பட்டாலோ அலுமினியம் உணவுக்குள் சென்று விடும்.

மருந்துகள் – அல்சர் மற்றும் அஜீரணத்திற்கு உபயோகப்படுத்தப்படும் மருந்துகளில் அதிக அளவில் அலுமினிய உப்புக்கள் இருக்கின்றன. பொதுவாக இதிலிருந்து குறைந்த அளவிலேயே அலுமினியம் உறிஞ்சப்படும். இந்த மருந்துகளைச் சாப்பிடும்பொழுது வைட்டமின் சி மாத்திரையையும் வைட்டமின் சி அதிகமுள்ள உணவையும் தவிர்க்க வேண்டும். வியர்வை நாற்றத்தைப் போக்கும் டியோடோரன்ட்களிலும் அதிகம் அலுமினியம் உப்புக்கள் உள்ளன. அலுமினிய உப்புக் கட்டிகளும் இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சில ஷாம்புகளிலும் அதிக அளவில் அலுமினியம் இருக்கிறது.

அலுமினியம் அதிகமுள்ள தேநீர், வெள்ளரிக்காய் முதலியவைகளைச் சாப்பிடும்பொழுது வைட்டமின் சி அதிகமுள்ள உணவுப் பொருட்க்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. முக்கியச் சாப்பாட்டோடும் அலுமினியம் அதிகமுள்ள பொருட்களை தவிர்க்கவேண்டும். வைட்டமின் சி உள்ள உணவுகள் மற்றும் பழுங்களைச் சாப்பிட வேண்டும். இதனால் இரும்புச்சத்து சுலபமாக இரத்ததிற்குள் போகும்.

தக்காளி, மற்றும் புளி சேர்ந்த உணவுகளை அலுமினியச் சட்டிகளில் சமைக்காதீர்கள். இதனால் சட்டியிலிருந்து அதிக அளவில் அலுமினியம் உணவுக்குள் போகும்.


எங்கிருந்து அலுமினியம் வருகிறது என்று தெரிந்தால் அதைத் தவிர்ப்பது எளிது.

Wednesday, October 6, 2010

இரும்பு நமக்கு மிகவும் தேவையான உலோகம். சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க இரும்பு அவசியம். சிவப்பு இரத்த அணுக்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்கும் பிராணவாயுவை எடுத்துச் சென்று சக்தியை உருவாக்க மிகவும் முக்கியமானது.

அலுமினியம் உடம்பிற்கு தேவையில்லாத உலோகம். பல பத்தாண்டுகளாக அலுமினியம் சிறுகுடலில் இருந்து உறிஞ்சப்படாது என்று எண்ணப்பட்டது. இரத்தத்தில் குறைந்த அளவு அலுமினியத்தை அளக்க சரியான வழிமுறையில்லாததால் இவ்வாறு எண்ணப்பட்டது. இன்று AAS மற்றும் ICP-MS கருவிகளால் மிகக்குறைந்த அளவு அலுமினியத்தை இரத்தத்தில் மிக துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.

இரும்புச்சத்திற்கும் அலுமினியத்திற்கும் எந்தவிதமான உறவும் இல்லாவிட்டால் எங்குதான் பிரச்சினை இருக்கிறது? ஆமாம், ஒரு பெரிய பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. இரும்புச்சத்தும் அலுமினியமும் சிறுகுடலில் இருந்து இரத்தத்திற்குச் செல்லும் வழி ஒரே வழிதான். இரும்புச்சத்தை உறிஞ்ச வைட்டமின் சி தேவை. இதே வைட்டமின் சி அலுமினியம் உறிஞ்சப்படுவதற்கும் தேவைப்படுகிறது. எளிதான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், உணவில் அதிக அளவில் அலுமினியம் இருந்தால் வைட்டமின் சி யும், எடுத்துச் செல்லும் புரதமும் சிறு குடலில் இருந்து அலுமினியம் உறிஞ்சப்படுவதற்கு சாதகமாக இருக்கின்றன. இதன் விளைவு உடம்பில் இரும்புச்சத்து பற்றாக்குறை.

இரும்புச்சத்து பற்றாக்குறையால் உண்டாகும் பிரச்சினைகளைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் அலுமினியம் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை நாம் தவிர்க்கவேண்டும். பல வழிகளில் இருந்து வரும் அலுமினியம் அசுத்தமும் ஒரு பெரிய பிரச்சினையாகும். இந்த இரண்டு பிரச்சினைகளையும் தவிர்த்தால் இரும்புச்சத்து நன்றாக உறிஞ்சப்பட்டு நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

ராமன் தனது பெட்டியிலிருந்து தாளை எடுத்துத் தனது கனவைப் பற்றி எழுத ஆரம்பித்தான். ஒவ்வொரு சிறு விஷயங்களையும் அவன் விளக்கமாக எழுத விரும்பினான். எதையாவது எழுத மறந்து விடுவோமோ என்று நினைத்துப் பயந்தான். அவன் நிறுத்தாமல் எழுதிக் கொண்டேயிருந்தான். திடீரென்று கீதா அவன் முன்னால் வந்து நின்றாள்.

"என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?" அவள் கேட்டாள். "நான் மறக்கக்கூடாத சில விஷயங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்", ராமன் பதிலளித்தான்.

"அதை இப்பொழுது நான் பார்க்கவேண்டும்", என்று முனுமுனுத்தாள் அவள்.

"முடியாது, நாளை அல்லது நாளை மறுநாள் வரை நீ காத்திருக்கவேண்டும்", புன்னகையுடன் பதிலளித்தான் அவன்.

முதன்முதலாக அவளுக்கு அவன் மேல் கோபம் வந்தது. ஆனால் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தனது பெட்டியை அடுக்கத் தொடங்கினாள். ராமன் எழுதி முடித்தான். தாள்களைப் பத்திரமாகத் தனது பெட்டியில் வைத்துப் பூட்டினான். அதன் பிறகு அவன் குளியலறைக்குச் சென்றான். அன்று அவன் காலையுணவு சாப்பிடவில்லை. அவனுடைய இந்த வினோதமான நடத்தையை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

மதுரை விமான நிலையத்தில் அவர்களது விமான நிலையம் இறங்கியது. ஒரு டாக்சியில் ஏறி பாட்டி வீட்டை அடைந்தார்கள். பாட்டியும் அவர்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள். அவள் மகன் அருநாச்சலத்திடமிருந்து அவர்கள் வருவது பற்றிய தகவல் அவளுக்கு முன்பே கிடைத்துவிட்டது. பாட்டி விடாமல் தொடர்ந்து அவர்களை ஏதாவது கேட்டுக்கொண்டே இருந்தாள்.

சாப்பிட்டு முடிந்தவுடன் தான் மறுநாள் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரத்திற்குச் செல்ல விரும்புவதாகக் கூறினான் ராமன். இது கீதாவிற்கு எதிர்பாராட ஆனால் மகிழ்ச்சியான ஆச்சரியத்தை உண்டாக்கியது. உடனே அவள் ராமேஸ்வரத்திலுள்ள அந்த அழகான கோவிலைப் பற்றி எண்ணினாள். எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் கீதாவும் சரி என்று கூறினாள்.

"பாட்டி நீங்களும் கூட வாருங்கள்?" என்று கீதா கேட்டாள்.

ஆனால் பாட்டி நாள் முழுவதும் பிரயாணம் செய்ய விரும்பவில்லை.

"ராமனோடு நல்ல பிக்னிகிக்குப் போய்விட்டு வா. அதற்குத் தேவையானதெல்லாம் நான் தயார் செய்கிறேன்", விளக்கம் காணமுடியாத புன்னகையுடன் பதிலளித்தாள் பாட்டி.

கீதாவும் ராமனும் மறுநாள் காலையில் டாக்சியில் கிளம்பினார்கள். காரின் டிரைவர் கீழக்கரையைச் சேர்ந்தவர்.

"எனக்கு இங்கு எல்லா இடங்களும் தெரியும். உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள். நான் அதன்படி போகிறேன் ஐயா", என்றார் டிரைவர்.

"கீழக்கரை, முத்துப்பேட்டை, ராமநாதபுரம், மண்டபம், இருமேனி, பானல்க்குளம் மற்றும் தேவிப்பட்டினம் வழியாகக் காரை ஒட்டுங்கள். நாங்கள் இந்த இடங்களைப் பார்க்க விரும்புகிறோம். இறுதியாக ராமேஸ்வரம், பாம்பனையும் சென்று பார்க்கவேண்டும்", என்று பதிலளித்தான் ராமன்.

"சரி", என்றார் டிரைவர். காரும் நகர ஆரம்பித்தது. அவன் சொன்னது ஒன்றும் கீதாவிற்குச் சரியாக புரியவில்லை. அவன் இந்த ஊர்களிலெல்லாம் எதைப் பார்க்க விரும்புகிறான் எனத் தனக்குள் கேட்டுக்கொண்டாள். இதற்கான பதில் எனக்கு இன்று கிடைக்கும் அல்லது நாளை கிடைக்கும் அல்லது மதுரை திரும்பிச் சென்ற பிறகு இரவிலும் கிடைக்கலாம் என்று அவள் எண்ணினாள். அவளுக்கு எல்லாமே மர்மமாக இருந்தது. ராமன் ஒரு புதுமையான ஆனால் வித்தியாசமான மர்ம மனிதனாக அவளுக்குத் தோன்றினான். ஏதோ ஒரு பெரிய திட்டத்தை நடத்தப் போகிறான் அல்லது ஒரு வேலை இதெல்லாம் அர்த்தமில்லாத வேலையாகவும் இருக்கலாம் என்று எண்ணினாள் கீதா.

அது ஒரு நல்ல நாள். அன்று முழுவதும் அவர்கள் காரிலேயே சுற்றி வந்தார்கள். அதே நேரத்தில் அது ஒரு கடினமான நாளும் கூட. ஆனால் எல்லா இடங்களையும் அவர்கள் பார்த்துவிட்டார்கள். ராமன் கடலை மிட்டாயைச் சாப்பிட்டான். கீதா ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டாள். நாள் முழுவதிலும் இரண்டு அல்லது மூன்று இளநீரையும் குடித்தார்கள். டிரைவரும் பல கிளாஸ் தேநீரைக் குடித்திருந்தார்.

"எனக்கு இப்பொழுது ஒரு நல்ல எண்ணம் உண்டாகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த நாட்டிற்கு மிகவும் அருமையான இடமாகும்", என்றான் ராமன்.

"நீங்கள் என்ன அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்று எனக்குச் சரியாகப் புரியவில்லை. எனக்கு இந்த விஷயங்களெல்லாம் விளங்கவேயில்லை", என்றாள் கீதா.

"இன்னும் ஒரு நாள் பொறுத்துக்கொள். அதன்பிறகு நான் எல்லாவற்றையும் உனக்கு விளக்கமாகச் சொல்கிறேன்", என்றான் ராமன்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8