Friday, July 30, 2010

20 வருடங்களுக்கு மேலாக உடம்பு-பருமன்-குறியெண்ணைப் பற்றி நமக்குத் தெரியும். இது நம்பகமான தகவலைக் கொடுக்காவிட்டாலும் உடல் எடை குறைக்கும் தொழிலில் இதை வைத்து பலர் அதிக பணம் சம்பதித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா வழிகளிலும் அவர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே பார்க்கிறார்கள்.

இடை-உயரம்-விகிதம் மார்படைப்பு, பக்கவாதம் போன்ற வியாதிகளைப் பற்றி அதிக தகவலைக் கொடுக்கும் என்பதை சமீபகாலத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை சுலபமாகக் கணக்கிட்டுக் கண்டுபிடிக்க முடியும்.

தொப்புள் வழியாக இடையின் சுற்றளவை செ.மீ.ல் அளந்து கொள்ளுங்கள்.. உயரத்தையும் செ.மீ.ல் அளந்து கொள்ளுங்கள். இடையின் சுற்றளவை உயரத்தால் வகுத்தால் கிடைப்பதுதான் இடை-உயரம்-விகிதம்.


உதாரணம்: இடையின் சுற்றளவு = 85 செ.மீ.
உயரம் = 170 செ.மீ
இடை-உயரம்-விகிதம் = 85/170 = 0.5

இடை-உயரம்-விகிதத்தின் சரியான அளவுகள்:

40 வயது வரை - 0.5 க்கு கீழ்
40 முதல் 50 வயது வரை – 0.5 முதல் 0.6 வரை
50 வயதுக்கு மேல் – 0.6 ஒட்டி

இடை-உயரம்-விகிதம் மேலே கூறிய அளவிற்கு அதிகமாக இருந்தால் மார்படைப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய்-2 வருவதற்கான ஆபத்து இருக்கிறது.

இந்த எளிமையான கணக்கைப் போடக் கஷ்டமாக இருந்தால் இடையின் சுற்றளவை மட்டுமே அளங்கள். பெண்கள்க்கு 88 செ.மீ., ஆண்களுக்கு 103 செ.மீ. க்குக் கீழே இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவு, தேவையான அளவு உடற்பயிற்சி மற்றும் நல்ல வாழ்க்கைத்தரம் சரியான இடை-உயரம்-விகிதத்தைக் கொடுக்கும்.

ஆரோக்கியமாக இருங்கள், வாழ்க்கையை அனுபவியுங்கள்.

Monday, July 26, 2010

உணவு - உடம்பிற்கு தேவையானவை, நமது ஆரோக்கியத்தைக் கெடுப்பவை...

சுற்றுபுறசூழல் – மாசுக்களைப் பற்றியும் அதனால் உண்டாகும் வியாதிகளைப் பற்றியும்...

வியாதிகளைப் பற்றி...

மருந்துகள் மற்றும் போதைப்பொருட்களைப் பற்றி...

மது, புகையிலை சம்பந்தமாக...

பாலியலின் முக்கியத்தைப் பற்றி...பிரச்சினைகளைப் ப்ற்றி...

சமூக பிரச்சினைகளைப் பற்றி...

இது போக நீங்கள் கேட்கும் கேள்விகள்...

Saturday, July 24, 2010

மூணாரில் பிறந்து சாத்தூரைச் சேர்ந்த நான், சென்னை, மதுரை மற்றும் விருதுநகரில் படித்தேன். எனது தமிழ் மதுரை தியாகராஜர் கல்லூரியைச் சார்ந்தது. எனது வயதில் உள்ளவர்களுக்கு 1965 தமிழ் மொழிப் போராட்டத்தைப் பற்றி நினைவிருக்கும். உலகில் ஒருவரோடு ஒருவர் புரிந்து கொள்ள மொழிகள் அவசியம். ஆகையால் எனக்குத் தெரிந்த மொழிகளான ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் தமிழில் இங்கு எழுதுகிறேன்.

படித்து முடித்தவுடன் 2 ஆண்டுகள் மீன்வளத்துறையில், நாகபட்டினத்தில், உதவி ஆராய்ச்சியாளராக வேலை பார்த்தேன். அதன்பிறகு ஜெர்மனி. வருடங்கள் வேகமாக ஓடி விட்டன.

எனக்குக் கிடைத்த அறிவை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் கேள்விகளைக் கேளுங்கள், பதிலளிக்கிறேன்.

நன்றி

டாக்டர். க. பத்மநாபன்