Tuesday, October 5, 2010

தத்துவப்படி இது சரியே. ஆனால் நடைமுறையில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதிக அளவில் எல்லா உலோகங்களும் நச்சுத்தன்மை வாய்ந்தவையே. இரும்புச்சத்தினால் ஹீமோகுளோபின் அளவைக் கூட்ட முடியும். பொதுவாக இது நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே இரத்தத்திற்குள் செல்வது நல்லது.

நீங்கள் இரும்புச்சத்து மாத்திரையைச் சாப்பிட்டால் இரத்தத்திற்குப் போகும் எல்லா இரும்புச்சத்தும் ஹீமோகுளோபினாக மாற்றப்படாது. அளவுக்கு அதிகமான
இரும்பு இருதயம், சிறுநீரகங்கள், ஈரல் மற்றும் பல உறுப்புக்களிலுள்ள தசைகளில் படிகிறது. நமது உடம்பின் வெப்பம் 37° செல்ஸியஸ். மேலும் உடம்பில் தேவையான அளவில் தண்ணீர் இருக்கிறது. இதனால் தசைகளில் படிந்த இரும்பு துருப்பிடிக்கிறது. இதனால் உடம்பில் அளவுக்கதிகமாக நச்சுத்தன்மை வாய்ந்த, வினை வீரியம் கொண்ட ஹைட்ராக்சில் ஃப்ரிராடிக்கல் (Free Radicals) பெண்டன் இயக்கத்தால் உண்டாகிறது. ஃப்ரிராடிக்கல் நது உடம்பிற்கு மிகவும் முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அளவிற்கு அதிகமாக இருந்தால் இவை நமது மூட்டுக்கள் மற்றும் உறுப்புக்களைத் தாக்கி நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

இரும்புச்சத்து மாத்திரைகளை 14 நாட்களுக்கு எந்த விதமான பிரச்சினையுமில்லாமல் சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிட வேண்டுமென்றால், மருத்துவரின் அனுமதியோடு, அவரின் தொடர்ந்த மேற்பார்வையுடந்தான் உபயோகிக்கலாம்.

ஒரு நல்ல உணவுமுறை வல்லுநர் இரத்தத்தில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் கூட எந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடவேண்டும் என்பதை உங்களுக்குக் கூற முடியும். இதுதான் மிகச்சிறந்த முறையும் கூட. அவசர காலத்தில் உடனே கூட்ட ஒரு சில நாட்களுக்குச் சாப்பிடலாம்.

இரும்புச்சத்து மற்றும் அலுமினியம் உரிஞ்சப்படிவதற்கு வைட்டமின் சி யின் தேவையையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இரும்புச்சத்து மாத்திரைகள் குழந்தைகளுக்கு விஷம். ஆகையால் மாத்திரைகளை எங்காவது பூட்டி வைக்க வேண்டும்.

Monday, October 4, 2010

வர்த்தகம் மற்றும் தொழில்துறை செழிக்க இது சுங்கவரி நீக்கப்பட்ட இடமாக இருந்து இந்தியாவிற்கு அளவில்லா வளத்தைக் கொண்டு வர வேண்டும்.

ராமர் தீவு கீழக்கரையின் தெற்குப் பக்கத்தில் ஆரம்பித்து தேவிப்பட்டிணம் தாண்டி கடலில் சேர வேண்டும். இது ஒரு நேரான கால்வாயாக இருப்பதால் பலவித அனுகூலங்கள் இருக்கின்றன. கட்டுவது, பாதுகாப்பது, பராமரிப்பது எளிதானது. கப்பல் பிரயாணத்திற்கும் சிறந்தது. சிங்கப்பூரோடு இணைத்துப் பார்க்கும் பொழுது ராமர் தீவுக்கு இந்தக் கால்வாயின் இரு பக்கங்களிலும் வசதியிருக்கிறது. கால்வாய்க்கு மறு பக்கத்திலிருக்கும் இடங்களில் தொழிற்சாலைகள் மற்றும் ராமர் தீவுக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளையும் உண்டாக்கலாம், ஒழுங்கு படுத்தலாம். இதனால் இந்தத் தீவு எந்த விதப் பிரச்சினையும் இல்லாத நமது உலகின் நந்தவனமாக மாறும் வாய்ப்பும் இருக்கிறது என்று நினைத்தான் ராமன்.

இங்குள்ள இயற்கை வளங்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் உண்டாக்கக்கூடாது. இங்குள்ள பூமி மட்டுமில்லாமல் கடலிலுள்ள செடி, கொடி மற்றும் மரங்களிலிருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் பாதுகாக்கப்பட்டு வருங்காலத்திலும் இப்பொழுதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டும். தனித்தன்மை வாய்ந்த இங்கு இருக்கும் இயற்கையான இடங்கள், கடல் இதனால் எப்பொழுதும் பாதுக்கக்கப்படும் என்று எண்ணினான் ராமன்.

குயின்மேரி-2 மற்றும் வேறு உல்லாசக் கப்பல்களிலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான உல்லாசப் பிரயாணிகள் அவன் கண்கள் முன்பு வந்தார்கள். அங்கிருந்து அவர்கள் மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கன்னி, நாகூர் மற்றும் தஞ்சாவூருக்கு பஸ்களில் இடங்களைப் பார்க்கப் போகிறார்கள். இதனால் தெற்குத் தமிழ்நாட்டில் மற்றும் கேரளாவில் அதிக வேலை வாய்ப்புகள் உண்டாக வழி உண்டாகிறது. இதன் நல்ல விளைவுகள், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் இங்கு வேலை செய்ய வருவார்கள். நாட்டின் ஒற்றுமை கூடும். மேலும் சென்னையின் மக்கள், தொழில் அடர்த்தியை மிதப்படுத்துவதற்கும் இது உதவும். ஆனால் இவற்றிற்கிடையில் ராமர் தீவு புனிதமான, திவ்யத்தன்மை வாய்ந்த இடமாக என்றும் நிற்கும்.

அதே நேரத்தில் இந்த ராமர் தீவு அன்புடன் நேசிக்கும் அனைவருக்கும் மிக அருகிலேயே இருக்கும் என்று எண்ணினான் ராமன். திட்டம் போட்டுக் கட்டப்பட்ட இந்தத் தீவில் பழமையையும் புதுமையையும் இணைக்கும் பொழுது அவை சமாதானமாகச் சேருவது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணியது அவன் மனம்.

பவளப் பாறைகள், பலவித நிறமான மீன்கள், நடனமாடும் டால்பின்கள் இந்த இடங்களில் எப்பொழுதும் இருக்க வழி உண்டாகும். இது உலகிலுள்ள உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்கமாக மாறும். உயிரினங்களின் வளர்ச்சியைப் பற்றி முதன் முதலில் உண்டான ஒரு முதுகெலும்பு விலங்குடன் குருசடைத் தீவு உலகிலுள்ள எல்லா உயிரியல் மாணவர்களுக்கும் எப்பொழுதும் மெக்காவாக இருக்கும்.

நமது இந்தியக் கடற்கரை 7517 கி.மீ. நீளமானது. ஒவ்வொரு 50 கி.மீ. க்கு ஒரு துறைமுகம் இருக்கவேண்டும் என்று அவன் கனவு கண்டான். அதில் மீன் பிடிக்கும் விசைப்படகுகளுக்கும், டிராலர்களுக்கும், கடல் விளையாட்டிற்கும் மற்றும் வர்த்தகக் கப்பல்களுக்கும் இடமிருக்கவேண்டும். ஆனால் அதில் பெரும்பகுதி பலவிதத்திலும் உபயோகப்படும் ஒரு நவீன வர்த்தகத் துறைமுகமாக இருக்கவேண்டும் என்பது ராமனின் கனவு. மூன்று அல்லது நான்கு மீனவர்களுக்குச் சேர்ந்து ஒரு விசைப் படகை கொடுக்கலாம். ஒவ்வொரு மீனவக் கிராமத்திற்கும் ஒரு ஆழ்கடல் மீன்பிடிப்புக் கப்பல் இருக்கவேண்டும்.

கடலில் காற்றிலிருந்து மின்சார உற்பத்திக்கான பெரிய காற்று விசிறிகளுக்குள்ள பூங்காக்கள், கடல் நீரைக் குடிதண்ணீராக மற்றும் தொழிற்சாலைகள் இவைகளெல்லாம் இந்தியர்களின் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் உயர்த்தும் என்று நம்பினான் ராமன். இந்தத் திட்டத்தினால் அனைவருமே வெற்றியடைவார்கள் என்ற எண்ணம் அவனுக்கு உறுதியானது.

காலை மணி 7 ஆகிவிட்டது. கீதா எழுந்து தன்னைத் தயார் செய்துவிட்டாள். ஆனால் ராமன் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான். இல்லை, இன்னும் கனவு கண்டு கொண்டிருந்தான். அவனது அழகான ஆனால் மர்மமான சிரிப்பும் எப்பொழுதும் அவனது உதடுகளில் தெரிந்தது. கீதா அவளது தலையணையை எடுத்து, அவனது மூக்கு நுனியைத் தொட்டாள். அவன் கண்களைத் திறந்தான். அவனுக்கு முன் அழகான சிரித்த முகத்துடன் நின்ற கீதாவை அவன் பார்த்தான்.

"உங்கள் டிக்கட்டும் வந்துவிட்டது. முற்பகல் 11.30 மணிக்கு மதுரை விமானம் இங்கிருந்து புறப்படுகிறது", என்றால் கீதா.

அவன் அவளை நன்றாகப் பார்த்தான். "காலை வணக்கம் கீதா. காலை உணவிற்கு நீ மாத்திரம் போ. எனக்கு ஒரு முக்கியமான வேலையை முடிக்க வேண்டியதிருக்கிறது", ராமன் கூறினான்.

இதுவரை அவளை நீங்கள் என்று அழைத்த ராமன் இக்கணம் அவளை நீ என்று சுருக்கியத்தை உணர்ந்தான். உடனே அவன் தொடர்ந்து மன்னிக்கவும் என்று சொல்லவும் கீதா சட்டென்று "நீங்கள் என்னை இப்படி உரிமையுடன் கூப்பிடுவதே எனக்குப் பிடித்திருக்கிறது", என்று கூறி அவனது குற்ற உணர்ச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்.

"என்னைவிட அந்த வேலை முக்கியமா?" கீதா அவனைக் கேட்டாள்.

அவனும் ஆமாம் என்று தலையை அசைத்தான். அவளுக்கு ஒரே ஏமாற்றமாக இருந்தது. ஆனால் ஒரு பதிலும் சொல்லாமல் அவள் அறையை விட்டு வெளியேறினாள்.

"அவள் நல்ல கொபத்திளிருக்கிறாள்", ராமன் நினைத்தான். "நாளைக்கு எல்லாவற்றையும் என்னால் அவளிடம் விளக்கமாகக் கூற முடியும்", என்று எண்ணி தனது மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டான்.

காலை உணவு அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த கீதாவுக்கு ராமன் ஏன் ஆவலுடன் சேர்ந்து சாப்பிட விரும்பவில்லை என்பது புரியாத புதிராக இருந்தது. ஆண்களுக்கு எதிலாவது விருப்பம் இல்லாவிட்டால் அதை முக்கியமான வேலை இருப்பதாகக் கூறித் தட்டிக்கழித்து விடுகிறார்கள். இதற்கு ராமனும் விதிவிலக்கில்லை என்று எண்ணினாள்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Friday, October 1, 2010

இந்தத் தீவு எப்படியிருக்கும் என்று எண்ணினான். கீழக்கரையிலிருந்து தேவிப்பட்டிணம் வரை சென்ற கால்வாயினால் உண்டாகப் போகும் பெரிய தீவைப் பற்றி எண்ணினான். இந்த நல்ல பெரிய தீவிற்கு ராமர் தீவு என்ற பெயர்தான் மிகவும் பொருத்தமானது என்ற நினைத்தான். எந்தெந்த ஊர்கள் இந்தத் தீவில் இருக்கும் என்று நினைத்துப் பார்த்தான். அதை பற்றி அறிய அவன் நினைத்து ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டியிருந்தது. இறுதியாக அவனுக்கு அந்த இடங்கள் ஞ்யபகத்திற்கு வந்தன. கீழக்கரை, முத்துப்பேட்டை, ராமநாதபுரம், மண்டபம், இருமேனி, பானல்க்குளம் மற்றும் தேவிப்பட்டிணம்தான் இந்தத் தீவில் இருக்கும் முக்கியமான ஊர்கள்.

கழுத்திலிருக்கும் ஒரு தங்க ஆபரணத்தில் தொங்கும் டாலரில் உள்ள அழகான மினுமினுக்கும் வைரக்கர்களைப் போல் பக்கத்து தீவான ராமேஸ்வரமும், பாம்பனும் இந்த ராமர் தீவின் மற்ற நகரங்களாகும் என்று எண்ணினான் ராமன்.

ராமர் தீவு முழுமையாக அவன் மனதில் உருவாகிவிட்டது. இது வரப்போகும் வல்லரசான இந்தியாவிற்கு தங்க முட்டையிடும் வாத்தாக உருவாக்கப்படவேண்டும் என்று எண்ணினான் ராமன்.

இந்தியாவில் எத்தனையோ சிறந்த இன்ஜினீயர்கள் இருக்கிறார்கள். இவர்களால் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நம்பினான். தேவைப்பட்டால் வெளிநாட்டு நிபுணர்களையும் இந்தக் குழுவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் எண்ணினான். இது மலைகள் இல்லாத இடத்தில் ஒரு கோடு மாதிரி நேராக வெட்டப்பட வேண்டிய கால்வாய். ஆகையால் அதிக பிரச்சினைகளில்லாமல் தோண்டலாம் என்று எண்ணினான் ராமன். அவனது கனவு தொடர்ந்து கொண்டேஇருந்தது. ராமர் தீவின் எல்லைகள் அவனது மனதில் உருவாக உருவாக அவை அதன் அளவையும் பெருமையையும் காட்டின. இது ஒரு சுங்கவரியில்லாத தீவாக இருக்க வேண்டும். பொருளாதாரம் இங்கு செழித்துக் கொழிக்க வேண்டும். போதிய அளவில் நல்ல குடி தண்ணீரும், மின்சாரமும் இருக்கவேண்டும். மேலும் மிகச் சிறந்த பள்ளிக்கூடங்களும், பல்கலைக்கலகங்களும் அங்கு உருவாகவேண்டும் என்று எண்ணினான். விளையாட்டும், இசையும் அங்கு குடிவர வேண்டுமென்றும் விரும்பினான் ராமன்.

இந்தப் பகுதியிலுள்ள ஊர்களில் பல கோவில்கள் இருப்பதாக அவன் படித்திருக்கிறான். இவைகள் இதனால் இன்னும் பலனடைந்து பிரபலமாகும். ராமர் தீவு தமிழ்நாடு முழுவதற்கும் பலவித முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது அவனது நிச்சயமான நம்பிக்கை. அங்கு உருவாகப்போகும் பிரம்மாண்டமான துறைமுகத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைந்தான் ராமன். அங்கு வரப்போகும் குயின்மேரி-2 போன்ற பெரிய கப்பல்களையும், அது போன்ற மற்றும் பல உல்லாசக் கப்பல்களில் அந்தத்தீவிற்கு வந்து ரசிக்கப்போகும் ஆயிரக்கணக்கான உல்லாசப்பிரயாணிகளைப் பற்றியும் அவன் மனம் அசை போட்டது. அதைப் பற்றிய நினைவுகளில் அவன் தன இனிமையான கனவில் ஆழ்ந்தான்.

தேவையான அளவு கடல் தண்ணீரைக் குடிதண்ணீராக மாற்றலாம் என்று எண்ணினான். துறைமுகத்தின் ஒரு கடைசியில் மீனவர்கள் இதை உபயோகிப்பார்கள். மறுகடைசியில் எல்லாவித நீர்விளையாட்டுகளுக்கான படகுகள், உல்லாசக்கப்பல்கள் வர வசதி இருக்கும். மொனாக்கோ அல்லது ப்ளோரிடாவிலுள்ளது போல ராமர் தீவும் உலகத்தில் உள்ள முக்கியமான இடமாக வரும். இங்கு பெருமளவில் வர்த்தகமும் நடக்கும். இங்கு காட்டப்படும் கட்டடங்கள் மிக உயரமாக இருக்கக்கூடாது. 5 மாடிகளுக்கு மேல் இருக்கக்கூடாது என்று நினைத்தான். தீவின் ஒரு ஓரத்தில் 700 மீட்டர் உயரத்தில் ஒரு செயற்கை மலையை உண்டாக்க வேண்டும். தீவு முழுவதும் பலவித மரங்களை எங்கும் நடவேண்டும். அது ஒரு நீலனிரக்கடளுக்கு நடுவில் இருக்கும் ஒரு பசுமையான தீவாக வேண்டும் என்று எண்ணினான் ராமன்.

ராமர் தீவில் உருவாக்கப்படும் மியூசியம்கள், பொருட்காட்சிகள் கடலுக்கு கீழேயுள்ள பூங்காக்கள் மற்றும் இசை அரங்கங்கள் எல்லாமே உலகிலேயே மிகச் சிறந்ததாக இருக்கவேண்டும். நிபுணர்கள் இதைப்பற்றி என்னைவிட மிகநல்ல முறையில் திட்டம் போட்டு நிறைவேற்றமுடியும் என்று நம்பினான். விளையாட்டு, கல்வி மற்றும் கலாச்சாரத்தின் உச்சநிலை அங்கு நிலவவேண்டும். அங்கு வாழும், வரும் மக்கள் தங்களுடைய தினசரி பிரச்சினைகளான ஜாதி, மதம் மற்றும் இனத்தைப் பற்றி மறந்துவிட்டு அமைதியாக, இன்பமாக இணைந்து வாழவேண்டும். எல்லோரும் அவர்கள் விரும்பியபடியே கடவுளைக் கும்பிடலாம்.

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அவர்களுடைய திருவிழாக்களை, பண்டிகைகளை அவர்கள் விரும்புவது போல கொண்டாடலாம். மனிதர்களுக்கு மதம், தனிப்பட்ட குடும்பம் மற்றும் சமுதாயத்தோடு இணைந்து போவதாக இருக்க வேண்டும். எல்லா மதங்களும் வழங்கும் அளவில்லா அன்பு நமது மதப்புத்தகங்களில் இல்லாமல், மனிதர்களின் மனதிலும் பதிக்கப்பட்டு இங்கு நடைமுறையிலும் செயல்பட வேண்டும். கீழக்கரையில் உள்ள இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி நல்ல முறையில் தமிழ்நாடு முழுவதுமே அறியும். இங்கு தேவாலயங்களுக்கும் தகுந்த இடங்கள் உள்ளன.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Thursday, September 30, 2010

எல்லாச் செய்திகளையும் வாசிப்பது ராமனின் வழக்கம். சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய பல அரசியல் வித்தைகளையும் அவன் ஆழ்ந்து படித்திருக்கிறான். இந்தத் திட்டம் நிறைவேறவேண்டும் என்பது அவனது விருப்பம். மேலும் இந்தியன் என்ற முறையில் ராமர் பாலத்தை அளிப்பதையும் அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. எல்லோரும் ஒரு நல்ல சமரசத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இதனால் மிக நல்ல விளைவுகள் ஏற்படும் என்றே கருதினான். ராமர் பாலத்தை ஒட்டி ஒரு சிறு கால்வாய் வெட்டுவதை ராமன் ஒரு வேடிக்கை என்றே கருதினான். இதற்கு எடுக்கப்படும் முடிவு நல்லததாகவும், மிகச் சிறந்ததாகவும், உலகில் வேறு எங்கும் இல்லாத தனித்தன்மை உள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினான். பலவித மக்களையும் அன்புடன் அணைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் சிங்கப்பூரைப் பற்றி எண்ணினான். "நான் அதற்கான பதிலைக் கண்டுபிடித்து விட்டேன்", என்று உரக்கக் கூறினான். அவனது மூளை பயங்கர வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. கடந்த 5 நாட்கள் சிங்கப்பூரில் நடந்தவையெல்லாம் அவன் கண்கள் முன்னாள் படம் போல ஓடின. அங்கிருந்த பல மிகச் சிறந்த காரியங்கள் சுத்தம், ஒழுங்கு, பல கலாச்சாரத்தினர், மதத்தினரும் இணைந்து வாழ்தல் மற்றும் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்ட எல்லாத் திட்டங்களும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன.

"ஒரு புதிய சிங்கப்பூர், இருப்பதை விட மேலான, உயர்ந்த சிங்கப்பூர் இங்கு உருவாக்கப்படுவதுதான் சிறந்த பதில்", எண்ணினான் ராமன். இது முன்னேறி வரும் இந்தியாவிற்கு நல்லது. மேலும் இது கீதாவுக்கும் நல்லது. ஏனெனில் இதை நிறைவேற்றி கீதாவிற்கு அர்ப்பணித்தால் பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் இந்த இந்தியச் சிங்கப்பூரைப் பற்றி பேசும், வாசிக்கும் பொழுதும் கீதாவைப் பற்றியும் நினைப்பார்கள் என்று எண்ணினான்.

"ஏன் இந்தியச் சிங்கப்பூர் என்று அழைக்கவேண்டும். நான் இதற்கு வேறு ஒரு புதுப்பெயரைச் சூட்ட விரும்புகிறேன். இதை ராமர் தீவு என்றே அழைக்கவேண்டும். ஆமாம், இந்த ராமர் தீவு, ராமர் பாலம் மற்றும் சேது சமுத்திரத் திட்டத்திலுள்ள எல்லாப் பிரச்சினைகளையும் ஒரேயடியாகத் தீர்த்துவிடும். அதே நேரத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியா வல்லரசாகவும் இதுவும் ஒரு பங்கு வகிக்கும். இதை சிங்கப்பூருடனும் அல்லது ஹாங்காங்குடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இந்தியாவில் ராமேஸ்வரத்திற்குப் பக்கத்திலிருப்பதால் இது தனிச் சிறப்பையும் பெற முடியும்", ராமன் எண்ணினான். அவன் இந்த இடங்களுக்கு இன்னும் போனதில்லை. ஆனால் அவனுக்குத் தமிழ்நாட்டின் பூகோள சாஸ்திரத்தைப் பற்றி நல்ல அறிவு இருந்தது. "கீதாவிற்கு இது எல்லாவற்றையும் விட உயர்ந்தது. ஏனெனில் அவள் அதைப் பார்க்க முடியும், ரசிக்க முடியும்", என்றும் எண்ணினான் ராமன்.

கீதா திடீரென்று எழுந்து கட்டிலில் உட்கார்ந்தாள். அவள் எங்கிருக்கிறாள் என்பது சிறிது நேரம் அவளுக்குப் புரியவில்லை. பக்கத்துப் படுக்கையில் படுத்திருந்த ராமனைப் பார்த்தாள். அவனது உதடுகளில் புன்முறுவலைக் கண்டாள். அவன் ஏதோ முனுமுனுப்பதைப் போல இருந்தது. அவளது காத்து அவனது உதடுகளை நெருங்கியது. அவனது உதடுகளிலிருந்து இன்பகரமான ஆச்சரியத்துடன் கீதாவின் பெயரைத்தான் ராமன் சொல்லிக்கொண்டிருப்பதை அவள் கேட்டால். அவனது முகத்தில் ஓடிய வசீகரமான, மகிழ்ச்சியுடன் கலந்த உணர்ச்சிகளையும் அவனது கவர்ச்சியான புன்னகையையும் அவள் மூன்று மணி நேரங்களுக்கு மேல் வைத்த கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டு எழுத ஆரம்பித்தாள்.

அன்புள்ள பப்பா,

நான் அவரை மிக அதிகமாகக் காதலிக்கிறேன். உங்களிடம்தான் இதை முதன்முதலாகத் தெரிவிக்கிறேன். அம்மாவிடமும் சொல்லிவிடுங்கள்.

உங்களிருவருக்கும் எனது அன்பைத் தெரிவிக்கிறேன்...

கீதா.

இன்னும் இரண்டு மணி நேரம் வேகமாக ஓடியது. அவள் ராமனின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவனது மனதில் என்னதான் அவ்வளவு முக்கியமானது ஓடுகிறது என்று எண்ணி ஆச்சரியப்பட்டாள்.

ராமன் கீழக்கரை மற்றும் தேவிப்பட்டிணத்தைப் பற்றி உடனே எண்ணினான். கீழக்கரைக்குக் கீழே மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருந்து தேவிப்பட்டிணம் தாண்டி மூன்று கிலோமீட்டர் வரை ஒரு கால்வாய் வெட்ட விரும்பினான்.

ராமனுக்கு இப்பொழுது ராமர் தீவு உருவாகிவிட்டது, பிறந்துவிட்டது.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Wednesday, September 29, 2010

"நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. நான் சென்னையில் தனியாகத் தங்க வேண்டியிருக்கிறது. நாம் நல்ல நண்பர்கள். நான் உங்களை என்னுடன் தங்குமாறு தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன். மேலும் நீங்கள் என்னை மதுரையில் எனது பாட்டியிடம் கொண்டு விட்டீர்கள் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்", என்றாள் கீதா அன்பாக.

இதுதான் ராமனின் வாழ்வில் அவன் முதன்முதலாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய நாள். அவன் கீதாவைப் பார்த்து அழகாகச் சிரித்தான். எனக்கு இந்த சுவாரசியமான வேலையைச் செய்ய எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று கூறி அவளுக்குச் சம்மதமளித்தான் ராமன். ராமனின் இரண்டு கரங்களையும் தனது கைகளில் எடுத்துக்கொண்டு மெதுவாக அழுத்தி அவள் அவனுக்கு நன்றி சொன்னாள். விமானம் சென்னையில் இறங்கி விட்டது. அவர்களுக்கிடையில் நடந்த இந்த சூடான விவாதத்தில் இருவருமே அதைக் கவனிக்கவில்லை.

கீதாவும் ராமனும் டாக்சியில் சென்று ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்தார்கள். அவள் தனது மனைவி என்று எழுதியதை அவள் அரைக் கண்ணால் கண்டு மகிழ்ச்சியடைந்தாள். அவர்கள் அறைக்குச் சென்றார்கள். அது ஒரு பெரிய அறை. அதில் தற்காலத்திலுள்ள எல்லா வசதிகளும் இருந்தன. ஆண், பெண்களுக்கான எல்லாத் தேவைகளையும் அளவுக்கதிகமாகவே எண்ணத்தில் கொண்டு வசதிகளைச் செய்திருந்தார்கள். கீதா மிகவும் சந்தோசமாக இருந்தாள். அவள் குளியலறைக்குச் சென்றாள். ராமன் சோபாவில் அமர்ந்தான். கண்களை மூடினான். விமானத்தில் அவளுக்கும் அவனுக்குமிடையில் தாஜ்மஹாலைப் பற்றிய உரையாடலை வார்த்தைக்கு வார்த்தை திரும்பவும் அசைபோட ஆரம்பித்தான். கீதா சொன்னது சரியே என்று அவனுக்குப்பட்டது. சிறப்பான முறையில் அவளுக்குச் செய்ய என்ன இருக்கிறது என்று யோசித்தான். மேலும் அந்தச் செயல் உலகத்தில் இதுவரை எங்கும் மேற்கொள்ளப்படாத ஒரு தனித்தன்மை வாய்ந்ததாக, சிறந்த செயலாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். அவளுக்குத் தான் காதலின் பெயரால் இந்த விதமாக ஒரு சிறந்த செயலைச் செய்ய முடியுமா என்று எண்ணியபோது அவனது மனதில் சஞ்சலமும் பயமும் உண்டானது.

கீதாவும் ராமனும் மெரீனா கடற்கரையில் உலாவினார்கள். கபாலீஸ்வரர் கோவிலில் இறைவனைத் தரிசித்தார்கள். இறுதியில் ராமனுடைய வீட்டிருகுச் சென்று அவனது பெற்றோரைச் சந்தித்தனர்.

"நீ இங்கு என்ன செய்கிறாய்? நீ சிங்கப்பூரில் இருந்து வருவதில் பிரச்சினை இருக்கிறது என்று நாங்கள் நினைத்தோம்", கேட்டார் ராமனின் தந்தை.

"இந்தப் பெண்ணைப் பார்த்துக் கொள்ளும் ஆயா வேலையை இப்பொழுது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்", என்று குறும்புப் புன்முறுவலுடன் கீதாவைச் சுட்டிக்காட்டினான்.

அவனது அம்மா திறந்த வாயை மூடாமல் கீதாவைப் பார்த்து, "வாம்மா", என்று கூறினாள்.

"இந்த அழகான பெண் உனக்கு எங்கிருந்து கிடைத்தால்?" கேட்டார் அப்பா.

"ஆயா வேலையை மிகவும் நல்ல வேலை என்று இப்பொழுதுதான் நன்றாக உணருகிறேன்", என்றார் அவர் புன்முறுவலுடன்.

"இன்று நாங்கள் ஹோட்டலில் தங்குகிறோம். நாளை காலை விமானத்தில் சென்று அவளைப் பத்திரமாக அவளது பாட்டியிடம் மதுரையில் ஒப்படைத்தபிறகு நான் சென்னை திரும்புவேன். அதன் பிறகு விளக்கமாக எல்லாவற்றையும் சொல்கிறேன் அப்பா", என்றான் ராமன்.

மெதுவாக அவனது தந்தை சரி என்று தலையை ஆட்டினார். ஆனால் அம்மா சத்தமாக சொன்னாள், "ஏன் நீங்கள் இருவரும் நமது வீட்டில் தங்கக்கூடாது? நமது வீட்டில் விருந்தினருக்காக ஒரு அறை இருப்பது உனக்குத் தெரியுமே".

"உனது மகனைப் பற்றி உனக்குத்தான் மற்ற எல்லோரையும் விட நன்றாகத் தெரியும். முடிவு எடுக்கப்பட்டு விட்டது. விமான டிக்கட்டும் எடுக்கப்பட்டுவிட்டது. நான் திரும்பி வந்ததும் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறேன் அம்மா", என்று சிரித்தபடியே பதிலளித்தான் ராமன்.

தயக்கத்துடன் அவனது அம்மாவும் சரி என்று கூறினாள்.

"நீங்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு போகலாமே", என்றாள் அம்மா.

"நேரம் வரும்பொழுது நீங்கள் எங்களுக்குத் தினமும் சமையல் செய்யலாம்", என்றான் ராமன்.

இதைச் சொல்லும் பொழுது அவனையுமறியாமல் சிரித்துவிட்டான். வேறு வழியில்லாததால் அவனது அம்மாவும் தலையை அசைத்துத் தனது சம்மதத்தைத் தெரிவித்தாள்.

"உனது மாமாவுக்குப் போன் பண்ணினாயா?" அப்பா கேட்டார்.

"இன்னும் பண்ணவில்லை, கட்டாயம் இன்று நான் போன் பண்ணுவேன்", பதிலளித்தான் ராமன்.

கீதாவும் ராமனும் ஹோட்டலை அடைந்தவுடன் சாப்பிட்டார்கள். அவன் தனது மாமாவுக்கும் அவள் தன் பெற்றோர்களுக்கும் போன் செய்தார்கள்.

"இப்பொழுது நான் எனது இரவு உடையை மாற்றிக்கொண்டு தூங்கப்போகிறேன். இதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கிறதா?" கேட்டாள் கீதா.

"இல்லை, நீங்கள் நிம்மதியாகப் படுத்துத் தூங்குங்கள்", என்று பதிலளித்துவிட்டு ஜன்னலைத் திறந்து வெளியே சென்னையின் இரவு அழகைப் பார்த்து ரசித்தான் ராமன்.

அவன் திரும்பிப் பார்த்த பொழுது கட்டிலில் கீதா தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் சிறிது வளைந்த, அழகான கொடி போன்ற உடலுடன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனும் படுக்கையில் மறுபக்கத்தில் படுத்தான். தூங்கும் முன் திரும்பவும் அவன் மிகவும் ஆழ்ந்து கீதாவுடன் தாஜ்மஹாலைப் பற்றிய உரையாடலை எண்ணினான் ராமன். முதல்முறையாகத் தன் வாழ்க்கையை வெறுத்தான் ராமன். இதே எண்ணங்களுடன் அயர்ந்து உறங்கிவிட்டான். அப்பொழுது அவன் ஒரு கனவு கண்டான். அது அவனுக்கும் கீதாவுக்கும் மட்டுமில்லாமல் இந்தியாவிற்கே சிறந்தது என்று எண்ணினான். இந்த சிறந்த கனவை நனவாக்கி கீதாவிற்குச் சமர்ப்பிக்க விரும்பினான் ராமன்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8