கீதாவும் ராமனும் வேகமாக இயங்கிக் கொண்டிருந்த சைனா டவுனைக் காரிலேயே சுற்றினார்கள். இந்தத் தனித்தன்மை வாய்ந்த இடத்தைப் பார்த்து அவர்களது மனம் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது. ஏதாவது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு அடுத்த இரண்டு நாட்களில் எதைப் பார்க்கலாம் என்று திட்டம் தீட்ட விரும்பினார்கள். அவர்கள் உணவை அனுபவித்துச் சாப்பிட்டார்கள். ஆனால் அதைவிட அவர்களின் உரையாடல் அவர்களுக்கு அதிக இன்பத்தையளித்தது. அவள் அவனைப் பற்றி எல்லாவற்றையும் அறிய விரும்பினாள். அவளது எல்லா கேள்விகளுக்கும் அவன் பொறுமையாக பதில் கூறினான். சில வேலைகளில் அவளது கேள்விகள் குழந்தைத்தனமாக இருந்தன. ஆனால் பல கேள்விகள் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்ததையும் மகிழ்ச்சியோடு ரசித்தான்.
அவளிடம் இந்தியர்களின் கூர்மையான அறிவும், ஆழமமான கலாச்சாரமும் குடியிருப்பதாக எண்ணினான். அவன் எழுந்து போக விரும்பியபோது அவள் தனது சந்தோசமான மின்னும் கண்களுடன் கேட்டாள் "ஏன் நாம் இன்னும் உட்கார்ந்து பேச்சைத் தொடரக் கூடாது?".
"நாம் பேசிக்கொண்டேயிருந்தால் உங்களால் எனக்குச் சிங்கப்பூரைச் சுற்றிக் காட்டவே முடியாது. இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு அவர்கள் நான் இங்கு பார்த்ததைப் பற்றிக் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்?", அவன் அவளைக் கேட்டான்.
"எனது பெற்றோர்கள் இங்கிருக்கிறார்கள். நாம் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம்", என்பதே அவளது குறும்பான பதில்.
"எதைப் பார்க்க விரும்புகிறீர்கள்?", அவள் கேட்டாள்.
"நீங்கள்தான் சொல்ல வேண்டும். உங்களுக்குத்தான் இங்கு எல்லாம் தெரியும்", சாந்தமாக அவன் பதில் கூறினான்.
"பிரச்சினையே இல்லை", என்று கூறிய கீதா கடகடவென்று சிங்கப்பூரில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி ஒப்பிக்க ஆரம்பித்தாள்.
"ஆர்மி மியூசியம், செஸ் ஹோ கப்பல் பயணம், கிலோசோ கோட்டை, குதிரைப் பந்தய மைதானம், லாபிரடோர் ரகசியச் சுரங்கம், மலேய் கிராமம், விளையாட்டுச் சாமான்களுக்கான மினட் மியூசியம், ஆர்சிட் தோட்டங்கள், சிவப்புப் புள்ளி நாகரீக மியூசியம், பலவிதமான சிங்கப்பூரிலுள்ள உல்லாசப் பயணங்கள், வண்ணாத்திப் பூச்சிப் பூங்கா, பறவைப் பூங்கா, மினி கோல்ப், இரவு சுற்றுப் பயணம், டைகர் டவர், சிங்கப்பூரின் கடலடி பொட்டானிகல் கார்டன், செங்கி மியூசியம், பல்கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள்", என்று அவள் அடுக்கிக்கொண்டே போனால்.
எல்லாவற்றையும் ஒழுங்காக பார்க்க வேண்டுமானால் ஒரு மாதம் இங்கு இருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.
"இரண்டு நாட்களில் என்ன பார்க்க விரும்புகிறீர்கள்? காரில் நாம் சிங்கப்பூர் முழுவதும் சுற்றுவோம். ஆனால் எங்காவது உட்கார்ந்து நிறையப் பேசுவோம்", என்றாள் கீதா.
அவளது சந்தோசமான கண்கள் நிறையச் செய்திகளைக் கூறுவதாக அவன் எண்ணினான். ஆனால் அவை கூறுவது அவனுக்கு விளங்காததால், புதிராகவே இருந்தது. அவளைச் சந்தித்து இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவளே எல்லா முடிவுகளையும் எடுக்கத் தொடங்கி விட்டால் என்று என்னும்பொழுது அவனையுமறியாமலேயே புன்னகையும் வந்தது.
"இதோ பாருங்கள், என்ன வேண்டுமானாலும் முடிவு செய்து கொள்ளுங்கள். நான் இங்கு இருக்கும் இரண்டு நாட்களையும் உங்களுக்குப் பரிசளிக்கிறேன்", என்றான் ராமன் ஒரு தாராளப் புன்னகையுடன்.
"உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. எந்தவிதாமான நிபந்தனையும் இல்லாமல் வாக்குக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது", என்று சொன்ன கீதாவின் கண்கள் அவனைப் பயப்படுத்தும் நோக்கத்தோடு இருப்பதைப் போலக்காட்டின.
"இந்த அபாயத்தைத் தெரிந்துதான் நான் அப்படிச் சொன்னேன்", என்று தனது வழக்கமான, கவர்ச்சியான புன்முறுவலுடன் அவளுக்குப் பதிலளித்தான்.
அவன் அவளை விரும்புகிறான் என்ற உணர்ச்சியனால் அவள் மிக மகிழ்ச்சியாக இருந்தாள். காரில் அவர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள்.
என்னுடைய அறைக்குப் போய் எல்லாவற்றையும் பேசலாம். மறந்து விடாதீர்கள், நான் சொல்வதையெல்லாம் நீங்கள் கேட்க வேண்டும், என்றாள் கீதா பளிச்சென்று.
ஒரு குழந்தையைப் போல் சந்தோசத்தில் மின்னும் அவளுடைய கண்களைக் கவனித்தான். அவன் பதிலளிக்காமல் அவளைப் பின்தொடர்ந்தான். அவளது அரை எல்லா விதத்திலும் முழுமையாக இருந்தது. அங்கு ஒரு இளம்பெண் கனவு காணக்கூடிய, மனதிற்கும் உடம்பிற்கும் மகிழ்ச்சியைத் தரும் எல்லாம் இருந்தன.
"சில நாட்களில் இங்கிருந்து போகப் போகிறீர்கள் என்று எண்ணினேன். ஆனால் உங்கள் அறையைப் பார்த்தபின் எனக்கு நீங்கள் இங்கு பெரிய மரம் போல ஆழமாக உங்கள் வேர்களைப் பதிப்பது போல் தெரிகிறது", என்றான் ராமன்.
"இது எனது தந்தையின் விருப்பம். நான்தான் எப்பொழுதும் இங்கு வரமுடியும் என்று உங்களிடம் முன்பே கூறிவிட்டேனே", என்று பதிலளித்தாள் கீதா.
"இப்பொழுதுதான் நாம் முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசப் போகிறோம். திருமணத்தைப் பற்றியும், குடும்ப வாழ்க்கையைப் பற்றியும் உங்கள் கருத்து என்ன?", அவள் கேட்டாள்.
மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8
Thursday, September 2, 2010
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
இடுகையிட்டவர்:
Dr. K. Padmanaban, Ph.D.
9:21 AM
இது வரை
-
▼
2010
(37)
-
▼
September
(6)
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
-
▼
September
(6)