"இந்தக் கேள்வியை என்னிடம் 5 ஆண்டுகள் கழித்து நீங்கள் கேட்கவேண்டும். அப்பொழுதுதான் இதற்குச் சரியான பதிலை நான் கூறமுடியும்", என்றான் ராமன் ஒரு சிறு சிரிப்புடன்.
"நீங்கள் பேச்சின் சுவாரசியத்தையே கெடுத்துவிட்டீர்கள். மேலும் மற்றவர்களுடன் இவற்றைப் பற்றி பேசும் பொழுதுதான் புதிய எண்ணங்கள் உருவாகும். சொல்லுங்கள், நாம் அதைப் பற்றிப் பேசுவோம்", என்றாள் கீதா.
"பேசுவோம், ஆனால் எனது டாக்டர் பட்டத்தைப் பெற்ற பிறகுதான் கல்யாணம், குழந்தைகள், குடும்பம் என்ற விஷயத்தைப் பற்றி முடிவெடுக்க நான் விரும்புகிறேன்", என்றான் அவன்.
"நீங்கள் ஒரு பெண்ணைக் காதலித்தால் என்ன செய்வீர்கள்?", என்றால் அவள் தனது குறும்பான கண்களுடன்.
"நான் அவளை அன்புடன் சில வருடங்கள் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்வேன். அதற்குச் சம்மதிப்பதோ அல்லது மறுப்பதோ அவளுடைய முடிவு. அவளுக்காகச் சில வருடங்கள் காத்திருப்பதில் எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை", என்று பதிலளித்தான் ராமன்.
ஐந்து நிமிடப் பழக்கத்திற்குப் பிறகு பாலியல் உறவைப் பற்றித் தன்னுடன் பேச விரும்பிய பல இளைஞர்களைப் பற்றி அவள் நினைத்தாள். இவன் மற்றவர்களை விட மிகவும் வேறுபட்டவன். இதுதான் என்னைக் காந்தம் போல் அவனிடம் ஈர்க்கிறது. அவனைப் பற்றிய எனது எண்ணங்களை என்னால் கட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ முடியவில்லை. இந்த சிந்தனையுடன் அவள் மௌனமாகி தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை மறந்துவிட்டால். ராமன் அவளை உற்று கவனித்துக் கொண்டிருந்தான். 15 நிமிடங்களுக்குப் பிறகு ஹாலில் காத்துக் கொண்டிருக்கும் அவளது பெற்றோரிடம் போவோம் என்று அவன் கூற, மெதுவாக இருவரும் அவளது அறையிலிருந்து கிளம்பினார்கள்.
அருணாச்சலம் அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டார். ஆனால் இன்று அவர்களிடமிருந்து மிகக் குறுகிய பதில்களே அவருக்கு கிடைத்தன. தனது மகளின் கையில் அவர் ஒரு கவரைக் கொடுத்தார். அதை அவள் மெதுவாகத் திறந்து பார்த்தாள். அவள் முகத்தில் பளிச்சென்று உண்டான சந்தோசத்தை அவனால் நன்கு பார்க்க முடிந்தது.
"பப்பா மிகவும் நன்றி", என்று கூறி அருணாச்சலத்தின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். "அம்மா, நாம் இப்பொழுது சாப்பிடுவோம். அதன் பிறகு ராமன் அவரது ஹோட்டலுக்குச் சென்று ஓய்வெடுக்கட்டும். நாளை ஒரு மிகவும் கடினமான நாளாக இருக்கும்", என்றாள் கீதா தனது கண்களைச் சிமிட்டிக் கொண்டே. அவளது குரலும் மிக்க மகிழ்ச்சியாக ஒலித்தது. அவன் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்னாள் அருணாச்சலம் அவனிடம் ஒரு கவரைக் கொடுத்தார். ஆனால் அதை நாளைக் காலையில்தான் திறந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு ஹோட்டலுக்குப் புறப்பட்டான் ராமன். இப்பொழுதுதான் நான் முன்பிருந்த ராமனே இல்லை என்று நினைத்தான்.
அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் மேலோட்டமாக சிங்கப்பூரில் ஏறக்குறைய எல்லாவற்றையும் பார்த்தார்கள். அதிக கவனம் செலுத்தாதற்குக் காரணம் அவர்கள் இருவருமே அவர்களுடைய எண்ணங்களிலும், உணர்ச்சிகளிலும் மூல்கியிருந்ததுதான்.
"உங்களுக்கு அப்பா கொடுத்த கவரில் என்ன இருந்தது?", கீதா கேட்டாள்.
"தொங்கும் கேபின் காரில் வைத்துச் சாப்பிட இரண்டு டிக்கெட்கள் எனது கவரில் இருந்தன", என்றான் அவன் சிரித்த முகத்துடன்.
"உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம்", முணுமுணுத்தாள் கீதா.
"உங்கள் கவரில் என்ன இருந்தது?", ராமன் கேட்டான். ஆனால் அவனது கேள்விக்கு அவள் பதிலளிக்கவில்லை. அது தனது ரகசியம் என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
ராமன் தனக்குக் கிடைத்த கேபின் கார் விருந்தைப் பற்றி மேலும் விவரித்தான்.
"இந்த விருந்து கடலுக்கு 110 மீட்டருக்கு மேல் கேபின் காரில் நடக்கும். ஒவ்வொரு கேபினிலும் நான்கு பேர் உட்கார முடியும்", என்றான் அவன்.
"யார் கண்டார்கள்? நமது கேபினில் இரண்டு மகா வயதானவர்களும் வரலாம்", என்றாள் கீதா நக்கலாக.
ராமனுக்கு நடப்பதெல்லாம் கனவு போலவே இருந்தது. இந்தச் சனிக்கிழமை அவன் கீதாவுடன் விருந்துண்பான், அவளைக் கொண்டு போய் வீட்டில் இறக்கிவிடுவான், அவளிடமும் அவளது பெற்றோர்களிடமும் விடை பெற்றுக்கொள்வான் என்று எண்ணினான். அவன் அவளிடம் நிறையச் சொல்ல விரும்பினான். அதற்கான சரியான வார்த்தைகள் அவனுக்கு உதிக்கவில்லை.
இளம் ஜோடிகளுக்கு அன்பான, ஆசையான அந்த உணவு மிகப்பிரமாதமாக இருந்தது. அவர்கள் அந்த ருசியான உணவையும், அவர்களுக்கு கீழே மற்றும் சுற்றிலும் இருந்த அருமையான காட்சிகளைக் கண்டுகளித்தனர். இது அவர்களுக்கு வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இருப்பதைப் போன்ற உணர்ச்சியை உண்டாக்கியது. அவர்கள் எல்லாவற்றைப் பற்றியும் பேசினார்கள். அவளை அவன் நேராகப் பார்க்கும் பொழுது அவள் கண்களிலிருந்த அளவில்லா அன்பை அவனால் உணரமுடிந்தது. அவர்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்னால் கீதா காலியாக இருந்த இடங்களைச் சுட்டிக்காட்டி ஏன் ஒருவரும் இந்த இடங்களுக்கு வரவில்லை என்று சர்வரிடம் கேட்டாள். அவன் தனது தாளைப் பார்த்து விட்டு அதை எடுத்திருந்து அருணாச்சலம் குடும்பம் வரவில்லை என்று தெரிவித்தான். இந்த இன்பமான மாலை நேரத்திற்காக தனது தந்தைக்கு மனதிற்குள் கீதா நன்றியைத் தெரிவித்தாள்.
ராமன் கீதாவை அவள் வீட்டில் இறக்குவிட்டான். அவளது தந்தையோடு தேநீரையும் குடித்தான். மிக மகிழ்ச்சியான கேபின் கார் விருந்திற்குக் கீதாவுடன் வழி செய்ததற்காக அவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தான். ஆனால் அருணாச்சலத்தின் முகத்திலிருந்து அவரது மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அவனால் அறிந்து கொள்ளமுடியவில்லை. இரவு 10 மணிக்கு எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு தனது அறைக்குத் திரும்பினான் ராமன். தனது அறையில் தனியாக உட்கார்ந்துகொண்டு முக்கியமான எதையோ இழந்துவிட்டேன் என்று எண்ணினான். கீதா இல்லையே என்று கஷ்டப்படுகிறேனா? அவன் தன்னைத்தானே எரிச்சலுடன் கேட்டுக்கொண்டான்.
"நிச்சயமாக வருத்தப்படுகிறாய்", என்பதுதான் அவனது மனதிடம் இருந்து வந்த பதில். அவனது உணர்ச்சிகள் குழம்பிக்கிடந்தன. கடந்த சில நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள் அவனுக்கு எந்தவிதமான முடிவையும் கொடுக்கவில்லை. அவன் சஞ்சலம் அடைந்ததுதான் மிச்சம். பிறகு குளித்துவிட்டு நிம்மதியாகத் தூங்கினான் ராமன்.
மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8
Tuesday, September 7, 2010
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
இடுகையிட்டவர்:
Dr. K. Padmanaban, Ph.D.
2:46 PM
இது வரை
-
▼
2010
(37)
-
▼
September
(6)
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
-
▼
September
(6)