மறுநாள் காலை 7.5 மணிக்கு ராமன் எல்லாவற்றையும் முடித்து விட்டுத் தயாராகிவிட்டான். 10 மணிக்கு அவனது விமானம் சென்னையில். அதன் பிறகு 4 மணி நேரத்தில் இருப்பேன் என்று எண்ணினான். ஒரு டாக்சியில் ஏறி விமான நிலையத்தை அடைந்தான். கீதா பக்கத்தில் இல்லாதது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தனது வாழ்வில் கடந்த 4 நாட்கள்தான் மிகவும் சிறந்தது என்று நினைத்தான். அவனிடம் அவளுடைய மெயில் விலாசம், செல்போன் நம்பர் இருந்தாலும் நல்ல நாட்களெல்லாம் முடிந்துவிட்டது என்றே எண்ணினான். பெட்டியைக் கொடுத்துவிட்டு விமான நிலையத்தின் உள் பகுதியை அடைந்த உடனேயே அவனது கண்களுக்கு எங்குமே கீதாவகத்தான் தெரிந்தது. அவனுடைய இடம் விமானத்தின் நடுவில் இருந்தது. இருக்கையில் அமர்ந்து கண்களை மூடினான் ராமன்.
ராமன் திரும்பவும் கண்களைத் திறந்த பொழுது அவன் மேகத்திற்கு மேல் இருந்தான். சிரித்த முகத்துடன் அவனிடம் வந்த விமானப் பணிப்பெண் ஒரு துண்டுக் கடிதத்தை அவனிடம் கொடுத்தாள். அதை பிரித்துப் பார்த்தான் ராமன். அதில் நான்கே வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. "நானிருக்கும் இடத்திற்கு வாருங்கள், கீதா". புன்னகையுடன் அவனைப் பத்தாவது வரிசைக்கு செல்லுமாறு அந்த விமானப் பணிப்பெண் கூறினால். ஒரே ஓட்டத்தில் அவன் 10வது வரிசையை அடைந்தான். எப்பொழுதும் போல் அழகான நீல நிறச் சேலையில் அங்கு அமர்ந்திருந்தாள் கீதா. அவன் அவள் அருகில் உட்கார்ந்தான். அவளது கையை தனது கையில் எடுத்துக் கொண்டு தான் இப்பொழுதுதான் அதிக சந்தோசமாக இருப்பதாகக் கூறினான்.
"உங்களைவிடச் சந்தோசமாக இருக்கும் இன்னொருவரை எனக்குத் தெரியும்", என்று கூறிக்கொண்டிருக்கும் பொழுது அவளது ஆள் காட்டி விரல் அவளையே சுட்டிக்காட்டியது.
"நான் உங்களுடன் பிரயாணம் செய்ய விரும்பினேன். எனது அன்பு பப்பா எனது விமானச் சீட்டை மாற்றிக் கொடுத்தார்", பெருமையுடன் சொன்னால் கீதா. "இன்னும் ௪ மணி நேரம் நமக்கு இருப்பதால் நாம் எல்லாவற்றைப் பற்றியும் பேசலாமே", அவனை ஈர்க்கும் கவர்ச்சியான சிரிப்புடன் கூறினால் அவள். அவள் கையிலிருந்து தனது கையை இழுத்துக் கொண்டான் ராமன். அவள் அவனைப் பார்த்து புன்முறுவல் செய்து கொண்டே இருந்தாள்.
"தாஜ்மஹாலை உங்களுக்குப் பிடிக்குமா?" திடீரென்று கேட்டாள் கீதா.
"ஆமாம், அது உலகத்திலுள்ள அதிசயங்களில் ஒன்று. மேலும் புனிதமான காதலின் சின்னமும் கூட", ராமன் பதிலளித்தான்.
"நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஷாஜகான், மும்தாஜ் உயிரோடு இருந்த பொழுதே ஏதாவது நல்லது செய்திருக்கலாம். இந்த அன்பின், காதலின் சின்னத்தை அவள் பார்க்கவேயில்லையே. நான் உயிரோடு இருந்த பொழுதே எனது கணவனிடமிருந்து மிக நல்லதை எதிர்பார்க்கிறேன். இல்லாவிட்டால் இந்த சிறந்த பரிசின் பெருமை எனக்கு எப்படித் தெரியும்", என்றாள் கீதா புன்னகையுடன்.
"இது ஒரு மிகச் சிறந்த எண்ணம். நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்", என்றான் அவன் ஒரு மர்மமான புன்னகையுடன். அவளுடைய பெரிய அழகான கண்களால் அவள் அவனை நோக்கினாள்.
"நிச்சயம்?" கீதா கேட்டாள்.
"100% நிச்சயம். அதிசயங்கள் மிக அபூர்வமாகத்தான் நடக்கின்றன. ஏன் உங்களுக்கு யோகம் இருக்கக்கூடாது", என்றான் அவன் எந்தவித உணர்ச்சியுமில்லாத குரலில். அவள் கண்களை மூடிக்கொண்டு அவன் தன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
"சென்னையில் எங்கு தங்கப் போகிறீர்கள்? எங்களுடைய வீட்டிற்கு வந்து தங்குங்களேன் . மதுரைக்கு விமானம் நாளைக்குத்தானே போகிறது?" கேட்டான் ராமன்.
"நான் உங்கள் வீட்டில் இன்று தங்கப் போவது இல்லை. உங்கள் வீட்டிற்கு வந்து எல்லோரையும் பார்த்துவிட்டுப் பிறகு எங்காவது ஒரு நல்ல ஹோட்டலில் நாமிருவருமே தங்கலாம்", மிக உறுதியுடன் கூறினாள் கீதா.
"என்ன சொல்கிறீர்கள்?" அவனது குரல் சற்று உயர்ந்தது.
"நீங்கள்தானே கூறினீர்கள் ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியும் என்று. ஒரு கட்டிலில் கூட எந்தவிதமான கேட்ட எண்ணமுமில்லாமல் அடுத்தவருக்குப் பிரச்சினையில்லாமல் படுத்துத் தூங்கலாம் என்று", அமைதியாகக் கூறினாள் கீதா.
"இது லண்டனுமில்லை, பாரீசுமில்லை, இது சென்னை. இங்கு சமுதாயத்தின் கட்டுப்பாடுகளின் படிதான் நடக்க வேண்டும். எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையுமில்லை, ஆனால் உங்களின் பெயரைக் கெடுக்க நான் விரும்பவில்லை", என்றான் ராமன்.
தனது தலையைப் பலமாக அசைத்துக் கொண்டு, "ஆகா, நீங்கள் ஆண்கள், மிகவும் வீரம் பேசுவீர்கள். ஆனால் உண்மையைச் சந்திக்க நேரும் பொழுது கோழைகளைப் போல் பின்வாங்குவீர்கள்", கேலியான புன்னகையுடன் சூடாக வந்தது அவள் பதில்.
அரை மணி நேரத்திற்கு மேல் இதைப் பற்றி அவர்கள் விவாதம் செய்துகொண்டிருந்தார்கள். திடீரென்று தலைமை விமானப் பணிபென்னின் குரல் கணீரென்று ஒலித்தது, "இன்னும் 30 நிமிடங்களில் விமானம் சென்னையை அடையும்", என்று அறிவித்தாள்.
மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8
Tuesday, September 28, 2010
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6
இடுகையிட்டவர்:
Dr. K. Padmanaban, Ph.D.
5:19 PM
- Dr. K. Padmanaban September 29, 2010 at 10:11 PM
-
If you can give me the link to Tamil blog aggregators I can do that Anand, thanks...
2
கருத்துக்கள்:
இது வரை
-
▼
2010
(37)
-
▼
September
(6)
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
-
▼
September
(6)
Please attach your blogs to Tamil blog aggregators. Then only lot of readers will come to know about your blogs.