ராமன் அவனுடைய மாமாவிடமிருந்து வந்த கடிதத்தை நூற்றியோராவது முறையாக வாசித்தான். இந்த கடிதம் ஜெர்மனியிலுள்ள ஹேம்பர்க் நகரில் வசிக்கும் அவனது மாமாவிடமிருந்து வந்தது. ராமன் இப்பொழுதுதான் B.E. படித்து முடித்திருந்தான். அவன் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் அவனுக்கு சிங்கப்பூரில் ஒரு வார விடுமுறையைப் பரிசளித்திருந்தார். "சிங்கபூருக்கு சென்று இந்தியாவிற்கும் சிங்கபூருக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்து விட்டு அதன் பிறகு இந்தியாவிற்கு நல்லது செய்யக் கனவு காண்." இதுதான் அவர் எழுதியிருந்த கடிதத்தின் முக்கியமான வாக்கியம்.
தனது பெற்றோர்களுடன் ஜெர்மனியில் இருந்த நாட்களைப் பற்றி அவன் சிந்தித்தான். மாமாவைப் பார்ப்பதற்காக அவர்கள் சென்றிருக்கிறார்கள். அப்பொழுது அவனுக்கு வயது ஏழு அல்லது எட்டு இருக்கும். இந்த வயதில் அவனுக்கு எல்லாமே வியப்பாகவும், மறக்க முடியாததாகவும் இருந்தது. விமானப் பயணத்திலிருந்து அவன் பார்த்தது, கேட்டது அவனுக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருந்தது. ஹேம்பர்க் ஐரோப்பாவிலுள்ளதிலேயே மிகவும் பசுமையான நகரம். இங்கு பாரிசில் இருப்பதை விட அதிக பாலங்கள் உள்ளன. ஆம்ஸ்டர்டாமில் இருப்பதை விட அதிக கால்வாய்கள் உள்ளன. அங்குள்ள சுத்தம் மற்றும் அவர்களது தொழிலியல் நுட்பம் அவனது மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அவன் போயிருந்த வசந்த காலத்தில் எங்குமே மிகப் பசுமையாக இருந்தது. அளவில்லாமல் காணப்பட்ட பலவித நிறங்களைக் கொண்ட பூக்கள் அவனை மிகவும் கவர்ந்தன. அங்குள்ள தூய்மையும் தொழில் நுட்பமும் அவனது இளம் மனத்தை மிகவும் ஆச்சரியத்துக்குள்ளாக்கின.
முக்கியமான மூன்று விஷயங்கள் அவனது மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. அவை:
1) எல்பே ஆற்றிற்க்கடியிலுள்ள பழைய சுரங்க வழியில் கார், லிப்டின் வழியாக சென்று ஆற்றைக் கடந்ததும், மனிதர்கள் கூட அந்த சுரங்கப்பாதையில் நடந்து செல்வதையும் அவனால் மறக்க முடியவில்லை.
2) அதே எல்பே ஆற்றிற்கு அடியில் கட்டப்பட்ட புதிய சுரங்கப்பாதை நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஒவ்வொரு சுரங்கத்திலும் கார்கள் செல்ல இரண்டு வழிகள் இருந்தன. இந்த சுரங்கங்களுக்கு மேலே ஓடும் எல்பே ஆற்றில் க்வீன்-மேரி 2 போன்ற பிரமாண்டமான கப்பல்கள் செல்வதற்கான துறைமுகம் உள்ளது. ஹேம்பர்க் உலகிலுள்ள ஏழாவது பெரிய துறைமுகம். இது ஒரு ஆற்றுத் துறைமுகம். இதை அடைய கப்பல்கள் வட கடலிலிருந்து 120 கி.மீ. ஆற்றை எதிர்த்துப் பிரயாணம் செய்ய வேண்டும்.
3) ஆனால் அவனுக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது, தென் ஜெர்மனியிலுள்ள ஹைடல்பர்க் என்ற பல்கலைக்கழக நகரில் பார்த்ததுதான். அங்கு ஓடும் நெக்கார் என்ற நதியில் ஒரு கப்பல் பிரயாணத்தின் போதுதான் அதைப் பார்த்தான். கப்பல், ஆற்றை எதிர்த்துப் போகும்போது அல்லது ஓட்டத்தோடு கீழே போகும்போது ஏற்றத்தாழ்வுகள் இருந்ததால் கப்பல் பல மீட்டர்கள் மேலே போகவும் கீழே இறங்கவும் வழி செய்யப்பட்டிருந்தன. கப்பல் ஒரு பெரிய தொட்டிக்குள் சென்று நிற்கும். கதவுகள் இறுக்கமாக அடைக்கப்பட்டு அதில் நிறைய தண்ணீர் செலுத்தப்படும். தண்ணீர் உயரம் கூடக்கூட கப்பலும் மேலே செல்லும். சரியான உயரத்தை அடைந்தவுடன் மறு பக்கத்திலுள்ள கதவுகள் திறக்கப்படும். கப்பல் தனது பயணத்தை ஆரம்பிக்கும். இதை ராமன் நெக்கார் நதியில் பல முறைகள் பார்த்திருக்கிறான்.
கப்பல் திரும்பி வரும் போது கீழே இறங்குவதையும் கண்டு களித்திருக்கிறான். கப்பல் தொட்டிக்குள் வந்தவுடன் கதவுகள் அடைக்கப்பட்டு உள்ளிருந்த தண்ணீர் வெளியேற்றப்படும். கப்பலும் கீழே இறங்கும். நீரின் மட்டத்தை அடைந்தவுடன் கதவுகள் திறக்கப்படும். கப்பலும் கம்பீரமாக தனது பயணத்தை தொடரும். இவை ஜெர்மன் பொறியியலின் சாதனைகள் என்று எண்ணியது அவனது இளமனம். இந்த நிகழ்ச்சிகளை அவன் மறக்கவேயில்லை. இப்பொழுது படித்து முடித்து விட்டு உலகம் முழுவதுமே நல்ல சந்தர்ப்பங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்று எண்ணுகின்றான். சென்னையில் வசிக்கும் ராமனுக்கு இப்படிப்பட்ட சாதனைகளையும் இதற்கு மேலான சாதனைகளை அடையவும் இன்று முன்னேறி வரும் இந்தியா தகுதியான இடமே என்று தோன்றியது.
ராமன் சிங்கபூருக்குப் பயணம் செய்வது என்று முடிவெடுத்துவிட்டான். பாஸ்போர்ட், விசா மற்றும் விமானச் சீட்டு உட்பட பிரயாணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டான். சிங்கப்பூரில் என்னவெல்லாம் பார்ப்பது என்றும் தயார் செய்துவிட்டான். வேலையில் சேர்வதற்கு முன் அவனது விடுமுறையை சிங்கப்பூரில் அனுபவிக்க முடிவு செய்துவிட்டான்.
மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8
Monday, August 23, 2010
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
இடுகையிட்டவர்:
Dr. K. Padmanaban, Ph.D.
4:10 PM
இது வரை
-
▼
2010
(37)
-
▼
August
(20)
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் ...
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
- சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
- கொக்கோ கோலா...பகுதி 2
- கொக்கோ கோலா...பகுதி 1
- நான் கர்ப்பிணி; எள்ளைச் சாப்பிடலாமா?
- ஒழுங்கற்ற மாதவிடாய்: இதைக் குணப்படுத்த என்ன வழிகள்...
- தென் இந்தியாவிலுள்ள சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ட...
- மஞ்சள்...
- தேங்காயும் கொலஸ்ட்ராலும்...
- போதைப்பொருள் கேட்டமைன் (Ketamine)...
- துஷ்பிரயோகம் செய்யப்படும் போதைப்பொருட்கள் எவை?
- உடல் பருமைனைக் குறைக்க முட்டை உணவு முறை...
- முட்டைக்கோஸ் சூஃப் – எடை குறைக்க உதவும் திட்ட, பத்...
- மீனையும் தயிரையும் சேர்த்துச் சாப்பிடக்கூடாது; இது...
- சீனி, சீனி, எதிலும் சீனி; எடை குறைப்பு முயற்ச்சியி...
- ஆரோக்கியமான வாழ்வுக்கான விதிமுறைகள் என்ன?
-
▼
August
(20)