20 வருடங்களுக்கு மேலாக உடம்பு-பருமன்-குறியெண்ணைப் பற்றி நமக்குத் தெரியும். இது நம்பகமான தகவலைக் கொடுக்காவிட்டாலும் உடல் எடை குறைக்கும் தொழிலில் இதை வைத்து பலர் அதிக பணம் சம்பதித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா வழிகளிலும் அவர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே பார்க்கிறார்கள்.

இடை-உயரம்-விகிதம் மார்படைப்பு, பக்கவாதம் போன்ற வியாதிகளைப் பற்றி அதிக தகவலைக் கொடுக்கும் என்பதை சமீபகாலத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை சுலபமாகக் கணக்கிட்டுக் கண்டுபிடிக்க முடியும்.

தொப்புள் வழியாக இடையின் சுற்றளவை செ.மீ.ல் அளந்து கொள்ளுங்கள்.. உயரத்தையும் செ.மீ.ல் அளந்து கொள்ளுங்கள். இடையின் சுற்றளவை உயரத்தால் வகுத்தால் கிடைப்பதுதான் இடை-உயரம்-விகிதம்.


உதாரணம்: இடையின் சுற்றளவு = 85 செ.மீ.
உயரம் = 170 செ.மீ
இடை-உயரம்-விகிதம் = 85/170 = 0.5

இடை-உயரம்-விகிதத்தின் சரியான அளவுகள்:

40 வயது வரை - 0.5 க்கு கீழ்
40 முதல் 50 வயது வரை – 0.5 முதல் 0.6 வரை
50 வயதுக்கு மேல் – 0.6 ஒட்டி

இடை-உயரம்-விகிதம் மேலே கூறிய அளவிற்கு அதிகமாக இருந்தால் மார்படைப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய்-2 வருவதற்கான ஆபத்து இருக்கிறது.

இந்த எளிமையான கணக்கைப் போடக் கஷ்டமாக இருந்தால் இடையின் சுற்றளவை மட்டுமே அளங்கள். பெண்கள்க்கு 88 செ.மீ., ஆண்களுக்கு 103 செ.மீ. க்குக் கீழே இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவு, தேவையான அளவு உடற்பயிற்சி மற்றும் நல்ல வாழ்க்கைத்தரம் சரியான இடை-உயரம்-விகிதத்தைக் கொடுக்கும்.

ஆரோக்கியமாக இருங்கள், வாழ்க்கையை அனுபவியுங்கள்.