"நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. நான் சென்னையில் தனியாகத் தங்க வேண்டியிருக்கிறது. நாம் நல்ல நண்பர்கள். நான் உங்களை என்னுடன் தங்குமாறு தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன். மேலும் நீங்கள் என்னை மதுரையில் எனது பாட்டியிடம் கொண்டு விட்டீர்கள் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்", என்றாள் கீதா அன்பாக.

இதுதான் ராமனின் வாழ்வில் அவன் முதன்முதலாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய நாள். அவன் கீதாவைப் பார்த்து அழகாகச் சிரித்தான். எனக்கு இந்த சுவாரசியமான வேலையைச் செய்ய எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று கூறி அவளுக்குச் சம்மதமளித்தான் ராமன். ராமனின் இரண்டு கரங்களையும் தனது கைகளில் எடுத்துக்கொண்டு மெதுவாக அழுத்தி அவள் அவனுக்கு நன்றி சொன்னாள். விமானம் சென்னையில் இறங்கி விட்டது. அவர்களுக்கிடையில் நடந்த இந்த சூடான விவாதத்தில் இருவருமே அதைக் கவனிக்கவில்லை.

கீதாவும் ராமனும் டாக்சியில் சென்று ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்தார்கள். அவள் தனது மனைவி என்று எழுதியதை அவள் அரைக் கண்ணால் கண்டு மகிழ்ச்சியடைந்தாள். அவர்கள் அறைக்குச் சென்றார்கள். அது ஒரு பெரிய அறை. அதில் தற்காலத்திலுள்ள எல்லா வசதிகளும் இருந்தன. ஆண், பெண்களுக்கான எல்லாத் தேவைகளையும் அளவுக்கதிகமாகவே எண்ணத்தில் கொண்டு வசதிகளைச் செய்திருந்தார்கள். கீதா மிகவும் சந்தோசமாக இருந்தாள். அவள் குளியலறைக்குச் சென்றாள். ராமன் சோபாவில் அமர்ந்தான். கண்களை மூடினான். விமானத்தில் அவளுக்கும் அவனுக்குமிடையில் தாஜ்மஹாலைப் பற்றிய உரையாடலை வார்த்தைக்கு வார்த்தை திரும்பவும் அசைபோட ஆரம்பித்தான். கீதா சொன்னது சரியே என்று அவனுக்குப்பட்டது. சிறப்பான முறையில் அவளுக்குச் செய்ய என்ன இருக்கிறது என்று யோசித்தான். மேலும் அந்தச் செயல் உலகத்தில் இதுவரை எங்கும் மேற்கொள்ளப்படாத ஒரு தனித்தன்மை வாய்ந்ததாக, சிறந்த செயலாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். அவளுக்குத் தான் காதலின் பெயரால் இந்த விதமாக ஒரு சிறந்த செயலைச் செய்ய முடியுமா என்று எண்ணியபோது அவனது மனதில் சஞ்சலமும் பயமும் உண்டானது.

கீதாவும் ராமனும் மெரீனா கடற்கரையில் உலாவினார்கள். கபாலீஸ்வரர் கோவிலில் இறைவனைத் தரிசித்தார்கள். இறுதியில் ராமனுடைய வீட்டிருகுச் சென்று அவனது பெற்றோரைச் சந்தித்தனர்.

"நீ இங்கு என்ன செய்கிறாய்? நீ சிங்கப்பூரில் இருந்து வருவதில் பிரச்சினை இருக்கிறது என்று நாங்கள் நினைத்தோம்", கேட்டார் ராமனின் தந்தை.

"இந்தப் பெண்ணைப் பார்த்துக் கொள்ளும் ஆயா வேலையை இப்பொழுது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்", என்று குறும்புப் புன்முறுவலுடன் கீதாவைச் சுட்டிக்காட்டினான்.

அவனது அம்மா திறந்த வாயை மூடாமல் கீதாவைப் பார்த்து, "வாம்மா", என்று கூறினாள்.

"இந்த அழகான பெண் உனக்கு எங்கிருந்து கிடைத்தால்?" கேட்டார் அப்பா.

"ஆயா வேலையை மிகவும் நல்ல வேலை என்று இப்பொழுதுதான் நன்றாக உணருகிறேன்", என்றார் அவர் புன்முறுவலுடன்.

"இன்று நாங்கள் ஹோட்டலில் தங்குகிறோம். நாளை காலை விமானத்தில் சென்று அவளைப் பத்திரமாக அவளது பாட்டியிடம் மதுரையில் ஒப்படைத்தபிறகு நான் சென்னை திரும்புவேன். அதன் பிறகு விளக்கமாக எல்லாவற்றையும் சொல்கிறேன் அப்பா", என்றான் ராமன்.

மெதுவாக அவனது தந்தை சரி என்று தலையை ஆட்டினார். ஆனால் அம்மா சத்தமாக சொன்னாள், "ஏன் நீங்கள் இருவரும் நமது வீட்டில் தங்கக்கூடாது? நமது வீட்டில் விருந்தினருக்காக ஒரு அறை இருப்பது உனக்குத் தெரியுமே".

"உனது மகனைப் பற்றி உனக்குத்தான் மற்ற எல்லோரையும் விட நன்றாகத் தெரியும். முடிவு எடுக்கப்பட்டு விட்டது. விமான டிக்கட்டும் எடுக்கப்பட்டுவிட்டது. நான் திரும்பி வந்ததும் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறேன் அம்மா", என்று சிரித்தபடியே பதிலளித்தான் ராமன்.

தயக்கத்துடன் அவனது அம்மாவும் சரி என்று கூறினாள்.

"நீங்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு போகலாமே", என்றாள் அம்மா.

"நேரம் வரும்பொழுது நீங்கள் எங்களுக்குத் தினமும் சமையல் செய்யலாம்", என்றான் ராமன்.

இதைச் சொல்லும் பொழுது அவனையுமறியாமல் சிரித்துவிட்டான். வேறு வழியில்லாததால் அவனது அம்மாவும் தலையை அசைத்துத் தனது சம்மதத்தைத் தெரிவித்தாள்.

"உனது மாமாவுக்குப் போன் பண்ணினாயா?" அப்பா கேட்டார்.

"இன்னும் பண்ணவில்லை, கட்டாயம் இன்று நான் போன் பண்ணுவேன்", பதிலளித்தான் ராமன்.

கீதாவும் ராமனும் ஹோட்டலை அடைந்தவுடன் சாப்பிட்டார்கள். அவன் தனது மாமாவுக்கும் அவள் தன் பெற்றோர்களுக்கும் போன் செய்தார்கள்.

"இப்பொழுது நான் எனது இரவு உடையை மாற்றிக்கொண்டு தூங்கப்போகிறேன். இதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கிறதா?" கேட்டாள் கீதா.

"இல்லை, நீங்கள் நிம்மதியாகப் படுத்துத் தூங்குங்கள்", என்று பதிலளித்துவிட்டு ஜன்னலைத் திறந்து வெளியே சென்னையின் இரவு அழகைப் பார்த்து ரசித்தான் ராமன்.

அவன் திரும்பிப் பார்த்த பொழுது கட்டிலில் கீதா தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் சிறிது வளைந்த, அழகான கொடி போன்ற உடலுடன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனும் படுக்கையில் மறுபக்கத்தில் படுத்தான். தூங்கும் முன் திரும்பவும் அவன் மிகவும் ஆழ்ந்து கீதாவுடன் தாஜ்மஹாலைப் பற்றிய உரையாடலை எண்ணினான் ராமன். முதல்முறையாகத் தன் வாழ்க்கையை வெறுத்தான் ராமன். இதே எண்ணங்களுடன் அயர்ந்து உறங்கிவிட்டான். அப்பொழுது அவன் ஒரு கனவு கண்டான். அது அவனுக்கும் கீதாவுக்கும் மட்டுமில்லாமல் இந்தியாவிற்கே சிறந்தது என்று எண்ணினான். இந்த சிறந்த கனவை நனவாக்கி கீதாவிற்குச் சமர்ப்பிக்க விரும்பினான் ராமன்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8