தனது அறைக்கு சென்றபின் ராமன் இந்த நாளில் நடந்ததைப் பற்றிச் சிந்தித்தான். இந்த நாள் அவன் தனது வாழ்நாளில் இதுவரை அதிகம் கஷ்டப்பட்ட நாள் என்று நினைத்துக் கொண்டான். அதே நேரத்தில் இன்றுதான் தன் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றும் முடிவு செய்துகொண்டான். அவனது உதடுகள் கீதா, கீதா என்று முணுமுணுத்தன. முகம் முழுவதும் நிரம்பிய பெரிய புன்னகையுடன் தனது கண்களின் முன்னாள் தெரிந்த அவளுடைய உருவத்தைக் கண்டு ரசித்தான். அவளோடு இருந்த ஒவ்வொரு வினாடியும் அவனுக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்தது. கல்லூரியிலிருந்து அவனுக்குப் பல அழகான பெண்களைத் தெரியும். அவர்கள் ஒன்றாகவே படித்தார்கள். மெரீனா கடற்கரைக்கோ அல்லது காப்பி குடிக்கவோ சேர்ந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் கீதாவைப் பார்க்க வேண்டும் என்ற அவனது அடக்க முடியாத உணர்ச்சி எந்தப்பென்னிடமும் அவனுக்கு ஒரு பொழுதும் உண்டானதில்லை. அன்று அவன் எந்தவிதக் கனவுகளும் இல்லாமல் அயர்ந்து நன்றாகத் தூங்கினான்.

கீதாவும் அந்த நாளில் நடந்தவைகளைப் பற்றி நினைத்தாள். இந்த நாள் மாரியம்மன் கொடுத்த பரிசு என்று எண்ணினாள். அதே நேரத்தில் வருங்காலத்தைப் பற்றி எண்ணும் பொழுது அவளுக்குப் பயமாகவும் இருந்தது. ராமனின் குடும்பத்தார் என்ன நினைப்பார்கள்? அல்லது அவனுக்கும் வேறு பெண் பார்த்திருப்பார்களோ? அவளைப் பற்றித் தெரிந்தால் அவர்கள் என்ன சொல்வார்கள்? என்பது போன்ற எண்ணங்கள் அவளுக்குத் தோன்றின. இந்தத் தடவை அவள் இரவு முழுவதும் தூங்கவில்லை. வரும் நாட்கள் மகிழ்ச்சியுடையதாகவும், அதிர்ஷ்டமுள்ளதாகவும் இருக்கவேண்டும் என்று வேண்டினாள். இதுதான் இரவு முழுவதும் அவளது சிந்தனையாக இருந்தது. சூரியன் தனது பலமான கதிர்களுடன் உதித்த நேரத்திலும் அவள் விழித்துக் கொண்டுதானிருந்தாள்.

மறுநாள் காலை சரியாக 9 மணிக்கு வந்து BMW காரில் அவளைக் கூட்டிச் சென்றான் ராமன்.

"நீங்கள் பெரிய பணக்காரரா?" வியப்பினால் இன்னும் பெரிதான கண்களுடன் அவள் கேட்டாள்.

"ஒரு கிரடிட் கார்டு இருந்தால் போதும், இது மாதிரி ஒரு காரை ஓட்ட", சிரிப்புடன் பதிலளித்தான் ராமன்.

எல்லா இளைஞர்களைப் போல் அவனும் BMW காரை விரும்பினான். இல்லை, மிகவும் நேசித்தான் என்றே சொல்லவேண்டும். காரில் போகும் பொழுது இந்த 3 நாட்களில் என்னென்ன பார்க்க வேண்டும் என்ற தனது திட்டத்தை கீதா கூறினாள்.

"முதலில் வீரமாகாளியம்மன் கோவிலுக்குப் போகலாம்", அழகான புன்முறுவலுடன் கூறினாள் கீதா.

"கிளி ஜோஸ்யரைத் தேடப் போகிறீர்களா?" அவன் குறும்புடன் அவளைப் பார்த்தான்.

"இல்லை நான் கோவிலுக்குப் போக ஆசைப்படுகிறேன். அதன் பிறகு நாம் லிட்டில் இந்தியாவில் சுற்றி வரலாம். பிறகு சைனா டவுனுக்குப் போகலாம். நிச்சயம் மாரியம்மன் கோவிலுக்குப் போக வேண்டும். அது நமது கோவில், எப்பொழுதும் நமது கோவிலாகவே இருக்கும்", என்றாள் கீதா.

அவன் கனவு காணும் அவளது கண்களைக் கவனித்தான். அவளது புத்திசாலித்தனம் நிறைந்த மனதில் இப்பொழுது என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்பதை எண்ணி வியந்தான்.

கீதாவும் ராமனும் வீரமாகாளியம்மன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். நம்பர் 141, செரங்கூன் சாலையில் அமைந்திருந்த இந்தக் கோவில் சிங்கப்பூரிலுள்ள பழமையான கோவில்களுள் ஒன்று. இது முதன்முதலில் வேலை செய்ய வந்த தமிழர்களால் கட்டப்பட்டது. இதுதான் செரங்கூன் பகுதியில் கட்டப்பட்ட முதல் கோவிலாகும். இது அங்குள்ள இந்தியர்களின் சமுதாய மற்றும் கலாச்சார வாழ்வின் மையமாக உள்ளது. இக்கோவிலின் முதல் பெயர் "சுண்ணாம்புக் கம்பம் கோவில்". சுண்ணாம்பு உற்பத்தி செய்யப்படும் கிராமங்களில் இருக்கும் கோவில் என்பதே இதன் அர்த்தம். எல்லாச் சிலைகளும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவை. கீதா மூச்சு விடாமல் ஒவ்வொரு சிலையைப் பற்றியும் அவனுக்கு விளக்கமாகச் சொன்னாள். இந்த இரண்டு வாரத்தில் அவள் எத்தனை தடவை இங்கு வந்திருந்தாள் இவ்வளவு விஷயங்கள் தெரியும் என்று எண்ணி வியந்தான். அவர்கள் இங்கு இந்தியாவில் இருப்பதைப் போலவே உள்ள உணர்ச்சியை அனுபவித்தார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் கொடுத்தது. அவர்கள் சிங்கப்பூரில் வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதைப் பற்றி உரையாடினார்கள். கீதா தென்னிந்திய இனிப்பு சாப்பிட விரும்பியதால் அவர்கள் லிட்டில் இந்தியாவில் அதையும் அனுபவித்தார்கள்.

அதன் பிறகு அவர்கள் சைனா டவுனுக்கு வந்தார்கள். அங்கு அவள் மாரியம்மன் கோவிலைத் திரும்பவும் பார்க்க விரும்பினாள். ஒரு வேலை ராமன் தனக்கு கணவனாக அமைந்தால் முதலில் இந்தக் கோவிலுக்குத்தான் அவனுடன் வரவேண்டும் என்று நினைத்தாள். அவளது முகம் சிவந்தது. எப்பொழுதும் போல அவன் அவளது அழகான முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது வாயிலிருந்து எந்த விதமான விமர்சனமும் வரவில்லை. அவன் அவளை மிகவும் ரசித்துக்கொண்டிருந்தான் என்று சொல்வதே இங்கு மிகப்பொருத்தமாகும்.

இங்கு கீதாவைச் சந்தித்தேன். அடிக்கடி நாங்கள் இங்கு வர வேண்டும் என்பதே அவன் மனதில் ஓடிய எண்ணங்கள். இந்தக் கோவிலிலும் அவள் எல்லாவற்றையும் அவனுக்கு விளக்கிக் கூறினாள். சிறு குழந்தையிலிருந்தே அவள் இங்கு வளர்ந்தவளைப் போல எல்லாமே தெரிந்திருக்கிறதே என்று வியப்புடன் பெருமையும் அடைந்தான் ராமன். பெண்கள்தான் ஆண்களை விட கடவுளுக்குப் பக்கத்திலிருக்கிறார்கள் என்று எண்ணினான் அல்லது தங்கள் கணவனிடமிருந்து, குடும்பத்திடமிருந்து மற்றும் சமூகத்திலிருந்து தற்காலிகமாகத் தப்புவதற்கான இடம் கோவில்தானோ என்றும் எண்ணினான்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8