Monday, August 30, 2010

அது ஒரு பங்களா. சிறிய, ஆனால் அழகாக பராமரிக்கப்பட்ட தோட்டமும் அதைச் சுற்றி இருந்தது. அவள் கதவைத் திறந்தாள். இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

"அப்பா, அம்மா, இங்கே பாருங்கள். நான் ஒரு விருந்தாளியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்", என்று உரத்த குரலில் கூறினாள் அவள்.

அவர்கள் முன் அறையில் காத்திருந்தார்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஒருவரும் அவரது மனைவியும் வந்தனர்.

இவர்கள் என் பெற்றோர்கள். இவர்... அவன் பெயர் தெரியாமல் அவள் தயங்கினாள். இன்று நடந்த குழப்பத்தில் அவள் அவனது பெயரை இன்னும் சரியாக காத்து கொடுத்துக் கேட்கவில்லை. அவள் புன்முறுவலுடன் ராமனை அவளது பெரிய கண்களால் நோக்கினான்.

"உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டாள் நாணத்துடன்...

"எனது பெண் ஒரு பெயர் தெரியாத விருந்தாளியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாள்", என்று கூறிய அவள் தந்தை பலமாகச் சிரித்தார்.

ராமனின் முகம் சிவந்துவிட்டது. "எனது பெயர் ராமன். நான் சென்னையிலிருந்து வந்திருக்கிறேன், ஐயா", என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொண்டான்.

"நான் அருணாச்சலம்", என்றார் அவள் தந்தை. அவர்கள் தங்கள் கைகளைக் குலுக்கிக் கொண்டனர். "என்னிடம் சீதா இல்லை, ஆனால் கீதா இருக்கிறாள்", தனது மகளைச் சுட்டிக் காட்டினார் அவர்.

"இப்பொழுது அவளின் பெயரும் எனக்குத் தெரியும்", கூறிச் சிரித்தான் ராமன். அவளது அம்மாவிற்கும் அவன் தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டான். அங்குள்ள சோபாவில் அமர்ந்தார்கள்.

"காப்பி, தேநீர் அல்லது பழச்சாறு - மாம்பலம், ஆரஞ்ச், அன்னாச்சிப்பழம் மற்றும் எலுமிச்சையும் இருக்கிறது", என்று கூறிய கீதா, அவன் பதிலளிக்கும் முன்பே தனது தாயிடம் கூறினாள்.

"அம்மா, அவருக்கு நல்ல பசி. சோறு, சாம்பார், காய்கறிகளுடன் தென்னிந்தியச் சாப்பாட்டைச் செய்யுங்களேன்."

ராமன் வேண்டாமென்று மெதுவாகத்தான் மறுத்தான். தண்ணீர் மட்டுமே போதுமே என்று கூறினான்.

"அரை மணி நேரத்திற்குள் நான் ஏதாவது சமைக்கிறேன்", கீதாவின் அம்மா கூறினாள். கீதாவும் அம்மாவிற்கு உதவி செய்ய விரும்பியதால் இருவரும் சமையலறைக்குள் நுழைந்தாள்.

"ராமன், உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்", என்றார் அருணாச்சலம். "உங்களைப் பார்த்தால் ஒரு உல்லாசப் பயணி போல் இருக்கிறது."

ராமன் தான் சிங்கப்பூருக்கு வந்ததின் காரணத்தை அவரிடம் கூறினான்.

"நான் B.E. முடித்துவிட்டேன். ஒரு வருடம் வேலை பார்த்த பிறகு M.E. படிக்கப் போகிறேன். ஆனால் எனது குறிக்கோள் பின்னால் Ph.Dயையும் முடித்துவிட்டு மக்களுக்கு உபயோகமான ஆராய்ச்சிகள் செய்வதுதான்", கூறினான் ராமன்.

"மிகவும் நல்லது. நாங்கள் டாக்டர் பட்டம் இல்லாமலேயே வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால் இந்தக் காலத்தில் அது இல்லாமல் முன்னேறமுடியாது", அவர் கூறினார்.

"ஜெர்மனியில் இருக்கும் எனது மாமா, எங்கு அதிகம் ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றனவோ அங்குதான் நல்ல சம்பளமுள்ள வேலைகளும் உருவாக்கப்படும் என்று அடிக்கடி கூறுவார்", என்றான் ராமன்.

"இது மிகவும் ஞானமுள்ள வாக்கியம்", என்றாம் அருணாச்சலம்.

"உங்கள் கல்லூரி வாழ்க்கை எப்படி இருந்தது? உங்களுக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்களா?" அவர் கேட்டார். "உங்களைச் சுற்றி பெண்கள் வரவில்லையா?" மேலும் கேட்டுச் சிரித்தார்.

"ஐயா, எனக்கு ஆண், பெண் நண்பர்கள் பலர் இருக்கின்றனர். எனக்கு ஒழுக்கத்தைப் பற்றிய கோட்பாடுகள் மிகவும் முக்கியமானவை. பெண்களை நான் மிகவும் மதிப்பவன். ஒரு பெண்ணை மனதில் கூட நான் தவறான எண்ணத்தில் பார்ப்பதில்லை", மிகத் தீர்மானமான குரலில் அவன் சொன்னான்.

"உங்கள் கொள்கை மிகவும் உயர்ந்தது", என்றார் அருணாச்சலம்.

"இவனை அடையக் கொடுத்து வைத்திருக்கும் அதிர்ஷ்டமான பெண் யாரோ?" என்று அவர் மனம் எண்ணியது. அவர்கள் இந்திய அரசியலைப் பற்றி, பணச் சந்தையிலிலுள்ள பிரச்சினைகள், சிங்கப்பூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் மற்றும் ஆண்கள் பேசும் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். ராமனின் விரிவான, கூர்மையான அறிவு அருணாச்சலத்தை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்கள். சாம்பார், வெண்டைக்காய் பொரியல், ரசம், தயிருடன் கிடைத்த தென்னிந்திய உணவை ராமன் மிகவும் ரசித்துச் சாப்பிட்டான்.

"கீதா இன்று முதல்முறையாகச் சமையல் செய்ய உதவியதால் சீக்கிரம் முடிந்தது", என்றால் கீதாவின் அம்மா.

முதன்முறையாக கீதாவின் முகம் சிகப்பானத்தை அவன் கவனித்தான். ஆனால் அவள் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

"எப்பொழுது சென்னைக்குப் போகிறீர்கள்", அருணாச்சலம் கேட்டார்.

இதற்குள் சாப்பாடும் முடிந்தது.

"ஞாயிற்றுக்கிழமை நான் சென்னைக்குச் செல்கிறேன். சிங்கப்பூரை பார்ப்பதற்கு இன்னும் எனக்கும் 3 நாட்கள் இருக்கின்றன", ராமன் பதிலளித்தான்.

"சிங்கப்பூரை அவருக்கு சுற்றிக்காட்ட விரும்புகிறேன். நான் இரண்டு தடவையாவது எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். அம்மா, உங்கள் அனுமதியுடன் நானே இவருக்கு சுற்றிக்காட்டலாமா?" கீதா குறும்புச் சிரிப்புடன் அம்மாவைக் கேட்டாள்.

"மாலைச் சாப்பாட்டிற்கு நீங்கள் இருவரும் நம் வீட்டிற்கு வருவதாக இருந்தால் எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது", அம்மா சாந்தமாக சொன்னாள்.

"எனக்கு சம்மதமே", அம்மா சொன்னதை ஆமோதித்தார் அருணாச்சலம்.

அடுத்த நாள் காலை 9 மணிக்கு வந்து அவளைக் கூட்டிக் கொண்டு போவதாக ராமன் சொன்னான். சிறிது நேரம் கழித்து அருணாச்சலம் அவனைத் தனது காரில் அவனது ஹோட்டலில் இறக்கிவிட்டார்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Saturday, August 28, 2010

"என் பெயர் ராமன். சென்னையிலிருந்து வந்திருக்கிறேன். வேலையில் சேர்வதற்கு முன்பு ஒரு வாரம் இங்கு உல்லாசப் பயணத்திற்கு வந்திருக்கிறேன். இது ஜெர்மனியிலுள்ள ஹேம்பர்கில் இருக்கும் எனது மாமா கொடுத்த பரிசு. கூட்டத்தோடு இங்கு வருவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஆகையால் நான் தனியாக வந்தேன்." ராமன் பதிலளித்தான்.

"நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. ஏன் எனக்காகக் காத்திருந்தீர்கள் என்று சொல்லாவிட்டால் நான் எழுந்து போய்விடுவேன்," அவளது குரல் உறுதியாக ஒலித்தது.

"நான் அதற்கான காரணத்தைச் சொன்னால் நீங்கள் என்னை நிச்சயம் பைத்தியம் பிடித்தவன் என்றுதான் நினைப்பீர்கள்", ராமன் கூறினான்.

"உங்களுக்கு பைத்தியமோ இல்லையோ, அது என் பிரச்சினையில்லை. ஆனால் அந்த காரணத்தை நான் தெரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் சொல்ல விரும்பாவிட்டால் நான் இப்பொழுதே சென்று விடுகிறேன்". இதை சொல்லிவிட்டு அவள் போவதற்காக எழுந்துவிட்டாள்.

அவளுடைய கண்களில் அவன் அந்தச் சோகத்தை கண்டான்.

"நீங்கள் யார்? உங்களது பெயர் என்ன? இங்கு என்ன செய்கிறீர்கள்? எல்லாவற்றையும் அறிய விரும்புகிறேன்", கேட்டான் ராமன்.

"என்னிடமிருந்து ஒரு பதிலும் வராது. இப்பொழுது பதில் சொல்ல வேண்டியது நீங்கள்தான். வெளிப்படையாக பேசுங்கள். மேலும் திரும்பித் திரும்பிக் கேட்க நான் விரும்பவில்லை", கூறினாள் அவள்.

"எப்படியோ ஒரு வழியில் நாம் எல்லோருமே பைத்தியம்தான். ஆகையால் நான் உங்களைப் பற்றி என்ன எண்ணுகிறேன் என்பது இங்கு முக்கியம் இல்லை", என்றாள் அவள்.

ராமன் அவளைக் கூர்ந்து நோக்கினான். இப்பொழுது பதில் சொல்லாவிட்டால் அவள் போய்விடுவாள் என்பதையும் புரிந்து கொண்டான்.

"இது ஒரு பெரிய கதை. கவனமாக கேளுங்கள்", என்ற ராமன் ஆரம்பித்தான். அவர்கள் மேலும் இரண்டு கப் காப்பி கொண்டு வரச் சொன்னார்கள். அவனுடைய கதையைக் கேட்பதற்கு அவள் மிகவும் ஆவலாக இருந்தாள்.

"கதைகளோ அல்லது கனவுகளோ அவற்றை நான் விரும்புகிறேன். உங்கள் கதையும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்", புன்னகையுடன் அவள் கூறினாள்.

"30௦ நிமிடங்களில் நான் போக வேண்டும். எனது பெற்றோர்கள் எனக்காக காத்திருப்பார்கள்", தொடர்ந்து கூறினாள் அவள்.

"சிங்கப்பூர் உங்கள் சொந்த ஊரா?" அவன் கேட்டு முடிக்கும் முன்பே, அவள் அவனைப் பேச்சை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டாள், எழுந்து சென்றுவிட்டாள்.

சாப்பிட்டதற்கு மேசை மேல் சில சிங்கப்பூர் டாலர் நோட்டுக்களை வீசிவிட்டு ராமன் அவள் பின்னால் ஓடினான்.

"நில்லுங்கள் நான் நடந்ததையெல்லாம் சொல்லுகிறேன்", சற்று உயர்ந்த குரலில் கூறினான் ராமன்.

"இது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது", என்றாள் அவள்.

அவர்கள் நடந்து கொண்டேயிருந்தார்கள். எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்று அவன் எண்ணிக்கொண்டிருந்தான். அவள் அமைதியில்லாமல் இருந்தாள். எல்லாவற்றையும் உடனே அறிய விரும்பினால். இந்த விசயத்தில் எல்லா பெண்களும் ஒரே மாதிரித்தான் என்று அவள் நினைத்தால். கூட்டமிருந்த பூங்காவில் நுழைந்து ஒரு மூலையில் அவர்கள் அமர்ந்தார்கள். அவள் தனது காதைக் காட்டி அவனது கதையை கேட்பதற்கு தயாராக இருப்பதாக ஜாடை காட்டினாள். அவளிடமிருக்கும் எல்லாமே மிகவும் அழகாக இருக்கின்றன. ஆனால் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.

ராமன் அவளிடம் தனது மாமாவின் சிங்கப்பூர் பயணப் பரிசைப் பற்றிச் சொன்னான். அவன் தனது சுதந்திரத்தை மிகவும் விரும்புவதால் தனியாகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பதைப் பற்றியும் சொன்னான். தான் எடுத்த முடிவு மிகவும் சரியானதே என்று சிரித்துக்கொண்டே சொன்னான். ஒரு பயணக்குழுவுடன் வந்திருந்தாள் இவ்வளவு நேரம் செலவழித்து என்னால் அவளை கண்டு பிடிக்க முடிந்திருக்குமா? என்று எண்ணினான். அவனுடைய சிரிப்பை அவள் ரசித்தாள். அவன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறான் என்றும் எண்ணினால். அவளைவிட அவன் நிச்சயமாக 10 செ.மீ. உயரமாக இருப்பான். கல்லூரியில் தனது தோழிகளுடன் இளைஞர்களைப் பற்றிப் பேசியதையெல்லாம் அவள் நினைத்துப் பார்த்தாள். அவன் மிகவும் சோர்ந்து போயிருக்கிறான். அதன் காரணத்தை எப்படியும் கண்டுபிடித்து விடுவேன் என்று அவள் நம்பினாள். அவன் மெதுவாக அவளிடம் நடந்ததையெல்லாம் விரிவாகக் கூறினான். லிட்டில் இந்தியாவில் நடந்ததைப் பற்றியும் கிளி ஜோஷ்யரைப் பற்றியும் கூறினான். அவன் கூறுவதை அவள் மிகக் கவனமாகக் கேட்டால். அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளது மனதில் ஆழமாகப் பதிந்தது. மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தது, இந்த அழகான, கவர்ச்சியான, வினோதமான இளைஞனைச் சந்திப்பதற்காகத்தானோ என்று எண்ணினாள். இதனால்தான் மாரியம்மன் கோவிலில் காத்திருக்க வேண்டியிருந்தது என்று மெதுவாக அவன் சொல்லி முடித்தான்.

அவளது கண்கள் மூடியிருந்தன. அவன் சொன்னதை அவள் ஜீரணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாள் போலத் தோன்றியது. ராமன் அவளது கவர்ச்சியான முகத்தை ஆசையோடு நோக்கினான். இவளுக்காக எனது சென்னை திரும்பும் பயணம் வரை கூடக் காத்திருப்பேன் என்றும் அவன் எண்ணினான்.

"லிட்டில் இந்தியாவிற்குப் பொய் கிளி ஜோஸ்யரைத் தேடுவோம்", என்று கூறிய அவள், வந்த ஒரு டாக்சியையும் நிறுத்தினாள்.

டாக்சி டிரைவரிடம் வீரமாகாளியம்மன் கோவிலுக்குப் போகும்படி கூறினாள். டாக்சியில் இரவருமே தங்கள் எண்ணங்களுக்குள் மூழ்கி அமைதியாக இருந்தார்கள். அங்கு எந்த இடத்தில் கிளி ஜோஸ்யரைப் பார்த்தான் என்பதை காட்டினான். அங்கு பக்கத்திலிருந்த கடைகளிலெல்லாம் விசாரித்தார்கள். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக யாருமே அவரைப் பார்க்கவில்லை. இறுதியில் வீட்டிற்குச் சென்று அவளது பெற்றோர்களைச் சந்திக்கலாம் என்று அவள் கூறினாள். ஒரு வேலை அவள் தாய் அவனுக்கு நல்ல சாப்பாடு போடலாம் என்று மலர்ந்த முகத்துடன் கூறினாள்.

"அப்படியானால் நீங்கள் சிங்கப்பூர்வாசிதானே", என்று அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவன் கேட்டான்.

"ஆமாம், நான் கடந்த 14 நாட்களாக இங்கு இருக்கிறேன். இன்னும் சில நாட்களுக்கு இங்கு இருப்பேன்", அவள் சிரித்துக் கொண்டே பதிலளித்தால்.

"என் பெற்றோர்களை இங்கு விட்டுவிட்டுத் தனியாக நான் இந்தியாவிற்குத் திரும்பிப் போக வேண்டும்", தொடர்ந்தாள் அவள்.

அவள் கண்களில் கண்ட சோகத்தை இப்பொழுது புரிந்து கொண்டான்.

"ஏன் நீங்கள் உங்கள் பெற்றோருடன் இங்கு தங்கக் கூடாது? சிங்கப்பூர் மிக நல்ல இடம்தானே", என்றான் ராமன்.

"எனது முதுநிலைப் படிப்பை மதுரையில் முடிக்க விரும்புகிறேன். அதன் பிரக் எம்.பி.ஏ. படிக்க இங்கு திரும்பி வருவேன். எனது பெற்றோர் மேல் மிகவும் அன்பு வைத்திருக்கிறேன். நான் அவர்களுக்கு ஒரே பெண். அவர்களை 2 வருடத்திற்கு நான் இங்கு தனியாக விட்டுச் செல்ல வேண்டும். அவர்களுக்கும் வருத்தம்தான். ஆனால் அதைக் காட்டினால்தான் நான் இன்னும் கவலைப்படுவேன் என்று அவர்களுக்கு நன்கு தெரியும்", என்றாள் அவள் மெதுவாக.

"நீங்கள் மேற்கொண்டு எதுவும் அறிய விரும்பினால் அவர்களிடமே நேரில் கேட்டுக்கொள்ளுங்கள். வாருங்கள், போகலாம்", என்று கூறிவிட்டு அவள் டாக்சி ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Friday, August 27, 2010

சரியான தூக்கமில்லாததால் மறுநாள் காலையில் ராமன் மிகவும் சோர்வாக இருந்தான். எழுந்திருக்க மனமில்லாமல் எந்தவித குறிக்கோளுமில்லாமல் படுத்திருந்தான். சிறிது நேரம் கழித்து விரைவாக எழுந்தான். காலைக் கடன்களை முடித்தான். ஆனால் காலை உணவை உண்ண அவனுக்கு விருப்பமில்லை. ஒரு கப் காபியை மட்டும் குடித்துவிட்டு லிட்டில் இந்தியாவிற்கு கிளம்பினான். கிளி ஜோஸ்யரிடம் பேச விரும்பினான். ஆனால் எங்கு தேடியும் அவரைக் காணவில்லை. மறுபடியும் கிளி ஜோஸ்யரின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தான்.

"மாரியம்மன் கோவிலுக்குப் போய் உனது இளவரசியைப் பார்" என்ற வார்த்தைகள் ஒழித்துக் கொண்டே இருந்தன. ஒரு வேளை அவளைத் தவற விட்டு விடுவேனோ என்று எண்ணியதுமே அவன் மிகவும் திகிலடைந்தான். விரைவாக ஒரு டாக்சியில் மாரியம்மன் கோவிலை அடைந்தான் ராமன்.

அது ஒரு புழுக்கமான நாள். அதிக மக்கள் அங்கு நடமாடிக் கொண்டிருந்தார்கள். அங்கு எல்லா இந்தியர்களையும் பார்த்தான். ஏறக்குறைய எல்லா இனத்தவரும் அங்கு காணப்பட்டனர். ஆனால் அழகான முகத்துடன், சோகமான கண்களுடன், நீல நிறச் சேலையணிந்த பெண்ணை அவனால் அங்கு காண முடியவில்லை. "அவளை இன்று பார்த்தல் பின் தொடர்ந்து செல்ல மாட்டேன். நான் காத்திருக்காமல் உடனே பேசுவேன்," என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். காத்தக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாளைப் போல நீண்டதாக இருக்கிறது என்று எண்ணினான். தான் இன்னும் இரண்டு நாட்களுக்கு முன் சிங்கப்பூருக்கு வந்த அதே ராமன்தானா என்ற சந்தேகம் அவனுக்கு உண்டானது. ஏழு மணி நேரத்திற்கு மேலாக அவன் காத்துக்கொண்டிருந்தான். காலை உணவும், மதியச் சாப்பாடும் இல்லாமல் அவன் மிகவும் சோர்ந்து காணப்பட்டான். "நான் நேற்றுப் பார்த்தது ஒரு மாயத்தோற்றம்", என்று எண்ணினான். ஹோட்டலுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினான். அதே நேரத்தில் அவள் வந்து விடுவாள் என்ற நம்பிக்கையும், எக்காரணத்தைக் கொண்டும் இன்று அவளைத் தவற விட்டுவிடக் கூடாது என்ற எண்ணமும் அவனிடம் வலுவாக இருந்தது. மிகுந்த ஏமாற்றத்தால் அவன் தன்னைத் தானே வெறுக்கத் தொடங்கினான். அதற்குக் காரணம், இப்பொழுது அவன் அந்த நீல நிறச் சேலையை அணிந்த அழகியின் மேல் ஒரே குறியாக இருப்பதுதான் என்று எண்ணினான். அதே நேரத்தில் இந்தத் தெரியாத பெண்ணிற்காகத் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறோமே என்று ஆச்சரியப்பட்டான்.

இறுதியாக இன்னொரு நீல நிறப் புடவையணிந்து அந்த இளம் பெண் லட்சணமாக வந்தால். அவள் கோடி போல் மெலிந்து அழகாக இருந்தாள். கம்பீரமான தோற்றத்துடன் ஆனால் சோகமான கண்களுடன் அவள் அவனைக் கடந்து சென்றாள். அவனது உயரத்திர்க்கேற்றவளாகவே அவள் இருக்கிறாள் என்று எண்ணினான். அவள் முடி மிகவும் நீளமாக இருந்தது. அவளைப் போன்ற ஒரு அழகியை அவன் இதுவரை பார்த்ததேயில்லை. இப்பொழுது அவனது பசி மற்றும் சோர்வும் பறந்து போய்விட்டது. அவருடன் உடனே பேச விரும்பினான். ஐந்து பெரிய எட்டில் அவளை அடைந்து "என்ன, எப்படி இருக்கிறீர்கள்," என்று முகம் முழுவதும் சிரிப்புடன் அவளைக் கேட்டான், அவள் நின்றாள்.

"ஹலோ, என்ன வேண்டும் உங்களுக்கு?" அவள் கேட்டாள்.

"நான் இந்தியாவிலிருந்து இப்பொழுதுதான் வந்திருக்கிறேன். உங்களுடன் பேச விரும்பிகிறேன்," என்றான் ராமன்.

"நானும் இங்கு புதிதுதான்," என்று தனது அழகான பேசும் கண்களுடன் அவள் பதிலளித்தாள்.

"அது நல்லது, அப்படியானால் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நாம் சேர்ந்தே சுற்றிப்பார்கலாமே," அவன் ஆலோசனை கூறினான்.

"நீங்கள் சோர்வாகக் காணப்படுகிறீர்களே?" அவள் கேட்டாள்.

அவன் அந்தக் கேள்வியைச் சட்டை செய்யவில்லை.

"எவ்வளவு நாட்களாக நீங்கள் இங்கு இருக்கிறீர்கள்?" அவன் கேட்டான்.

"இரண்டு வாரங்கள், நான் எல்லாவற்றையும் அநேகமாகப் பார்த்து விட்டேன். இந்தக் கோவில் மிகவும் அற்புதமானது. இங்கு நான் தினமும் வந்து கொண்டிருக்கிறேன்." அவள் பதிலளித்தாள்.

அவளது வார்த்தைக்கு புள்ளி வைக்கும் வேலையில் "தினமும் ஒரு நீல நிறப் புடவையுடன்தானா?" அவன் புன்முறுவலுடன் கேட்டான்.

"எவ்வளவு நாட்களாக இங்கு இருக்கிறீர்கள்?" அவள் கேட்டாள்.

"நான் வந்து இரண்டு நாட்களாகிவிட்டது. நான் இன்னும் ஒன்றுமே பார்க்கவில்லை," அவன் சிரித்தான்.

அழகான கண்களால் அவள் அவனைப் பார்த்தாள். அவளது நெற்றியில் உண்டான சுருக்கங்களைக் கூட ராமனால் காண முடிந்தது. "உங்களுக்கு என்ன ஆயிற்று?" ஏன் இவாளவு சோர்வாக இருக்கிறீர்கள்? இந்த கேள்விகளைக் கேட்ட அவளது முகமும் குரலும் அவளது கவலையை காட்டியது. "உடம்பு சரியில்லையா?" கேட்டாள் அவள்.

"நேற்று மதியத்திலிருந்து சாப்பிடாமல் உங்களுக்காக இங்கு காத்துக்கொண்டிருக்கிறேன்," ராமன் மெதுவாக முணுமுணுத்தான்.

அவளது கண்களில் உண்டான ஆச்சரியத்தை அவன் கவனித்தான். சில நொடிகள் அவள் மெளனமாக இருந்தாள். அவனும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அவனது நரம்புகள் தளர்ந்துவிட்டன. மிகுதியான சோர்வை இப்பொழுதான் அவனால் உணர முடிந்தது.

"நாம் எங்காவது ஒரு உணவகத்தில் உட்கார்ந்து பேசலாமா?" என்று கேட்டான் ராமன்.

"எனக்கு ஆட்சேபனையில்லை. பக்கத்தில் ஒரு உணவகம் இருக்கிறது. நாம் அங்கு போகலாமே", அவள் பதிலளித்தாள். அவள் நடக்க ஆரம்பித்தால். அவனும் மெளனமாக அவளைப் பின் தொடர்ந்தான். அவர்கள் எதுவும் பேசாமல் ஐந்து நிமிடங்கள் நடந்தார்கள். அவர்கள் உணவகத்தில் நுழைந்தார்கள். அவள் சாலையை பார்க்கும்படியாக ஜன்னல் பக்கத்திலிருந்த மேசைக்குச் சென்றாள்.

"என்ன சாப்பிடப் போகிறீர்கள்?" அவள் அவனைக் கேட்டாள்.

"நான் ஒரு மிகப்பெரிய ஐஸ்கிரீம் சாப்பிடப் போகிறேன். எனக்கு பசி மிகவும் அதிகம்", ராமன் மெதுவாகச் சொன்னான்.

"நான் ஒரு கப் காபி குடிக்கப்போகிறேன்", என்றாள் அவள். இவற்றை அவள் சர்வரைக் கொண்டு வரச் சொன்னாள்.

அவர்கள் இருவரும் அங்கு காத்துக்கொண்டிருந்த நேரத்தில், "இனிமேல் என்ன நடக்கப் போகிறது", என்று தன்னைத்தானே அவன் கேட்டுக்கொண்டான். நடந்தது எல்லாவற்றையும் அவன் அவளிடம் சொல்ல விரும்பினான். அதே நேரத்தில் அவள் அதைக்கேட்டவுடன் அவனைப் பைத்தியக்காரன் என்று நினைப்பாளோ என்று அஞ்சினான். அவள் அவனது கண்களை கூர்ந்து நோக்கினாள். அவன் ஏன் அவளுக்காகக் காத்துக்கொண்டிருக்க வேண்டுமென்று வியந்தாள். அவன் யார் என்பது அவளுக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்தது. அவன் அவளுக்கு அந்நியன். ஆனால் அவனோடு இங்கு உட்கார்ந்து, காப்பி சாப்பிட்டு அவனது கதையை கேட்பதை அவள் விரும்பினால். ஊர், பெயர் தெரியாத இந்த இளைஞனுக்கு அவள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பது அவளுக்கே விளங்கவில்லை.

ராமன் ஐஸ்கிரீமை மிக வேகமாகச் சாப்பிட்டுமுடித்துவிட்டான். அவள் அவன் சாப்பிடுவதைக் கூர்மையாகக் கவனித்து கொண்டிருக்கும் நேரத்தில் "என் கதையைக் கேட்டால் இவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாளோ? என்னைப் பைத்தியம் என்று நினைப்பாளோ? என்னை உதாசீனம் செய்துவிடுவாளோ?" எண்ணினான் அவன். அவனது மனதுக்குள் சில சஞ்சலங்கள் தோன்றின.

"எதற்காக எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது," அவள் கேட்டாள்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Thursday, August 26, 2010

அவர் ஒரு கிளி ஜோஸ்யர். அவர் அவனைப் பார்த்துக் குழந்தை போலச் சிரித்தார்.

"இன்று உங்கள் அதிர்ஷ்டத்தை எனது கிளியிடமிருந்து தெரிந்து கொள்கிறீர்களா?" என்று கேட்டார்.

இதுவரை ராமன் கிளி ஜோஸ்யம் பார்த்ததில்லை. அதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் அவனும் அதற்குச் சம்மதித்தான். ஒருவேளை லிட்டில் இந்தியாவின் நல்ல சூழ்நிலைதான் தன்னை சம்மதிக்க வைத்ததோ என்று எண்ணினான். கிளி ஜோஸ்யர் தனது சீட்டுக்களைக் கலைத்தார். தனது கிளியிடம் ஏதோ முணுமுணுத்தார். தானியங்களைப் பெற்ற கிளி, சீட்டைத் தேட ஆரம்பித்தது. "கிளி அளவில்லாமல் அதிக நேரம் சீட்டைத் தேடுகிறது", என்று பொறுமையில்லாமல் நினைத்தான் ராமன். ஏன் இவ்வளவு அவசரம் என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான்.

இறுதியாக கிளி ஜோஸ்யரின் குரல் ராமனின் கவனத்தை ஈர்த்தது.

"நீங்கள் இங்கு உங்கள் அதிர்ஷ்டத்தை சந்திக்கத்தான் வந்திருக்கிறீர்கள்", சிரித்த முகத்துடன் கிளி ஜோஸ்யர் கூறினார்.

"எனது அதிர்ஷ்டம், என்ன அர்த்தத்தில் சொல்கிறீர்கள்?" ராமன் கேட்டான்.

"நீங்கள் சிங்கப்பூருக்கு உங்கள் வாழ்க்கை துணைவியைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள் என்று எனது கிளி கூறுகிறது," என்பதுதான் கிளி ஜோஸ்யரின் பதில்.

ராமன் பலமாக சிரித்தான். தான் இன்னும் தனது வாழ்வில் காதல், திருமணம், குழந்தைகள் மற்றும் குடும்பத்தைப் பற்றி எண்ணிப் பார்த்ததில்லை என்றும் கூறினான். பளபளக்கும் கண்களுடன் கிளி ஜோஸ்யர் தான் சொல்வது உண்மை என்று கூறினார்.

"பொதுவாக யார் இதைப் பற்றி எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் இருப்பதில்லை. ஆனால் உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் காத்திருக்கிறது", பதிலளித்தார் கிளி ஜோஸ்யர்.

"இப்படிச் சொல்லித்தான் நீங்கள் உங்கள் பணத்தைச் சம்பாதிக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் அவளை நான் எங்கு சந்திப்பேன் என்று சொல்ல முடியுமா?" புன்முறுவலுடன் ராமன் கேட்டான்.

அவரின் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியையும் அவனால் காண முடியவில்லை. தனக்குள்ளேயே ஏதோ முணுமுணுத்துக் கொண்டார். கிளியையும் அது எடுத்த சீட்டையும் திரும்பத் திரும்பப் பார்த்தார். இரண்டு நிமிடங்கள் மெளனமாக இருந்தார். ராமன் அங்கிருந்து போகக் கிளம்பினான். கிளி ஜோஸ்யரின் கணீரென்ற குரல் அவனை தடுத்து நிறுத்தியது. "சைனா டவுனிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு நீங்கள் அவளைச் சந்திப்பீர்கள். நான் உங்களுக்கு இன்னொரு ஆலோசனையையும் சொல்ல விரும்புகிறேன்" என்றார் அவர். ராமன் அவரை ஆர்வத்துடன் கூர்ந்து கவனித்தான்.

"இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிடாதீர்கள்", என்பதுதான் கிளி ஜோஸ்யரின் கடைசி வார்த்தைகள்.

"நடந்ததெல்லாம் ஒரு கனவா?", ராமன் எண்ணினான். இதை அவனால் நம்பவே முடியவில்லை. ஒரு அழகான பெண்ணை எந்தவிதமான கேட்ட நோக்கமும் இல்லாமல் ஏறிட்டுப் பார்க்க அவனுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை. அவனுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. ஒரு பெண்ணை மனதில் கூட கெடுக்கக்கூடாது என்பது அவனது அழுத்தமான ஒழுக்க முறைபாடு. இப்பொழுது ஒரு பெண்ணை எப்படி மற்ற எண்ணத்தோடு பார்ப்பது என்பதை நினைத்து சஞ்சலமடைந்தான். ஆனால் சைனா டவுனுக்குச் சென்று மாரியம்மன் கோவிலைப் பார்க்குமாறு ஒரு குரல் அவனுக்குள்ளிருந்து கூறியது. மாரியம்மன் அவனுக்கு என்ன முடிவு செய்திருக்கிறாள் என்பதை அறிய ஆர்வமாக இருந்தான்.

மின்சார ரயில் மூலமாக சைனா டவுனை அடைந்தான். ஒரு பெஞ்சில் உட்கார்ந்து அதைப்பற்றிய விபரங்களை வாசிக்க ஆரம்பித்தான். சைனா டவுனின் சரித்திரம் 1821ம் வருடம் ஆரம்பித்தது. சைனாவிலுள்ள "சியாமென்", "ப்யூஷியன்" மாகானத்திலிருந்து சைனாக்காரர்கள் இங்கு முதன் முதலாக வந்த பொது தொடங்கிய கதை இது. வந்தவர்கள் எல்லாம் ஆண்கள். இவர்கள் சிங்கப்பூர் நதியின் தெற்குப் பக்கத்தில் தங்கினார்கள். இன்று இந்த இடம் டெலோக் அயர் என்று அழைக்கப்படுகிறது. சைனா டவுனின் முதல் பெயர் "ந்யுசேஷ்யுயி". இதன் அர்த்தம் காலை மாட்டு வண்டித்தண்ணீர். இந்த பெயருக்குக் காரணம் அப்பொழுது "அன்சியாங்" மலையிலிருந்து அல்லது ஸ்ப்ரிங்க்ஸ் தெருவிலிருந்து கொண்டு வந்ததால்தான். ராமன் தனது கண்களை மூடினான். அவனது கண் முன்னால் அங்கு 1821ல் நடந்த காரியங்கள் படம் போல ஓடின. அவன் மேலும் சைனா தானைப் பற்றி வாசிக்க ஆரம்பித்தான்.

சைனா டவுனில் சைனக்காரர்களைத் தவிர வேறு இனத்தவரும் வாழ்கிறார்கள். எல்லோரும் இப்படி எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் வாழ்வதுதான் சிங்கப்பூரில் அவனை மிகவும் கவர்ந்த விஷயம். தென் பாலச் சாலையில் உள்ள "ஜமே மசூதியும்", "மாரியம்மன் கோவிலுமே" அல்லது டெலோக் அயரிலிருந்த "அல் அப்ரர் மசூதியுமே" இதற்கான அழகான உதாரங்கலாகும். இது சைனா டவுனின் ஒற்றுமையான மதம் மற்றும் இனத்தின் கூட்டு வாழ்விற்கான சாட்சிகளாகும். சிங்கப்பூர் முழுவதுமே இதைப் போலத்தான் இருக்கிறது என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டான். ஒரு சைனாக்காரனின் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறித் தென் பாலச் சாலையை அடைந்தான்.

தென் பாலச் சாலை, கதவு என் 244. மாரியம்மன் கோவிலுக்கு முன்பாக ராமன் பல நிமிடங்கள் மெளனமாக நின்றான். சிங்கப்பூரின் இந்தப் பழமையான கோவில் திராவிட நாகரீக அலங்காரத்தில் கட்டப்பட்டிருந்தது. இது சைனா டவுனின் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கிறது. ராமன் தமிழ்நாட்டில் பல கோபுரங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறான். மாரியம்மன் கோவில் வாசலிலிருந்த கம்பீரமான கோபுரத்தைக் காண மிகவும் பெருமையடைந்தான். இந்தக் கோபுரம் ஆறு அடுக்குகளாக கட்டப்பட்டிருந்தது. இவை கடவுள்களின் சிலைகள், மதப் புராணக்கதைகள், கலாச்சாரத்தையோட்டிய சிலைகளால் வியக்கத்தக்க வகையில் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. கோவிலுக்குள் நுழைந்த பொழுது வலது பக்கத்திலிருந்த முருகக் கடவுள் அவனைக் கவர்ந்தார். இடது பக்கத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் கிருஷ்ண பகவான். இது அவனது உடம்பிற்குள்ளும் உள்ளத்திற்குள்ளும் மின்சாரம் பாய்வதைப் விரைவான, அதிகமான சக்தியைக் கொடுப்பதை அவன் உணர்ந்தான். அதை அனுபவிக்கும் பொழுது அவனது மனம் அளவில்லாத மகிழ்ச்சியினால் நிறைந்திருந்தது. பல நிறங்களைக் கொண்ட கோபுரம் அவனது கற்பனைகளைத் தூண்டிவிட்டது. ஒரு நீல நிறச் சேலையை அணிந்த பெண்ணைச் சந்திக்கப் போவதாக அவனது மனம் நினைத்துக் கொண்டது. அவனது கற்பனையில் அந்தப் பெண்ணின் முகத்தையும் உருவத்தையும் சித்தரிக்க முயன்றான். ஆனால் அதைப் பற்றி அவனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. "அவள் இங்கு எங்காவது இருக்கிறாளா?" என்று எண்ணினான். அதே நேரத்தில் தான் அப்படி ஒரு நீலச் சேலை அணிந்த பெண் இருப்பதை நம்புவதை நினைத்துத் தன்னைத் தானே மிகவும் கடிந்து கொண்டான்.

நேரம் மதியம் ஒரு மணியைக் கடந்துவிட்டது. ராமனுக்குப் பசிக்கவில்லை. அவன் அந்த தெரியாத நீல நிறச் சேலையணிந்த பெண்ணிற்காகக் காத்திருப்பதாக முடிவு செய்தான். மாலை மணி ஐந்தாக இன்னும் சில நிமிடங்களே இருந்தன. அப்பொழுது நீல நிறச் சேலையணிந்த ஒரு பெண் கோவிலுக்குள் வருவதைக் கவனித்தான். அவன் நின்ற இடத்திலிருந்து அவளது முகத்தை அவனால் காண முடியவில்லை. அவளைப் பின் தொடர்வதாக முடிவு செய்தான். கோவிலில் அதிகக் கூட்டம் இருந்தது. மூன்று மீட்டர் தூரத்தில்தான் அவள் இருந்தாலும், அதிகமான கூட்டத்தினால் அவனால் அவளை நெருங்க முடியவில்லை. அவளது மென்மையான நடையையும் கம்பீரமான அசைவுகளையும் கண்டு வியந்தான் ராமன். திடீரென்று முதுகில் ஏதோ அழுத்துகிறது போன்ற எண்ணத்தில் அவள் திரும்பிப் பார்த்தாள். இந்தச் சில நொடிகளில் அவனது கண்கள் அவளைப் படம் பிடித்துக்கொண்டன. அவள் முகம் மிக அழகாக இருந்தது. ஆனால் அவளது கண்களில் சோகம் இருப்பதாக அவன் எண்ணினான். இந்த எண்ணங்களுடன் அவளை தொடர விரும்பினான். ஆனால் அவளைக் காணவில்லை. அவன் மிகவும் சஞ்சலமடைந்தான். அவளை எல்லா இடங்களிலும் தேடினான். ஆனால் அவள் காற்றில் மறைந்தது போல் காணாமலேயே போய்விட்டாள். அவனுக்குண்டான குழப்பத்தில் நீல நிறச் சேலையை அணிந்து ஒரு பெண்ணைப் பார்த்தோமா, இல்லையா என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது. மனக் கலக்கத்துடன் ஹோட்டலுக்குத் திரும்பி வந்தான். சாப்பிடக்கூட மனமேயில்லை. அவனால் தூங்கவும் முடியவில்லை. நீண்ட இரவு. மறுநாள் காலையில் லிட்டில் இந்தியாவிற்கு சென்று கிளி ஜோஷ்யரைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Tuesday, August 24, 2010

ஒரு நல்ல, வெப்பமான காலையில் ராமன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கிளம்பினான். விமானத்தில் அவனை மளந்த முகத்துடனும் வரவேற்ற விமான பணிப்பெண், சிங்கப்பூர் இளைஞர்களுக்கு நல்ல இடம் என்றும் அங்கு அவனுக்கும் பலவித ஆச்சரியங்கள் காத்திருக்கும் என்றும் புன்முறுவலுடன் கூறினாள். அவனும் அது என்ன ஆச்சரியமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே அவளை நோக்கி சிரித்தான். அவன் மனம் கீழ்க்கண்டவாறு எண்ணத் தொடங்கியது. "தமிழ் நாட்டை விட நிறைய வித்தியாசமாக இருக்கும், மிகவும் சுத்தமாக இருக்கும்." எல்லாமே மிகுந்த கட்டுப்பாடாக இருக்கும். அரசாங்கம் மக்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை முடிவெடுக்கும். இதற்கு மேல் இன்னும் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது? அவன் மனதில் எண்ணங்கள் அலை பாய்ந்தன. சிங்கப்பூர் மக்களால் உருவாக்கப்பட்டு அங்கு பேசப்படும் சிங்கலிஷ் [சிங்கப்பூர் பாஷை + ஆங்கிலம்] பற்றி நினைத்தவுடன் அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.

விமானப் பயணத்தை ராமன் ரசித்தான். விமானத்தில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் வயதானவர்களும் இருந்தார்கள். அவனுக்கு குடிபானங்கள், சாப்பாடு இவற்றைக் கொடுத்த விமான பணிப்பெண்கள் அவனிடம் மிகவும் அன்பாக பேசினார்கள். ஆனால் அவன் மனம் இன்னும் சிங்கப்பூரிலேயே இருந்தது. அங்கு என்ன நடக்கும், நடக்கலாம் என்ற நூதனமான எண்ணங்கள் அவனது தலையில் ஓடிக்கொண்டிருந்தன. அவன் சிங்கப்பூரைத் தனியாகவே சுற்றிப் பார்க்க முடிவு செய்திருந்தான். அப்பொழுதுதான் தனக்கும் பிடித்த இடத்தில் அதிக நேரம் இருக்கலாம், மற்ற இடங்களுக்கு போகாமலேயே இருக்கலாம் என்று எண்ணினான். இந்த 21வது இளம் வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி எந்தவித முடிவும் இப்போது எடுக்க முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வேலை செய்வதுதான் நல்லது என்ற தன முடிவைப் பற்றி எண்ணினான். அதற்கு ஊன்றுகோலாக இருந்த தன் மாமாவின் அறிய வார்த்தைகள் அவனது நினைவிற்கு வந்தன. "வாடா அமெரிக்காவில் அல்லது ஐரோப்பாவில் உன்னால் அதிக பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் அதற்கு நீ கொடுக்கும் விலை இந்தியாவிலுள்ள சமூக, குடும்ப வாழ்க்கையை இழப்பதுதான். உதாரணமாக இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் பொழுது ஐரோப்பாவில் வேலை செய்ய வேண்டியது இருக்கும். குடும்பத்திலுள்ள பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்களுக்கும் கூட நினைத்தவுடன் ஊர் செல்லவும் முடியாது. இள வயதில் யாரும் இதைப் பற்றி அதிகம் நினைப்பதில்லை, ஆனால் வயதாக வயதாக அதனால் மிகவும் மன வருத்தப்பட நேரும். இந்த அறிவுரைகள்தான் அவன் இந்தியாவில் வேலை செய்து வாழ விரும்புவதின் முக்கிய காரணமாகும். ஒரு வருடம் வேலை பார்த்து விட்டு முதுநிலைக் கல்விக்குச் சென்று அதன் பிறகு ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெறுவதே அவனது குறிக்கோள். இந்த எண்ணங்களெல்லாம் பிரயாணத்தின் பொது அவனது மனதில் ஓடியது. நேரம் போனதே தெரியவில்லை. விமானம் சிங்கப்பூரை அடைந்தது.

சிங்கப்பூர் விமான நிலையம் மிகவும் சுறுசுறுப்பாக ஆனால் பரபரப்பாக இருந்ததது. ராமன் ஒரு அழகான இளைஞன். எல்லாருமே அவனிடம் அன்புடன் இருந்தார்கள். விமான நிலையத்தின் பிரயான விதிமுறைகளை முடித்து அவன் வெளியே வந்தான். ஒரு டாக்சியை பிடித்து தனது ஹோட்டலை அடைந்தான். அது ஒரு நல்ல வசதியான ஹோட்டல். ரிசப்ஷனில் இருந்த கவர்ச்சியான பெண் அவனைச் சிரித்த முகத்துடன் வரவேற்றாள். அவனுக்கு எந்த உதவியையும் செய்யத் தயார் என்று கூற, அவனும் புன்முறுவலுடன் அதை ஏற்றுக்கொள்வதாகத் தலையை அசைத்தான். தனது அறையின் சாவியைப் பெற்றுக்கொண்டு, தன் அறையை அடைந்தான். சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு, குளித்து விட்டு லிட்டில் இந்தியாவை பார்க்க அவன் விரும்பினான்.

லிட்டில் இந்தியா தமிழ் நாட்டைப் போலவே இருந்தது. எங்கும் மிகவும் சுத்தமாகவும், பலவித நிறங்களைக் கொண்டதாகவும் இருந்தது. சிங்கப்பூரின் சுத்தத்தைப் பற்றி அவன் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் அதை அனுபவிப்பது அவனுக்கும் மிகவும் பிடித்திருந்தது. தான் நடப்பதால் தரையும், சாலையும் அழுக்காகிவிடுமோ என்று நடக்கக் கூட தயங்கினான். இது வேறு உலகம். ஆனால் ஐரோப்பாவோடு ஒப்பிடும்போது இங்கு வெப்பம் அதிகம் என்பதை நேரிலேயே தெரிந்து கொண்டான். ரேஸ் கோர்ஸ் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது ஏதாவது சாப்பிட்டால் நல்லது என்று நினைத்தான். பனானா லீப் ஜேகியில் தேநீர் குடித்து விட்டு தமிழ்நாட்டுப் பலகாரங்களையும் சுவைத்தான். பக்கத்துச் சாலையின் வழியாக சென்று செரங்கூன் சாலையை அடைந்தான் ராமன். வீரமாகாளியம்மனின் கோவிலைப் பார்த்தபொழுது தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோவிலின் முன்பு நிற்பது போன்ற உணர்ச்சியே அவனது மனதில் நிறைந்தது. அது மிகவும் புழுக்கமான, வெப்பமான நாளாக இருந்ததால் அடுத்த நாள் அந்தக் கோவிலுக்குள் சென்று பார்க்கலாம் என்று தீர்மானித்தான்.

மாலை நாலரை மணிக்கு ஹோட்டலுக்குத் திரும்பிச் செல்ல ராமன் முடிவு செய்தான். எல்லா பக்கங்களிலிருந்தும் மக்கள் அதிகமாக வந்து போய்க் கொண்டிருந்தார்கள். சைனாக்காரர்கள், மலேயர்கள், தமிழர்கள் மற்றும் ஊர் சுற்றிப் பார்க்க வந்த பல வெளி நாட்டவர் அங்கு இருப்பதைப் பார்த்து வியந்தான். எல்லாருடைய முகமும் மலர்ச்சியாக இருந்தது. அவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று எண்ணினான். சில கணங்கள் தனது வருங்காலத்தைப் பற்றியும் எண்ணினான். அவனது கண்களுக்கு முன் பல நிறங்களைக் கொண்ட படம் தோன்றியது. அந்தப்படத்தில் பல அழகிய நிறங்கள் இருந்தாலும் அதனுள் எந்த உருவத்தையும் அவனால் காணமுடியவில்லை. அவன் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். அவனைக் கடந்து சென்ற ஒரு இளம் சைனாக்காரி அவனை விநோதமாகப் பார்த்தால். 191 செ.மீ. உயரமுள்ள, பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும் ராமன் தனது வசீகரக் கவர்ச்சியைத் தனது வீட்டில் எங்கும் காட்டியதில்லை. மின்சார ரயிலைப் பிடித்துத் தனது ஹோட்டலையடைந்தான். ஹோட்டலில் ரிசப்சனுக்கு அருகில் பலர் அமர்ந்திருந்தார்கள். ஆனால் அங்கு உட்கார்ந்து அவர்களோடு உரையாட அவனுக்கு விருப்பமில்லாததால் தனது அறைக்குச் சென்றான். அறையில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் இந்திய மற்றும் தமிழ்ச் சேனல்களும் வந்தன. அவனது வீட்டிலேயே இருப்பது போல் உணர்ச்சி அவனுக்கு உண்டானது. பெற்றோருக்குப் போன் பண்ணி விட்டு விளக்கையும் அணைத்துவிட்டு உடனேயே நித்திரையில் ஆழ்ந்தான்.

தூக்கத்தில் ராமன் ஒரு கனவு கண்டான். அழகான பளிச்சென்றிருந்த நிறங்களுக்கு நடுவில் ஒரு முகத்தைக் கண்டதாக எண்ணினான். ஆனால் அந்த முகம் தெளிவாக இல்லை. அவனுக்கு எதுவுமே நன்றாக நினைவில் இல்லை. கடைசியில் ஆழ்ந்து தூங்கினான். அவன் கண் விழித்த பொழுது வெளியில் சூரிய வெளிச்சம் மிகவும் பிரகாசமாக இருந்தது. அது அவனை ஒரு மறக்க முடியாத துணிகரச் செயலுக்கு இழுப்பதைப் போலிருந்தது. இந்த இளைஞனுக்கு என்ன நடக்கப் போகிறது? எவருக்கும், எப்பொழுது என்ன நடக்கும் என்று தெரியாது. அதுதானே வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. அவன் எழுந்து பால்கனியின் கதவைத் திறந்தான். சூரிய வெளிச்சத்தினுடன் வழியிலிருந்து வந்த சுத்தமான காற்றை அனுபவித்தான்.

சிங்கப்பூரில் எல்லா இனத்தைச் சேர்ந்த மக்களும் சமாதானமாக, நன்றாக வாழ்வதைப் பற்றி சந்தோசப்பட்டான். இந்தியாவில் உள்ள ஜாதி, இன, மதப் பிரச்சினைகளைப் பார்க்கும் போது சிங்கபூர் ஒரு கனவுலகம் என்று எண்ணினான். ஆனால் இந்தியாவிலுள்ள பல நல்ல விஷயங்களையும் அவன் மறக்கவில்லை. ஆனால் ஒரு மாநிலத்தில் வசிப்பவர்கள் மற்ற மாநிலத்தோரை விரோதிகள் போல நினைப்பதும், நடத்துவதும், தண்ணீர் மற்றும் இயற்கை வளங்களுக்காக நடக்கும் தகராறுகளும் அவன் மனதைப் புண்படுத்தியது. ஏன் இந்தியாவிலும் ஒரு சிங்கப்பூர் உருவாகக்கூடாது என்று எண்ணினான். இந்தியக் கலாச்சாரத்திலும் அரசியலிலும் அவனுக்கு மிக ஆர்வம் இருந்ததால் அவனது மனதில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் தோன்றின.

ஹோட்டலில் வரவேற்பு முகப்பில் இருந்த இளம் பெண் அவன் அங்கு வந்தபோது முகம் முழுவதுமான சிரிப்புடன் காலை வணக்கத்தைத் தெரிவித்தாள்.

"இன்று நீங்கள் என்ன பார்க்கப் போகிறீர்கள்?" என்று கேட்டாள்.

"லிட்டில் இந்தியாவிலுள்ள கோவிலைப் பார்க்கப்போகிறேன்," என்றான் ராமன்.

"அது நல்லது, ஆனால் முதலில் சைனா டவுனிலுள்ள மாரியம்மன் கோவிலைப் பாருங்கள். ஏனெனில் அதுதான் சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் கோவில்", என்றால் அந்த இளம் பெண்.

அவள் அவனுக்கு சிங்கப்பூரில் பார்க்கவேண்டிய இடங்களைப் பற்றியும், சரித்திரத்தைப் பற்றிய தகவல்கள் உள்ள சிறு புத்தகங்களை படிக்கவும் விரும்பினான். காலையில் ஒன்பதரை மணிக்கு அவன் ஹோட்டலை விட்டு வெளியேறினான்.

ராமன் லிட்டில் இந்தியாவை அடைந்தவுடன் மசாலாவின் நல்ல மனமும், பிச்சிப்பூவின் மணமும் அவனை வரவேற்றன. தங்க நகைகள், வெள்ளி மற்றும் பித்தளைப் பாத்திரங்கள், பொருட்கள், அழகான பலவித கண்களை கவரும் சேலைகள் அவனுக்கு சென்னையின் தி.நகரையே ஞாபகத்திற்குக் கொண்டு வந்தன. தன்னைச் சுற்றியுள்ள பொருட்களையும் மனிதர்களையும் அவன் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தான். லிட்டில் இந்தியாதான் சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களின் முக்கியமான இடம். மிகப்பெரிய தெக்கா மையம் மற்றும் லிட்டில் இந்தியா ஆர்கேடிலிருந்து சின்னச் சின்ன மளிகைக் கடைகள் வரை ஒரு இடம் காளியில்லாமல் கடைகள் நிறைந்திருந்தன. ஒவ்வொரு கடையிலும் எல்லா நிறங்களிலும் பலவிதப் பொருட்கள் விற்கப்பட்டன. விருப்பம் உள்ளவர்கள் மணிக்கணக்கில் அங்கு தங்களுடைய நேரத்தை செலவழிக்கலாம்.

கோவில்கள், மசூதிகள் மற்றும் கிறித்தவ தேவாலயங்கள் மிகவும் அருகிலேயே இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். இது ஒரு மதச்சார்பில்லாத நாடு என்று என்னும் பொழுது இந்தியாவிலுள்ள நிலைமையும் அவன் கண்கள் முன் ஓடியது. இந்த எண்ணங்களுடன் அவன் வீரமாகாளியம்மன் கோவிலை அடைந்தான். திடீரென்று ஒருவர் அவனை அழைத்தார்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Monday, August 23, 2010

ராமன் அவனுடைய மாமாவிடமிருந்து வந்த கடிதத்தை நூற்றியோராவது முறையாக வாசித்தான். இந்த கடிதம் ஜெர்மனியிலுள்ள ஹேம்பர்க் நகரில் வசிக்கும் அவனது மாமாவிடமிருந்து வந்தது. ராமன் இப்பொழுதுதான் B.E. படித்து முடித்திருந்தான். அவன் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் அவனுக்கு சிங்கப்பூரில் ஒரு வார விடுமுறையைப் பரிசளித்திருந்தார். "சிங்கபூருக்கு சென்று இந்தியாவிற்கும் சிங்கபூருக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்து விட்டு அதன் பிறகு இந்தியாவிற்கு நல்லது செய்யக் கனவு காண்." இதுதான் அவர் எழுதியிருந்த கடிதத்தின் முக்கியமான வாக்கியம்.

தனது பெற்றோர்களுடன் ஜெர்மனியில் இருந்த நாட்களைப் பற்றி அவன் சிந்தித்தான். மாமாவைப் பார்ப்பதற்காக அவர்கள் சென்றிருக்கிறார்கள். அப்பொழுது அவனுக்கு வயது ஏழு அல்லது எட்டு இருக்கும். இந்த வயதில் அவனுக்கு எல்லாமே வியப்பாகவும், மறக்க முடியாததாகவும் இருந்தது. விமானப் பயணத்திலிருந்து அவன் பார்த்தது, கேட்டது அவனுக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருந்தது. ஹேம்பர்க் ஐரோப்பாவிலுள்ளதிலேயே மிகவும் பசுமையான நகரம். இங்கு பாரிசில் இருப்பதை விட அதிக பாலங்கள் உள்ளன. ஆம்ஸ்டர்டாமில் இருப்பதை விட அதிக கால்வாய்கள் உள்ளன. அங்குள்ள சுத்தம் மற்றும் அவர்களது தொழிலியல் நுட்பம் அவனது மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அவன் போயிருந்த வசந்த காலத்தில் எங்குமே மிகப் பசுமையாக இருந்தது. அளவில்லாமல் காணப்பட்ட பலவித நிறங்களைக் கொண்ட பூக்கள் அவனை மிகவும் கவர்ந்தன. அங்குள்ள தூய்மையும் தொழில் நுட்பமும் அவனது இளம் மனத்தை மிகவும் ஆச்சரியத்துக்குள்ளாக்கின.

முக்கியமான மூன்று விஷயங்கள் அவனது மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. அவை:

1) எல்பே ஆற்றிற்க்கடியிலுள்ள பழைய சுரங்க வழியில் கார், லிப்டின் வழியாக சென்று ஆற்றைக் கடந்ததும், மனிதர்கள் கூட அந்த சுரங்கப்பாதையில் நடந்து செல்வதையும் அவனால் மறக்க முடியவில்லை.

2) அதே எல்பே ஆற்றிற்கு அடியில் கட்டப்பட்ட புதிய சுரங்கப்பாதை நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஒவ்வொரு சுரங்கத்திலும் கார்கள் செல்ல இரண்டு வழிகள் இருந்தன. இந்த சுரங்கங்களுக்கு மேலே ஓடும் எல்பே ஆற்றில் க்வீன்-மேரி 2 போன்ற பிரமாண்டமான கப்பல்கள் செல்வதற்கான துறைமுகம் உள்ளது. ஹேம்பர்க் உலகிலுள்ள ஏழாவது பெரிய துறைமுகம். இது ஒரு ஆற்றுத் துறைமுகம். இதை அடைய கப்பல்கள் வட கடலிலிருந்து 120 கி.மீ. ஆற்றை எதிர்த்துப் பிரயாணம் செய்ய வேண்டும்.

3) ஆனால் அவனுக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது, தென் ஜெர்மனியிலுள்ள ஹைடல்பர்க் என்ற பல்கலைக்கழக நகரில் பார்த்ததுதான். அங்கு ஓடும் நெக்கார் என்ற நதியில் ஒரு கப்பல் பிரயாணத்தின் போதுதான் அதைப் பார்த்தான். கப்பல், ஆற்றை எதிர்த்துப் போகும்போது அல்லது ஓட்டத்தோடு கீழே போகும்போது ஏற்றத்தாழ்வுகள் இருந்ததால் கப்பல் பல மீட்டர்கள் மேலே போகவும் கீழே இறங்கவும் வழி செய்யப்பட்டிருந்தன. கப்பல் ஒரு பெரிய தொட்டிக்குள் சென்று நிற்கும். கதவுகள் இறுக்கமாக அடைக்கப்பட்டு அதில் நிறைய தண்ணீர் செலுத்தப்படும். தண்ணீர் உயரம் கூடக்கூட கப்பலும் மேலே செல்லும். சரியான உயரத்தை அடைந்தவுடன் மறு பக்கத்திலுள்ள கதவுகள் திறக்கப்படும். கப்பல் தனது பயணத்தை ஆரம்பிக்கும். இதை ராமன் நெக்கார் நதியில் பல முறைகள் பார்த்திருக்கிறான்.

கப்பல் திரும்பி வரும் போது கீழே இறங்குவதையும் கண்டு களித்திருக்கிறான். கப்பல் தொட்டிக்குள் வந்தவுடன் கதவுகள் அடைக்கப்பட்டு உள்ளிருந்த தண்ணீர் வெளியேற்றப்படும். கப்பலும் கீழே இறங்கும். நீரின் மட்டத்தை அடைந்தவுடன் கதவுகள் திறக்கப்படும். கப்பலும் கம்பீரமாக தனது பயணத்தை தொடரும். இவை ஜெர்மன் பொறியியலின் சாதனைகள் என்று எண்ணியது அவனது இளமனம். இந்த நிகழ்ச்சிகளை அவன் மறக்கவேயில்லை. இப்பொழுது படித்து முடித்து விட்டு உலகம் முழுவதுமே நல்ல சந்தர்ப்பங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்று எண்ணுகின்றான். சென்னையில் வசிக்கும் ராமனுக்கு இப்படிப்பட்ட சாதனைகளையும் இதற்கு மேலான சாதனைகளை அடையவும் இன்று முன்னேறி வரும் இந்தியா தகுதியான இடமே என்று தோன்றியது.

ராமன் சிங்கபூருக்குப் பயணம் செய்வது என்று முடிவெடுத்துவிட்டான். பாஸ்போர்ட், விசா மற்றும் விமானச் சீட்டு உட்பட பிரயாணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டான். சிங்கப்பூரில் என்னவெல்லாம் பார்ப்பது என்றும் தயார் செய்துவிட்டான். வேலையில் சேர்வதற்கு முன் அவனது விடுமுறையை சிங்கப்பூரில் அனுபவிக்க முடிவு செய்துவிட்டான்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8

Sunday, August 22, 2010

கொக்கோ கோலா குடிப்பதற்கும் எடை கூடுவது அல்லது மிகப்பருமனான உடலுக்குமுள்ள சம்பந்தம் என்ன?

பல குழுக்களின் வாதங்களைக் கேட்கும்போது மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. கொக்கோ கோலா கம்பெனி, கொக்கோ கோலா குடிப்பதற்கும் உடல் எடை கூடுவதற்கும் விஞ்ஞான அடிப்படையில் எந்த ஆதாரமும் கிடையாது என்று கூறுகிறது. ஆனால் வேதியியல் வல்லுநர்கள் மற்றும் உணவுமுறை வல்லுநர்கள் செயற்கை இனிப்பால் உடலில் இன்சுலின் வெளியாவதை ஏற்றுக் கொள்கிறார்கள்.


இந்த செயற்கை இனிப்பு வருகிறது என்ற அறிவிப்பால், இன்சுலின் இரத்தத்தில் கொட்டப்படுகிறது. ஆனால் சர்க்கரை வருவதில்லை. வேலையில்லாத இன்சுலின் உடம்பில் தேவையான அளவில் இருக்கும் சர்க்கரையின் அளவை இன்னும் கீழே கொண்டு போகிறது. அதன் காரணமாக கடும் பசி உண்டாகிறது. அதிகம் சாப்பிடுவதால் எடை கூடுகிறது.

எங்களுடைய பார்வையிலிருந்த அதிகமாக கொக்கோ கோலா குடித்த சக ஊழியர்களின் இரத்த சர்க்கரை அளவு 80 மி.கிக்குக் கீழே வந்தால், அவர்கள் எப்போதும் சாப்பிடுவதை விட கூடுதலாகச் சாப்பிட்டார்கள். நமது உடம்பில் உண்டாகும் இன்சுலினை மறையச் செய்ய வேறு எந்த வழியும் இல்லை.

வயிற்றுப் போக்கை நிறுத்த கொக்கோ கோலா பயன்படுகிறதா?
வயிற்றுப் போக்கை நிறுத்த ஜெர்மனியில் சொல்லும் பாட்டி வைத்தியம், கொக்கோ கோலாவும், சால்ஸ்டாங்கன் (Salzstangen) என்னும் கோதுமை மாவில் செய்யப்பட்ட, சேவு போன்ற உப்புக்கட்டிகள் கலந்த நொறுக்குத் தீனியும்தான். ஏனென்றால் இதன் மூலம் உப்பும், இனிப்பும், திரவமும் கிடைப்பதால் சரியென்றே தோன்றுகிறது. ஆனால், இங்கு இனிப்பு மிகவும் கூடி, உப்பின் அளவு குறைவாக இருப்பதால் இது வயிற்றுப் போக்கை மேலும் தீவிரமாக்குகிறது.

என்னிடம் வந்து ஆலோசனை கேட்போர், இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், நாங்கள் வயிற்றுப் போக்கை நிறுத்துவதற்கு என்னதான் செய்வது? என்று கேட்பர். கொதித்து ஆற வைக்கப்பட்ட ஒரு தம்ளர் தண்ணீரில் அரை டீஸ்பூன் உப்பையும், 5 டீஸ்பூன் குளுக்கோஸும் கலந்து குடிக்கச் சொல்வேன். இதுவே சிறந்த மருந்து.

இதனால் குணமாகாவிட்டால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். ஏனென்றால், பாக்டீரியாகவும் இருக்கலாம்.

மென்டோஸ் பொங்கி வருதல் என்றால் என்ன?
லைட் கொக்கோ கோலாவில் பெப்பர்மிண்ட் மிட்டாயைக் கலந்தால் நீரூற்று போலப் பொங்கி வரும். அதுவே மென்டோஸ் பொங்கி வருதல் என்பது. கொக்கோ கோலாவிலுள்ள காஃபீன், அஸ்பார்டேம், பொட்டாசியம் பென்ஸோவேட், கார்பன்டைஆக்ஸைடு, கம்அராபிக், ஜெலாட்டின் ஆகியவை இந்த மென்டோஸ் பொங்கி வருதலை உண்டாக்குகின்றன. இப்படி ஒரு செயல் நமது உடம்புக்குள் ஏற்பட்டால், நிறைய கார்பன்டைஆக்ஸைடு உண்டாகி உடலுறுப்புகளை சேதமடையச் செய்ய வாய்ப்பு உண்டு. ஆனால் கொக்கோ கோலா கம்பெனி இதை பெப்பர்மின்ட்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று உத்திரவாதம் கொடுக்கிறது.

மற்ற மென்குடிபானங்களுக்கும் இப்படிப்பட்ட தன்மை உண்டு.

கொக்கோ கோலா விந்துக்களைக் கொன்று கருத்தடைக்கு உதவி செய்யுமா?
இது முற்றிலும் தவறு. உடலுறவு முடிந்தவுடன் பெண்கள் கொக்கோ கோலாவினால் பெண்குறியைக் கழுவினால் விந்துக்களைக் கொல்ல முடியாது. இதை ஆதரித்து இணையதளத்திலும் கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. இது முற்றிலும் மூடநம்பிக்கையாகும். மேலும் கொக்கோ கோலாவிலுள்ள இனிப்பு ஈஸ்ட் தொத்துநோயை உண்டாக்கலாம். இதைக் குணப்படுத்துவது மிகவும் கஷ்டம்.

இது ஆப்ரிக்காவில் வெற்றிகரமாக நடக்கிறதென்றால் அதைப் பயன்படுத்தும் நபரின் அதிர்ஷ்டம்தான். இதற்கும் கொக்கோ கோலாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஏனென்றால், விந்துக்கள் முன்பே வேகமாகச் சென்றுவிடுகின்றன. உங்களுக்கு துர்அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் முதல் முறையிலேயே, உடனடியாகக் கர்ப்பம் தரித்து விடுவீர்கள். கர்ப்பத்தைத் தடுக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.


E211 என்றால் என்ன? இது ஆபத்தானதா?
இது ஒரு உணவுச் சேர்மானப் பொருள். E211 அல்லது சோடியம் பென்ஸோவேட் குழந்தைகளின் மிகை இயக்கத்துக்கும, டிஎன்எ (DNA) சேதத்துக்கும் காரணமாகிறது என்று விவாதிக்கப்படுகிறது. கொக்கோ கோலாவும் இதை ஒத்துக்கொண்டு, அதற்குப் பதிலாக பாதுகப்பான சேர்மானப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இதை மாற்றி விடுவதாகத் தெரிவித்துள்ளது. பல மென்குடிபானங்களிலும் சோடியம் பென்ஸோவேட் இருக்கிறது. இது பாட்டிலின் டேபிளில் எழுதப் படுவதில்லை.

கேரளாவுக்கும் கொக்கோ கோலாவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
ஜெர்மனி போன்ற நாடுகளில் 3000 மீ ஆழத்திலிருந்து எடுக்கும் தண்ணீரில் கூட மிகவும் குறைந்த அளவில் பூச்சிக் கொல்லிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவது தொழிற்சாலைகளின் பொறுப்பு. இதற்கான தொழில் நுட்ப வசதிகள், ஃபில்டர்கள் இருக்கின்றன. தவறான இடத்தில் பணத்தை மிச்சப் படுத்துவதுதான் பூச்சிக் கொல்லிகளால் அசுத்தப் படுத்தப்பட்ட தண்ணீருக்குக் காரணம்.

நமது இந்திய அரசு, மென்குடிபானங்களில் உள்ள பூச்சிக் கொல்லி அளவுகளை நிர்ணயிக்க ஒரு குழுவை ஏற்படுத்துயுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

இவ்வளவு தகவல்களைச் சொன்னீர்கள், உங்களுடைய ஆலோசனைதான் என்ன?
உங்கள் உடம்பிலுள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதற்கு தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் 70% குடிதண்ணீராக இருக்கவேண்டும். காப்பி, தேனீர், பழச்சாறுகள் அதிகபட்சம் 2 தம்ளர் குடிக்கலாம். புதிய பழச்சாறுகள் மிகவும் நல்லது. இளநீரும் மிகவும் நல்லது.

கொக்கோ கோலா அல்லது மற்ற மென்பானங்களை எப்பொழுதாவது ஒரு தம்ளர் குடிக்கலாம்.

கொக்கோ கோலா கார்பன்டைஆக்ஸைடு கலக்கப்பட்ட ஒரு மென்குடிபானம். இதில் பாஸ்பாரிக் அமிலம், காஃபீன், மக்காச் சோளத்திலிருந்து உண்டாக்கப்படும் சர்க்கரைக்கலவை, இயற்கைச் சுவைகள் மற்றும் வண்ணம் கொடுக்கும் நிறப்பொருட்களும் இருக்கின்றன. லைட், டயட் மற்றும் ஜீரோ கொக்கோ கோலாவில் செயற்கை இனிப்பான ஆஸ்பார்டம், அஸிசல்ப்ப்ஃபேம் பொட்டாசியம் உள்ளன. டயட் கோக் பிளஸில் வைட்டமின் பி6, பி12, நியாசின், துத்தநாகம் ஆகியவையும் சேர்க்கப்படுகின்றன.

நீங்கள் கொக்கோ கோலா குடிப்பீர்களா?
ஆம். எப்போதாவது அபூர்வமாகக் குடிப்பேன்.

ஏன் அப்படி அபூர்வமாகக் குடிக்கிறீர்கள்?
எப்படிக் கொக்கோ கோலா குடிப்பது என்று எல்லோருக்கும் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் அதன் முழுச் சுவையை மிகவும் அனுபவிக்க வேண்டுமென்றால் இதை 4°செ குளிர்ச்சியில் குடிக்க வேண்டும். ஆனால், இது வெப்பம் மிகுந்த நாட்டில் ஒரு போதும் சாத்தியமில்லை. அது மட்டுமின்றி, நான் மருத்துவ நச்சியல் வல்லுனர் என்பதால் நான் குடிக்கும் எதையுமே மிகவும் கவனமாகப் பார்ப்பேன். ஏனென்றால் பொதுவாக எனக்கு மற்றவர்களை விட கூடுதல் விவரங்கள் தெரியும்.

நான் இன்டர்நெட்டில் கொக்கோ கோலாவைப் பற்றி பல நல்ல விஷயங்களைப் படித்தேன், அது சரியா?
கொக்கோ கோலா, இந்தியா இன்டர்நெட்டில் கொடுத்த நல்ல விஷயங்களை நானும் படித்தேன். ஆனால், ஒரு நாணயதிற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. சரியான தகவல்களை மக்களுக்குக் கொடுப்பதே என்னுடைய கடமை. இன்டர்நெட்டில் யாரும் எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஏனென்றால், அது உண்மையா, பொய்யா என்று பார்த்துக் கட்டுப்படுத்த யாரும் இல்லை. அதுமட்டுமின்றி, கொக்கோ கோலாவைப்பற்றி நிறைய கேள்விகள் இருக்கின்றன. அவற்றுக்கும் நான் இங்கே பதில் அளிக்கிறேன்.

உங்களுக்குக் கொக்கோ கோலா மீது கோபமா?
ஆமாம். ஏனென்றால், நானும் என் மகனும் இந்தியாவுக்கு வந்தபோது ஆசைப்பட்டுக் குடித்த கோல்ட்ஸ்பாட் கொக்கோ கோலாவால் விழுங்கப்பட்டு விட்டது. இது என் தனிப்பட்ட உணர்வே. இங்கு உங்களுக்கு ஒரு ஆலோசனை சொன்னால் அது விஞ்ஞான அடிப்படையில்தான் இருக்கும்.

உலகில் கொக்கோ கோலா பற்றிய பொதுவான அபிப்பிராயம் என்ன?
நமது உலகில் இரண்டு கூட்டங்கள் உள்ளன. ஒன்று இது பிசாசு குடிக்கும் பானம் என்று சொல்கிறது. அடுத்தது இது தேவதைகள் கொண்டு வந்தது என்று சொல்கிறது. இரண்டுமே நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கைதான்.

கொக்கோ கோலாவுக்கும் ஓஸ்டியோபோரோஸிஸுக்கும் உள்ள உண்மையான சம்பந்தம் என்ன?
ஒரு லிட்டர் கொக்கோ கோலாவில் இருக்கும் 140 மிகி பாஸ்பேட் நமது உடம்புக்குள் கால்சியம் செல்வதற்கும், அதன் வளர்சிதைமாற்றதிற்கும் பிரச்சினையை உண்டாக்குகிறது. நல்ல எலும்பின் அடர்த்திக்கு கால்சியம்தான் தேவை. இங்கு உண்டாகும் கால்சியம்பாஸ்பேட்டினால் இந்த வேலையைச் செய்ய முடியாது. எலும்பின் அடர்த்தி குறைந்தால் ஓஸ்டியோபோரோஸிஸ் உண்டாகிறது.

கொக்கோ கோலாவில் மட்டுமல்ல, நாம் சாப்பிடும் எல்லா நவீனப் பதனிடப்பட்ட உணவுகளிலும் பாஸ்பேட் நிறைந்துள்ளது. இவையெல்லாம் நமது உடல் நலத்துக்கு மோசமானவையே.

பாஸ்பேட்டுக்கும், மிகை இயக்கமுள்ள குழந்தைகளுக்கும் தொடர்பு உண்டா?
பாஸ்பேட் அலர்ஜி மிகை இயக்கத்தை உண்டாக்குவதை நான் பல குழந்தைகளிடம் பார்த்திருக்கிறேன். மேல் நாடுகளில் பல இடங்களில் மாதம் ஒருமுறை பாஸ்பேட் உப்புகள் சேர்க்காத ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காக அன்று தேவையான அளவுக்கு வாங்கி குளிர்பதனப் பெட்டிகளில் உறைய வைத்துவிடுகிறார்கள். கொக்கோ கோலாவும் இதைப் போன்ற மற்ற மெகுடிபானங்களும் குழந்தைகளுக்கு நல்லது அல்ல. இவற்ரை நாம் தவிர்க்க வேண்டும்.

ஹார்வர்ட் பொது சுகாதாரப்பள்ளியில் நடத்தப்பட்ட ஆராச்சியின்படி, கொக்கோ கோலாவை தொடர்ந்து குடித்த இளம் பெண்களுக்கு விளையாடும் போது, கொக்கோ கோலா குடிக்காத பெண்களைவிட ஜந்து மடங்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

கொக்கோ கோலா நமது பற்களுக்கு ஆபத்தானதா?
கொக்கோ கோலாவில் உள்ள பாஸ்பரஸ் அமிலம் பற்களின் எனாமலில் உள்ள கால்சியதை நீக்குகிறது. இங்கேதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இது கொக்கோ கோலாவுக்கு மட்டுமல்ல, பாஸ்பேட் உள்ள எல்லா மென்குடிபானங்களுக்கும் பொருந்தும். கொக்கோ கோலாவைக் குடிங்கள். ஆனால், இந்தியர்கள் பிராந்தி குடிப்பது போல, ஒரே மடக்கில் முழுவதையும் குடித்திவிடுங்கள். நாள் முழுவதும் மெதுவாக உறிஞ்சி இரசித்துக் குடிக்கும் பலர் இந்த உலகத்தில் இருக்கின்றனர். இதனால் அவர்களின் வாய் எப்பொழுதும் அமிலத்தன்மை நிறைந்ததாகவே இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எனாமல் சேதப்பட்டு, காரியஸ் நோய் வருகிறது.

எச்சரிக்கை:
கொக்கோ கோலா அல்லது பாஸ்பேட் நிறைந்த மற்ற பானங்களைக் குடித்தவுடன் பல்லைத் தேய்க்க வேண்டாம். உட்னடியாகப் பல் தேய்த்தால் கால்சியம் இழப்பு அதிகமாகிவிடும்.

மருத்துவர்கள், டயட்டீஷியன்கள் ஒரு தம்ளர் கொக்கோ கோலா குடித்தால் எந்தத் தீங்கும் ஏற்படாது என்று சொல்கிறார்கள். ஆனால் தினமும் ஒரு லிட்டர் குடித்தால் பிரச்சினைதான். தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை குடிப்பவர்களும் இருக்கிறார்கள்.

மேல் நாடுகளில் பலர், இளம் ஆண்கள், பெண்கள் உட்பட, விரும்பிக் குடிக்கும் பானம் கொக்கோ கோலாவுடன் பக்கார்டி ரம் அல்லது விஸ்கி கலந்த பானம்தான். இவர்கள் சில மணி நேரங்களில் இரண்டு அல்லது மூன்று லிட்டர் கூடக் குடிக்கிறார்கள். இது மிகவும் மோசமான பழக்கம்.

கொக்கோ கோலாவுக்கும் இறைச்சிக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?
கொக்கோ கோலா இறைச்சியைக் கரைக்கும் என்ற மிகப் பெரிய மூடநம்பிக்கை நிலவி வருகிறது. ஒரு இறைச்சித் துண்டை இரவு முழுவதும் கொக்கோ கோலாவில் ஊற வைத்தால் அது தடித்து, பருமனாகி, பார்ப்பதிற்கு வேடிக்கையாகவும் இருக்கிறது. ஆனால் அது கரைவதில்லை. கொக்கோ கோலாவுக்கு எதிராக இருக்கும் கூட்டம் பாஸ்பாரிக் அமிலம் அன்ற பெயரைக் கேட்டவுடன் இந்த மூடநம்பிக்கையைப் பரப்பிவிட்டது.

நமது வற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் மிகவும் சக்தி வாய்ந்தது. கொக்கோ கோலாவால் நமது இறைப்பையின் தசைகளுக்கு எந்த விதத் தீங்கும் கிடையாது. கொஞ்சம் குடித்து மகிழ்ச்சியாக இருங்கள்.

கொக்கோ கோலாவிற்கும் சர்க்கரை வியாதிக்கும் உள்ள சம்பந்தம் என்ன?
கொக்கோ கோலா உருவாக்கும் செலவைக் குறைப்பத்ற்காக 1985 முதல் மக்காச் சோளத்திலிருந்து உருவாக்கப்படும் இனிப்பு (சீனி, பழச்சர்க்கரைக் கலவை) உபயோகப்படுத்தப் படுகிறது. இதில் இரண்டு ஆபத்துக்கள் இருக்கின்றன. இரத்தச் சர்க்கரையின் அளவு கூடும். அதிக சீனியும், பழச்சர்க்கரையும் ஈரலில் கொழுப்பாக மாற்றப்படும். எடை கூட, சர்க்கரை வியாதி வரும் ஆபத்தும் கூடும். இந்த மக்காச் சோள இனிப்புப் பாகு மரபணு மாற்றப் பட்ட மக்காச் சோளத்திலிருந்தும் வரலாம்.

பழச்சர்க்கரை ஈரலில் வளர்சிதைமாற்றம் அடைகிறது. மதுவும் சுற்றுப்புறச் சூழலால் உடம்பில் சேரும் நச்சுப்பொருட்களும் ஈரல் வழியாகத்தான் வெளியேற்றப் படுகின்றன. ஈரலின் வேலைப் பளு மிக அதிகமாகிறது.

                                                                                                                                      தொடரும்...

Saturday, August 21, 2010

மாதவிடாயைத் தூண்டும் தன்மை எள்ளுக்கு உண்டு. ஆகையால் கர்ப்பமான பிறகு மூன்று மாதங்களுக்கு எள் சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது.

எள்ளிற்கு மாதவிடாயைத் தூண்டும் தன்மையிருப்பதால் திடீர் கருச்சிதைவு உண்டாகச் சந்தர்ப்பம் இருக்கிறது. இது கர்ப்பிணி மற்றும் அவள் சாப்பிடும் எள்ளின் அளவைப் பொறுத்திருக்கிறது.

பாட்டி வைத்தியத்தில் பிரச்சினையில்லாத, பாதுகாப்பான கருச்சிதைவுக்கு எள் பயன்படுத்தப்படுகிறது. கருச்சிதைவு பொதுவாக பெண்ணின் உடம்பையும் மனதையும் பாதிக்கக்கூடியது. பலரால் வாழ்நாள் முழுவதும் இதை மறக்க முடியாது. இது ஒரு பெரிய உளவியல் பிரச்சினையாகவும் ஆகலாம்.

மருத்துவரிடம் கலந்தாலோசித்து நல்ல, பாதுகாப்பான கருத்தடை முறைகளைப் பின்பற்றுவதுதான் உங்கள் ஆரோக்கியதிற்குச் சிறந்தது.

Friday, August 20, 2010

ஒழுங்கற்ற மற்றும் தவறிய மாதவிடாய்க்கு பல காரணங்கள் உண்டு. பொதுவாக ஹார்மோன் தொந்திரவுகளே இதற்கான முக்கிய காரணம். மற்ற வியாதிகளும் தொற்றுநோய்களும் கூட இந்தப் பிரச்சினையை உண்டாக்கும்.

மகளிரின் இந்த முக்கியமான உடல்நலப் பிரச்சினையைத் தீர்க்க நமது உலகில் பல சாதரண வழிகள் கையாளப்படுகின்றன. இவை:

• முதலில் உடம்புக்குத் தேவையான, சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள். புரதம், இரும்புச்சத்து உள்ள உணவுகள் மிகவும் முக்கியம். பூசணிக்காய், பப்பாளிப்பழம், பேரீச்சம்பழம், முருங்கைக்காய், புடலங்காய், பாவக்காய் மற்றும் வெள்ளரிக்காய் நல்லது. புதிய, பசுமையான அன்று சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுங்கள். ஜங்க்ஃபுட் மற்றும் எல்லா பதனிடப்பட்ட உணவுகளைத் தவிருங்கள்.

• 2 முதல் 4 மாதங்கள் வரை தினமும் புதிதாக பிழியப்பட்ட காரட் சாற்றை குடிங்கள்.

• சிறிது இஞ்சிச்சாற்றில் தேனைக் கலந்து குடிங்கள்.

• இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வெந்தயம் உதவுகிறது.

• எள்ளும் மிக நல்லது.

• பெருங்காயமும் ஃப்ரோஜெஸ்ட்ரோன் என்ற பெண் பாலியல் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்து உதவுகிறது.

• புதினாத் தூளையும் தேனையும் சம அளவில் கலந்து தினமும் 3 முறை சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை தீரும்.

இந்த முறைகளை 2 மாதங்கள் வரை பயன்படுத்தியும் பிரச்சினை தீராவிட்டாலோ, அதிக இரத்தப்போக்கு, இரண்டு மாதவிடாய்களுக்கு இடையில் இரத்தக்கசிவு மற்றும் மிக வலியுள்ள மாதவிடாய் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள்.

Wednesday, August 18, 2010

மரபணுக்கள் இதற்குக் காரணமா என்பது நிச்சயமாக ஒருவருக்கும் தெரியாது. ஆனால் விஞ்ஞானத்தின் மூலமான விளக்கம் மிகவும் சுலபமானது. நமது உணவில் மிக அதிகமாக மாவுப்பொருட்களைச் சேர்த்துக்கொண்டால் சீனியின் அளவு இரத்தத்தில் கூடுகிறது. சக்தியைக் உருவாக்க சீனி இன்ஸுலினின் உதவியோடு எல்லா அணுக்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

இதன் பிறகும் சீனியின் அளவு இரத்தத்தில் அதிகமாக இருந்தால் அதிலிருந்து பெரும்பகுதி ஈரலுக்கு அனுப்பப்பட்டு அங்கு டிரைக்ளிஸரைட்ஸ் என்ற கொழுப்பாக மாற்றப்படுகிறது.

இதைப்போல அளவுக்கு அதிகமான ஃப்ருக்டோஸும் (பழச் சர்க்கரை) ஈரலில் டிரைகிளிஸரைட்ஸாக மாற்றப்படுகிறது.

அளவுக்கு மீறிய புரதத்தைச் சாப்பிட்டால் தேவைக்குப் போக மீதி சீனியாக மாற்றப்படுகிறது. இதனால் சீனியின் அளவு இரத்ததில் கூடும்போது அதுவும் டிரைகிளிஸரைட்ஸாக மாற்றப்படுகிறது.

இதனால்தான் நாம் மாவுப்பொருட்கள், புரதம் முதலியவற்றை அளவாகச் சாப்பிடவேண்டும். சீனி, மைதாமாவைக் குறைந்த அளவு உபயோகிக்க வேண்டும். ஃப்ருக்டோஸ் சேர்க்கப்பட்ட மென்குடிபானங்களைத் தவிர்க்க வேண்டும்.

மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் வரும் ஆபத்தை அதிக அளவு இரத்த டிரைகிளிஸரைட்ஸ் கூட்டுகிறது.

மாவுப்பொருட்களின் அளவைச் சாப்பாட்டில் கட்டுப் படுத்துங்கள். சோற்றின் அளவைக் குறைக்க வேண்டும். சப்பிட்டு முடித்தவுடன் வாழைப்பழமோ அல்லது இனிப்புப் பண்டங்களோ சாப்பிடக்கூடாது. முழுத்தானியப்பொருட்கள் மற்றும் தேவையான உடற்பயிற்சியுடன் எந்த மருந்துகளும் இல்லாமல் டிரைகிளிஸரைட்ஸின் அளவைக் குறைக்க முடியும்.

Tuesday, August 17, 2010

மஞ்சள் இஞ்சியினத்தைச் சேர்ந்தது. இது ஒரு மசாலாப் பொருள். ஆனால் இது ஒரு நல்ல மருந்துமாகும். இது வேகவைக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு, அரைக்கப்படும்பொது மஞ்சள் பொடியாகிறது. மஞ்சளில் உள்ள முக்கியமான பொருள் குர்குமின்.

மேல் நாட்டினர் தங்கள் உணவுகளில் மஞ்சளைப் பலவிதங்களில் பயன்படுத்துகின்றனர். இது உணவுக்கு வண்ணம் கொடுக்கும் பொருளாக உபயோகிக்கப்படுகிறது. மென்குடிபானங்கள், பேக்கரி பொருட்கள், பாலிலிருந்து செய்யப்படும் பொருட்கள், ஜஸ்கிரீம், ஆரஞ்சுப்பழ குடிபானம், பிஸ்கட், பாப்கார்ன், ஜெலாடின், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது.

நாம் தினமும் மஞ்சள் கலந்த மசாலாவைப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். நமது கறி பவுடர்தான் உலகில் மிகவும் தெரிந்த, முக்கியமான மசாலா கலவையாகும். தென் ஆசியாவில் இது அதிகமாக உபயோகிக்கப்படுகிறது.

ஆயுர்வேத முறைப்படி தீக்காயம், வெட்டுக்காயங்களில் மஞ்சள் கிருமிநாசினியாகப் பயன்படுகிறது. இக்காயங்கள் பரவாமல் தடுக்கும் நச்சுத்தடுப்பானாகவும் மஞ்சள் பயன்படுகிறது. இதிலிருக்கும் ஃப்ளோரைடு நமது பற்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வயிற்றில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதைக் குணப்படுத்தவும் மஞ்சள் உபயோகப்படுத்தப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக மஞ்சளில் உள்ள குர்குமினைப் பற்றி தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மனித உடலில் உபயோகப்படுத்தி கடைசிக் கட்டமான மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்த ஆராய்ச்சிகள் கீழ்க்கண்ட வியாதிகளைக் குணப்படுத்த நடைபெறுகின்றன:

• வாதத்தினால் வரும் மூட்டு வீக்கங்கள்
• ஒவ்வாமை
• ஆல்ஸ்ஹைமர் வியாதி
• கணையம் புற்றுநோய்
• மலக்குடல் புற்றுநோய்
• நிணநீர் புற்றுநோய்

குர்குமின் சேர்த்த களிம்பு சோரியாஸிஸ் என்ற தோல் வியாதிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளின் மற்ற பயன்கள்:

• ஆபத்தான அல்ட்ரா வயலட் பி சூரியக்கதிர்கள் நமது தோலின்மேல் படாமல் இருக்க உபயோகிக்கப்படும் திரவத்தில் (Sun-Screen)
• இந்தியப் பெண்கள், தங்கள் முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு
• இந்தியாவில் உணவு, துணிகளுக்கு வண்ணப் பொருளாக
• டெட்ராஹைட்ரோகுர்குமினோய்ட்கள் ஆன்ட்டிஆக்ஸிடண்ட் ஆக
• எறும்புகள் மஞ்சளைக் கண்டு ஓடி விடும். ஆகையால் இரசாயனக் கொல்லிகளுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்துங்கள். இது சுற்றுபுற சூழலுக்கும் நமக்கும் நல்லது. எறும்புகளும் இயற்கைக்கு தங்கள் கடமைகளைப் பிரச்சினையில்லாமல் செய்ய முடியும்

மஞ்சள் ஒரு அருமையான, எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கைப் பொருள். இதைப் பற்றி இன்னும் அதிகம் ஆராய்ச்சிகள் தேவை.

Sunday, August 15, 2010

இன்று தேங்காய் உலகின் பல பகுதிகளில் விளைகிறது என்றாலும் முதலில் தோன்றிய இடம் நமது இந்தியத் துணைக் கண்டம் தான். அதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். நமது உடல் நலத்துக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் தன்னகத்தே கொண்ட சிறந்த உணவுப் பொருள் தேங்காய். தென்னை மரத்தின் ஒவ்வோர் அங்கமும் மனிதர்களுக்குப் பயன்படுகிறது.

தேங்காய் நமது நாட்டுப் பாரம்பரிய மருந்துகளிலும், நவீன மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. தேங்காயை வைத்து 50க்கும் மேலான பயன்பாடுகள் இருக்கின்றன என்று கட்டுரைகள் தெரிவிக்கின்றன. அந்த முறையில் தேங்காய் இன்னும் பயன்படுத்தப்ப்ட்டு வருகிறது.

தேங்காய் மிகவும் நல்ல உணவு. நாம் எல்லோரும் கட்டாயம் சாப்பிட வேண்டும். அதற்கான காரணங்கள்:

• 9% நார்ச்சத்து உள்ளது
• அதிக அளவில் செலினியம் இருக்கிறது. நம் உடலில் உள்ள ஆபத்தான ஃப்ரி ரேடிக்கல்களைக் குறைக்கும் என்ஸைம்களில் செலினியம் இருக்கிறது. மேலும் பாதரசம் உட்பட்ட நச்சு மிகுந்த உலோகங்களை நம் உடம்பிலிருந்து நீக்கவும் செலினியம் உதவி செய்கிறது.
• பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம், அயோடின் மற்றும் பல முக்கிய உலோகச்சதுக்களும் தேங்காயில் இருக்கின்றன.
• பி குடும்ப வைட்டமின்கள், இ, சி வைட்டமின்களும் இருக்கின்றன.
• தேங்காயில் அதிக நீளமுள்ள பூரிதக் கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே உள்ளன. ஆனால், ஆரோக்கியமான குறைந்த பூரிதக் கொழுப்பு அமிலங்களும் நடுத்தர நீளமுள்ள பூரிதக் கொழுப்பு அமிலங்களும் அதிகமாக உள்ளன. எனவே எல்டிஎல் : எச்டிஎல் விகிதமும் நன்றாக இருப்பதற்கு தேங்காய் மிகவும் ஏற்ற உணவுப்பொருள்.

இட்லிக்கோ மெதுவடைக்கோ 30 கி தேங்காய் சட்னி சாப்பிட்டால் இருதய வியாதி உள்ளவர்களுக்கும் கூட எந்தத் தீங்கும் எற்படாது. வேறு ஏதேனும் சமைத்தால் கூட அதில் சாதாரண அளவு தேங்காயைச் சேர்த்துக்கொள்ளலாம். எல்லாச் சமையல்களிலும் தாராளமாகத் தண்ணீர் சேர்க்கிறோம். அப்படிச் சமைத்துச் சாப்பிடும்போது, அதிக நீளமுள்ள பூரிதக் கொழுப்பு அமிலங்களை நாம் ஒரு சில கிராம்கள் அளவுக்குத்தான் உட்கொள்கிறோம். அதிக நீளமுள்ள பூரிதக் கொழுப்பு அமிலங்களும் நமது உடல் நலத்திற்குத் தேவையானதே.

பல ஆண்டுகளாகவே உணவில் தேங்காய் சேர்க்காத, இருதய நோய் வந்த பலரை இந்தியாவில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், வேடிக்கை என்ன தெரியுமா? அவர்கள் கொலஸ்ட்ரால் மற்றும் விலங்கு பூரிதக் கொழுப்பு அமிலங்கள் உள்ள இறைச்சி மற்றும் கோழிக்கறியையும் தாராளமகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறனர். இந்த நிலையில் அவர்களுக்குத் தேங்காய் மட்டுமே ஏன் வில்லனாகத் தெரிகிறது என்பது எனக்குப் புரியவில்லை?

கவனித்துச் சாப்பிட வேண்டுமென்றல், சமையலில் தேங்காய் எண்ணெய் மற்றும் இதர தாவர எண்ணைகளின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். தூய தேங்காய் எண்ணெய் நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது என்றும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது என்றும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன என்பதை நாம் எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எந்தத் தாவர உணவிலும் கொலஸ்ட்ரால் கிடையாது.

உலகில் தேங்காய் அதிகமாக விளையும் பகுதிகளிலெல்லாம் மக்கள் அன்றாடம் தேங்காயை உட்கொண்டு இருதயத்திலோ மற்ற உடலுறுப்பிலோ எந்தப் பாதிப்புமின்றி வாழ்ந்து வருகிறார்கள். மற்ற எண்ணெய்களை விற்பனை செய்வதற்காகதேங்காயின் மேல் இம்மாதிரியான உண்மையில்லாத புரளிகளைக் கிளப்புகின்றனர் என்று நான் நினைக்கிறேன். அளவுதான் ஒரு பொருளின் நச்சுத்தன்மையை முடிவு செய்கிறது.

பசுமையான தேங்காயிலிருந்தும், உலர்த்தப்பட்ட தேங்காய்க் கொப்பரையிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெயே தூய தேங்காய் எண்ணையாகும். தேங்காய் எண்ணெய் விமானத்தின் எரிபொருளாக பயன்படும் பயோடீசலுக்கும், மேக்கப் பொருட்கள், க்ரீம் வகைகள், மருந்துகளில், பெயிண்ட் தயாரிப்பில் என பல தொழில்களில் நேரிடையாகவும், வேறுவழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி பயன்படுத்துவதை விட ஏழை மக்களுக்கு உணவாகப் பயன்படுத்துவதே நல்லது என்று நான் நினைக்கிறேன்.

கடைசியாக இளநீரைப் பற்றி ஒரு வார்த்தை: இயற்கையான சதைப் பற்றுள்ள, பாதுகப்பான கொள்கலத்தில் நிரப்பப்பட்டுள்ள இந்த இளநீரில் நமது உடம்பிற்குத் தேவையான உலோகச்சத்துக்களும் வைட்டமின்களும் அதிக அளவில் இருக்கின்றன. இது கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல எல்லாப் பருவ காலங்களுக்கும் ஏற்ற மிகச்சிறந்த பானம்.

Saturday, August 14, 2010

கேட்டமைன் என்ற பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இதை வேறு ஊர்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ கடத்த முயன்றதாகப் பலர் காவல்துறையிடம் பிடிபட்டதை நான் தொடர்ந்து செய்தித்தாள்களில் பார்க்கிறேன். இந்த அருவருப்பான வியாபாரம் நடக்கும் முக்கியமான இடங்களில் சென்னையும் ஒன்று.

முப்பது வருடங்க்களுக்கு மேலாக கேட்டமைன் கால்நடைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த இருபது ஆண்டு காலமாக இதனுடைய தீய பயன்களையும் போதைத் தன்மையையும் பற்றி அறிவோம். இது ஒரு மயக்க மருந்து மற்றும் வலியைப்போக்கும் மருந்து. இது பிசிபி (PCP) போன்ற போதையை உண்டாக்கும் கால்நடை மருந்து. கேட்டமைனும் பிசிபியும் வட அமேரிக்காவிலும், மற்ற நாடுகளிலும் தவறாக உபயோகப்படுத்தப்படும் போதைப்பொருட்கள். ஆனால், ஐரோப்பாவில் இதை ஒருவரும் துஷ்பிரயோகம் செய்வதில்லை. பொதுவாக இதன் போதைக்கு அடிமையாவது இளம் பெண்களும் ஆண்களும்தான்.

தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்தால் மனதளவில் கேட்டமைனுக்கு அடிமையாவோம். இந்த துஷ்பிரயோகத்தால் உண்டாகும் விளைவுகள்:

• மாயத்தோற்றம்
• நினைவுக் குறைபாடு
• மனக்குழப்பம்
• குமட்டல்
• தூக்கத்தில் நடப்பது போன்ற உணர்வு

கேட்டமைனின் பக்கவிளைவுகள்:

• மனக்குழப்பம்
• மிகுந்த இரத்த அழுத்தம்
• அதிக இதயத்துடிப்பு
• நிலையற்ற கவனம்
• உடலின் பாகங்கள் மரத்துப் போதல்
• உடலுக்கு வெளியே சென்று உலாவி வந்த மனநிலை

கேட்டமைனுக்கு ஹெராயின் போன்ற விளைவுகள் கிடையாது. இதற்கு அடிமைப்படுவது கொகெய்னுக்கு அடிமைப்படுவது போன்றது.

கேட்டமைனை மட்டும் துஷ்பிரயோகம் செய்து இறப்பது மிகவும் அபூர்வமானது. ஆனால் மற்ற போதைப்பொருட்கள், மது அல்லது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்துகளோடு சேர்த்துத் துஷ்பிரயோகம் செய்தால் மரணம் நேரிடலாம்.

போதைப்பொருட்கள் உங்களை மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தையும் அழிக்கும். நாம் எல்லோரும் எப்பொழுதும் வேண்டாம் என்றுதான் சொல்ல வேண்டும்.

Thursday, August 12, 2010

அளவிற்கு அதிகமான எல்லா இரசாயனப்பொருட்களும் நமது உடம்புக்கு நஞ்சே. இது நமக்குத் தேவையான, உயிர் காக்கும் மருந்துகளுக்கும் சேர்த்துத்தான். இவைகளை மருத்துவர் சொல்லும் அளவிற்கு மேல் சாப்பிடக் கூடாது. பல மருந்துகளுக்கும் மற்ற போதைப்பொருட்களுக்கும் நம்மை அடிமையாக்கும் தன்மை உண்டு.

போதையைக் கொடுக்கும் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன:

அனுமதிக்கபட்ட போதைப்பொருட்கள்

• மது (ஆல்கஹால்)
• நிகோடின் (புகையிலை)
• காஃபின் (காப்பி, தேநீர், மென்குடிபானங்கள்)

• மருத்துவர் கொடுக்கும் அல்லது மருந்துக் கடையில் வாங்கும் மருந்துகள் அல்லது மாத்திரைகள்

தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள்

• சில காளான்களிலிருக்கும் இயற்கைப் போதைப்பொருட்கள்
• ஹெராயின்
• கொகேய்ன்
• எக்ஸ்டஸி உட்பட்ட, பார்ட்டிகளில் துஷ்பிரயோகம் செய்யப்படும் போதைப்பொருட்கள்
அ. ஆம்பெடாமைன் / மெதாம்பெடாமைன்
ஆ. கேட்டமைன்
இ. எல்எஸ்டி
• காம்மா-ஹைட்ராக்ஸிபியூடிரேட்
• பென்சைக்ளிடின்
• கெனபிஸ் (கஞ்சா, மரிஜுவானா, ஹாஷிஷ்)
• அனபாலிக் ஸ்டீராய்டுகள் (டோபிங்)
• ஃப்ளூநைட்ரேஸெபம் (டேட் ரேப் ட்ரக்)
• இரசாயன கரைப்பான்களின் ஆவியை உறிஞ்சுதல் (பெட்ரோல், கெரசின், நக நிறம் நீக்கி, மற்றும் பல)

போதைப்பொருட்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அழிக்கும். யார் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லுங்கள்.

Wednesday, August 11, 2010

நமக்குக் கிடைக்கும் உணவுகளில் முட்டை ஒரு சிறந்த உணவு. முட்டை உணவின் மூலம் ஹாலிவுட் நடிககைகள்/நடிகர்கள் தங்கள் எடையைக் குறைத்துக் கொண்டதால் இது மிகவும் பிரபலமானது. இந்த உணவு முறையில் மிகவும் குறைந்த அளவில் மாவுப்பொருள் உள்ள உணவுகள் அதிகமாக சாப்பிடப் படுகின்றன. முட்டை, இறைச்சி, பால் கட்டி மற்றும் குறைந்த மாவுப்பொருள் கொண்ட உணவுகளைத் தாராளமகச் சாப்பிடலாம். தேவையான அளவு மாவுப்பொருள் சாப்பிடாவிட்டால் உடம்பில் இருக்கும் கொழுப்பு தேவையான சக்தியைக் கொடுக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால் எடை குறைகிறது.

மாவுப்பொருளை முழுவதாகத் தவிர்த்தால் உடம்பிலுள்ள திரவத்தின் அளவு குறையும். கொழுப்பும் சக்தியைக் கொடுக்கச் சரியாக, முற்றிலும் எரிக்கப்படாது. இதனால் கீடோன்கள் உண்டாகும். பசி குறையும். ஆனால் குமட்டல் வர வாய்ப்பு உண்டு.

மாதிரி உணவுகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன:

காலை உணவு

இரண்டு முட்டைகள்
மாவுப்பொருள் குறைந்த காய்கறிகள், கிழங்குகளைச் சாப்பிடக்கூடாது.
ஒரு பப்ளிமாஸ் (நாரத்தம்பழம்)

மதிய உணவு

முட்டைகள் அல்லது மீன் அல்லது தோலில்லாத கோழிக்கறி, சலாட் மற்றும் மாவுப்பொருள் குறைந்த காய்கறிகள்

மாலை உணவு

முட்டைகள் அல்லது மீன் அல்லது தோலில்லாத கோழிக்கறி, சலாட் மற்றும் மாவுப்பொருள் குறைந்த காய்கறிகள்
ஒரு ஆரஞ்சுப் பழம்

ஒரு நாளில் இரண்டு தடவை பழம் சாப்பிடலாம்.

முட்டையும் – நாரத்தம்பழம் உணவுமுறையில் ஒவ்வொரு சாப்பாட்டுடன் பாதி நாரத்தம்பழம் சாப்பிடவேண்டும். அதி விரைவில் உடல் பருமனைக் குறைக்கக் கட்டியாக அவிக்கப்பட்ட முட்டை, நாரத்தம்பழம் மற்றும் குடிதண்ணீர் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.

முட்டை உணவு முறையில் எந்த விதமான உடற்பயிற்சிகளும் சிபாரிசு செய்யப்படவில்லை.

முட்டை உணவினால் வரும் அபாயங்கள்:

• தேவையான சத்துப் பொருட்கள் எல்லாம் கிடைப்பதில்லை
• குறைந்த அளவு மாவுப்பொருள் என்றால், வேலைகளைச் செய்ய குறைந்த் வலிமையே உண்டு
• ஆரம்பத்தில் களைப்பு மற்றும் குமட்டல் வர வாய்ப்பு உண்டு
• மலச்சிக்கல், வாய்வு மற்றும் வாய்நாற்றம் வரும்
• அதிக புரதம் உள்ள உணவுகளில் நிறைய பூரிதக் கொழுப்பும், குறைந்த நார்ச்சதுக்களும் இருக்கும். இதனால் கொலெஸ்ட்ரால் கூடி மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வர வாய்ப்பு உண்டு
• சிறுநீரகத்தில் கற்கள் வரலாம்
• உடம்பு அமிலத்தன்மை அடைவதால் அதிகம் கால்சியம் வெளியேற்றப்பட்டு ஓஸ்டியோபோரோஸிஸ் வியாதி வரலாம்

மற்ற உணவுகளோடு சேர்த்துச் சாப்பிடும் பொழுது முட்டை மிக நல்ல உணவு. முட்டைகள் மற்றும் மாவுப்புருள் குறைந்த காய்கறிகளை மட்டும் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லதல்ல. குறைந்த எடை நீங்கள் சாதாரணமாக்ச் சாப்பிடும் பொழுது உடனே கூடி விடும்.

முட்டை உணவை ஆரம்பிக்குமுன்பு உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிங்கள். இந்தத் தீவிரமான உணவு முறையைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. மற்ற உணவுகளோடு முட்டையைச் சேர்த்துச் சாப்பிட்டால், எந்த வித ஆபத்தும் இல்லாமல் எடையைக் குறைக்கவும், எடையைப் பராமரிக்கவும் முடியும்.

உடற்பயிற்சிகள் எப்பொழுதும் தேவை.

Sunday, August 8, 2010

யார் முதலில் முட்டைக்கோஸ் சூஃப் உணவைத் துவங்கி வைத்தார்கள் என்பது தெரியவில்லை. இது குறைந்த அளவு கலோரிகள் கொண்ட கொண்ட உணவு. 7 நாட்களுக்கு மட்டுமே இந்த உணவுப் பட்டியிலின் படிச் சாப்பிட வேண்டும். இந்த 7 நாட்களில் தேவையான அளவு முட்டைக்கோஸ் சூஃப்பைத் தினமும் குடிக்கலாம், பழங்கள், காய்கறிகள், மற்ற உணவுகளையும் சாப்பிடலாம்.

7 நாட்களுக்கான உணவு விவரங்கள்:

• நாள் 1 – உங்கள் விருப்பம் போல் எவ்வளவு சூஃப் வேண்டுமானாலும், எத்தனை தடவையும் சாப்பிடலாம். வாழைப்பழத்தைத் தவிர மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம்.

• நாள் 2 – முட்டைக்கோஸ் சூஃப், புதிய, பசுமையான சமைக்காத அல்லது சமைத்த காய்கறிகள். காய்ந்த பீன்ஸ், பட்டாணி, கிழங்குகள் (உருளைக்கிழங்கைத் தவிர) மற்றும் மக்காச் சோளத்தையும் சாப்பிடாதீர்கள். ஒன்று அல்லது இரண்டு அவித்த உருளைக்கிழங்குகளையும் சாப்பிடலாம்.

• நாள் 3 – வேண்டிய அளவு முட்டைக்கோஸ் சூஃப், பழங்களும் காய்கறிகளும் நாள் 1, நாள் 2 போல். ஆனால் உருழைக்கிழங்குகளைச் சாப்பிடக்கூடாது.

• நாள் 4 – தேவையான அளவு முட்டைக்கோஸ் சூஃப், 6 முதல் 8 வாழைப்பழங்கள் மற்றும் கொழுப்பில்லாத பால்.

• நாள் 5 – 300 முதல் 500 கி கொழுப்பில்லாத இறைச்சி (சைவ உணவு சாப்பிடுபவர்களுக்குப் பருப்பு வகைகள்) மற்றும் 6 தக்காளிகள் வரை. இன்று ஒரு தடவையாவது முட்டைக்கோஸ் சூஃப் சாப்பிடுங்கள். இறைச்சி சாப்பிட விருப்பம் இல்லாவிட்டால் அவித்த மீன் அல்லது தோல் இல்லாத கோழிக்கறி சாப்பிடலாம். 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிங்கள்.

• நாள் 6 – கொழுப்பில்லாத இறைச்சி அல்லது பருப்புக்கள் மற்றும் காய்கறிகளை இன்று சாப்பிடலாம். ஃஸ்டீக்ஸ், 2 அல்லது 3 துண்டுகள் மற்றும் புதிய, பசுமையான காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட சலாட். ஒரு தடவையாது முட்டைக்கோஸ் சூஃப் சாப்பிடுங்கள். உருழைக்கிழங்கு, மற்ற கிழங்குகளை இன்று சாப்பிடக்கூடாது.

• நாள் 7 – சோறு, புதிய, பசுமையான காய்கறிகள் மற்றும் சீனி சேர்க்கப்படாத பழச்சாறுகள் இன்று சிபாரிசு செய்யப்படுகின்றன. ஒரு தடைவையாது முட்டைக்கோஸ் சூஃப் சாப்பிடுங்கள்.

இந்த 7 நாட்களிலும் பால், சீனி சேர்க்கப்படாத தேநீர், காப்பி, குருதி நெல்லிச் சாறு மற்றும் தண்ணீரையும் குடிக்கலாம்.

மதுபானங்கள் மற்றும் எல்லா மென்பானங்களையும் குடிக்ககூடாது. சோடாவையும் தவிர்க்கவேண்டும்.

உங்கள் ருசிக்குத் தகுந்த மாதிரி முட்டைக்கோஸ் சூஃப்பைத் தயாரிங்கள். முட்டைக்கோஸ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகு, சிவரிக்கீரை (செலரி) மற்றும் கொஞ்சம் வெங்காய சூஃப் கலவையையும் சேர்த்துக்கொள்ளலாம். கறிப்பொடி, மிளகாய், மிளகு மற்ற மசாலாப்பொருட்களையும் அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். உப்பு அதிகம் சேர்க்காதீர்கள்.

முட்டைக்கோஸ் சூஃப்பின் ருசி சிலருக்குப் பிடிக்காது. வாயுத்தொல்லைகள் உண்டாகலாம். இந்த உணவில் தேவையான புரதம், கொழுப்பு, மற்ற பொருட்களும் குறைவாக இருக்கச் சந்தர்ப்பம் உண்டு.

முட்டைக்கோஸ் சூஃப் உணவு மிக விரைவில் எடையைக் குறைக்க நல்லது. தொடர்ந்து இதைச் சாப்பிடக்கூடாது. 7 நாட்களுக்குப் பிறகு உங்கள் உடம்பிற்குத் தகுந்த, தொடர்ந்து சாப்பிடக்கூடிய உணவும், தேவையான உடற்பயிற்சிகளும் சிபாரிசு செய்யப் படவேண்டும்.

முட்டைக்கோஸ் சூஃப் உணவைக் கடைப்பிடிக்க நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும் மன பலம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். தலைச்சுற்றல் வந்தால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். இதனால் எடை குறைவதால், தொடர்ந்து மற்ற உணவுகளைக் கொண்டு இன்னும் குறைக்க ஆர்வம் உண்டாகும்.

இந்த முறையால் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் நீங்கள் விரும்பும் எடையையும் எப்பொழுதும் வைத்திருக்க முடியும்.

Thursday, August 5, 2010

மீன் நல்ல உணவு என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் போன்ற பல சத்துப் பொருட்களைக் கொண்ட நல்ல உணவு மீன். ஆனால் மிக அதிக அளவில் மீன் சாப்பிடுவதை ஊக்குவிப்பதில்லை. இதற்கான காரணம் மீனில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட இரசாயனப்பொருட்கள், பூச்சிக்கொல்லி முதல் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் எல்லா நச்சுப்பொருட்க்கள் மற்றும் நச்சான உலோக்ங்களும் இருப்பதினால்தான். இந்தப் பிரச்சினை கடல் மீனில் மட்டுமில்லாமல் நல்ல நீரில் வாழும் மீனிலும் இருக்கிறது.

தயிர் ஆரோக்கியமான உணவு. பால் மற்றும் பாலிலிருந்து உண்டாக்கப்படும் பொருட்களின் மூலம் கால்சியம் நமக்குக் கிடைக்கிறது. இதனால் நாம் இவைகளை மிக அதிகம் சாப்பிட்டு அவதிப்படுகிறோம். உணவில் அளவுக்கு மீறிய கால்சியம் மற்றும் புரதம் நமது எலும்பிலிருந்து கால்சியத்தை வெளியேற்றுகிறது. இது நமது ஆரோக்கியத்துக்கு நல்லது இல்லை.

மீனையும் தயிரையும் சேர்த்துச் சாப்பிட்டால் என்ன ஆகும்? இதனால் வயிற்றுத்தசைப்பிடி வலி அல்லது தோலில் வெள்ளைத் திட்டுகள் உண்டாகுமா?

மீனையும் தயிரையும் சேர்த்துச் சாப்பிட்டால் தோலில் வெள்ளைத் திட்டுகளை உண்டாக்கும் லோய்க்கோடெர்மா (விற்றிலிகொ) வியாதி வருவதில்லை. இந்த வியாதிக்குக் காரணம் தோலுக்கு நிறத்தைக் கொடுக்கும் மெலனினை உருவாக்கும் உயிரணுக்கள் அழிக்கப்படுவதால்தான். மீன் தயிர் கலவை இந்த உயிரணுக்களை அழிப்பதில்லை. மிகக் கட்டுப்பாடாக சைவ உணவு உண்பவர்களுக்கும் லோய்க்கோடெர்மா வியாதி வருகிறது. அடிக்கடி மீன், தயிர் சாப்பிடுபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இந்த வியாதி வருவதில் எந்தவித வேறுபாடும் இல்லை. இந்த நம்பிக்கைக்கு எந்த வித அறிவியல் ஆதாரமும் கிடையாது. பல நாடுகளில் மீனைப் பாலில் அல்லது பால்பொருட்க்களில் ஊற வைக்கிறார்கள் மற்றும் சமைக்கிறார்கள். பலருக்கு எந்த வித பிரச்சினைகளும் வருவதில்லை.

ஆனால் பால் புரதத்தால் வரும் ஒவ்வாமை மற்றும் பால் சர்க்கரைச் சகிப்புதன்மையின்மை பிரச்சினைகளை நாம் மறந்து விடக்கூடாது. மீனையும் தயிரையும் அளவோடு சாப்பிடுங்கள். ஏதாவது பிரச்சினை வந்தால் சாப்பிடாதீர்கள்.

இதைச் சாப்பிடுவதினால் எனக்கு எந்த வித பிரச்சினையும் வருவதில்லை.

மீனையும் தயிரையும் சேர்த்துச் சாப்பிடக்கூடாது என்பது ஒரு மூட நம்பிக்கையே.

Wednesday, August 4, 2010

மிட்டாய், சாக்லட் மற்றும் இனிப்பு பட்சணங்களில் நிறைய சீனி இருப்பது எல்லோருக்கும் தெரியும். இவைகளை எளிதாகத் தவிர்க்க முடியும். ஆனால் உணவில் மறைந்திருக்கும் சீனியை எப்படித் தவிர்ப்பது? பல பதனிடப்பட்ட உணவுகள், தக்காளி கெட்சப், திடீர் சூப்புக்கள் போன்றவைகளில் நிறைய சீனி சேர்க்கப்படுகிறது. பொருள் விவரச் சீட்டில் இது பற்றி எழுதப் படுவதில்லை. எடையைக் குறைக்கவும், பிறகு சீராக வைத்திருக்கவும் இதைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.

பொருள் விவரச் சீட்டில் சீனி இல்லை என்று எழுதப்பட்டிருந்தால் தயாரிப்பாளர்கள் கூறுவது மேசை மேல் வைக்கப்படும் சீனி (சுக்ரோஸ்) மட்டுமே இல்லை என்பதுதான். குளுக்கோஸ், மால்டோஸ், ஃப்ருக்டோஸ், லேக்டோஸ், சுக்ரோஸ் என்பவை சீனியின் மற்ற பெயர்களாகும். இவைகளின் மூலம் வேறாக இருந்தாலும் கலோரிகளின் அளவு ஒன்றுதான். சில தயாரிப்பாளர்கள் மாவுப்பொருள் என்று மட்டுமே எழுதுகிறார்கள். தப்பான தகவல்களைக் கொடுக்கும் இந்த பொருள் விவரச் சீட்டைப் புரிந்து கொள்ள நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஸோர்பிடோல், ஜிலிடோல், மால்டிடோலுலிலும் கலோரிகள் இருக்கின்றன.

உணவில் எப்பொழுதும் அதிகம் இனிப்பு இருந்தால் நமது நரம்புகளுக்கு உணவின் இயற்கை இனிப்பை உணர, அனுபவிக்க முடியாது. மேலும் இனிப்பு உணவுகள் அதிகம் இன்ஸுலினைச் சுரக்கச் செய்கின்றன. இதனால் இரத்த சர்க்கரையில் அளவு குறைகிறது. இனிப்பைச் சாப்பிட வேண்டும் என்ற கோரப் பசி உண்டாவதற்குக் காரணம் இதுவே. அளவில்லாமல் சாப்பிட்டு பருமன் கூடுவதுதான் இதன் விளைவு.

அதிகம் சீனியை பயன்படுத்தும் உங்கள் பழக்கத்தை மாற்றி இயற்கையான இனிப்பை உபயோகப்படுத்த வழிகள் இருக்கின்றன. அவை:

• தயிர், பால்கட்டியை இனிப்பாக்க புதிய, கனிந்த பழங்களைப் பயன்படுத்துங்கள்
• முழுத்தானிய அவல் (முஸ்லி) முதலியவைகளுக்குத் தேன், உலர்ந்த பழங்கள் அல்லது தேங்காயை உபயோகிக்கலாம்
• பழச்சாருடன் தண்ணீரைக் கலந்து குடிங்கள். தினமும் தண்ணீரின் அளவைக் கூட்டுங்கள்
• இயற்கை இனிப்புச்சுவை உள்ள பச்சையான அல்லது சமைத்த தானியம் மற்றும் காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள்
• மென்குடிபானங்கள், குளிர்ந்த தேநீர், மற்றும் காஃபியின் சேர்ந்த குடிபானங்களைத் தவிருங்கள். ஆனால் காப்பி, தேநீர் அளவாகக் குடிக்கலாம்
• பசியுடன் சாமான் வாங்கக் கடைக்குப் போகாதீர்கள். பொதுவாக அப்பொழுது அதிக இனிப்பு அல்லது கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களையே வாங்குவீர்கள்

எடையைக் குறைப்பதோ, பிறகு சீராக, அளவாக வைத்திருப்பதோ மிகவும் எளிது. உங்களுக்குத் தேவையான தகவல்கள் தெரிந்தால் போதுமானது. இதை உணர்ந்து கொண்டால் எடையை குறைப்பது ஒரு மகிழ்ச்சியான காரியம் ஆகும்.

Tuesday, August 3, 2010

ஆரோக்கியமான வாழ்வுக்கான விதிமுறைகளைக் கடைபிடிப்பது மிகவும் எளிதானது. சில விதிமுறைகளை மனதில் வைத்துக்கொண்டலே போதும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக நாம் எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டியதில்லை.

முக்கியமான விதிமுறைகள்:

1. பசுமையான, புதிய, அன்று சமைக்கப்பட்ட உணவுதான் மிகச்சிறந்தது. ஜங்க் ஃபுட், பதனிட்ட உணவுகள், மற்றும் இரசாயனப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும். மைதா மாவில் செய்த ரொட்டியைவிட முழுத்தானிய மாவில் செய்த ரொட்டிதான் நல்லது. வேகவைத்து சமைக்கப்ட்ட மீன் குழம்பு வறுத்த மீனைவிட ஆரோக்கியமானது. இதேபோல் இறைச்சி குழும்பு வறுத்த மாமிசத்தைவிட நல்லது. சமைப்பதற்கு நல்ல தாவர எண்ணைய்களைப் பயன்படுத்துங்கள். பச்சைக்காய்கறிக் கலவைக்கு ஆலிவ் எண்ணையை உபயோகப்படுத்துங்கள். மலிவான, தரமில்லாத எண்ணைகள் நல்லதல்ல. இவைகளில் கெடுதலான ட்ரான்ஸ்-கொழுப்புக்கள் இருக்கும். சமைக்க அதிக நேரம் இல்லாவிட்டால் பசுமையான, புதிய காய்கறிகளை வைத்து சூஃப் செய்யுங்கள். பங்கு போட்டு உறைய வையுங்கள். உறைய வைக்கப்ட்ட காய்கறிகளும் நல்லது. ஆனால், நிறத்தைக்கூட்ட இரசாயனப்பொருள் கலந்திருக்கிறார்களா என்று கவனித்துக்கொள்ளுங்கள். உறைய வைக்கப்பட்ட காய்கறிகளை வைத்து மிகவும் எளிதாக நல்ல, ஆரோக்கியமான உணவுகளைத் தயாரிக்கலாம்.
2. எப்பொழுதும் கலோரிகளை எண்ணிக்கொண்டேயிருக்காதீர்கள். கொழுப்பு, மாவுப்பொருள், முக்கியமாக சீனி, மற்றும் மறைந்திருக்கும் அதிகம் கலோரிகளைக்கொண்ட ஃபாஸ்ட் புட், நொறுக்குத்தீனிகள், பட்சணம் முதலியவைகளை மிகவும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். சோறு, நூடுல்ஸ், உருளைக் கிழங்கு மற்றும் ரொட்டி அளவாக சாப்பிட வேண்டும். புதிய காய்கறிகள், பழங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதற்கு விதிவிலக்கு கிழங்குகள், வாழைப்பழம் மட்டுமே.
3. உங்களுக்குப் பிடித்தமான சாக்லேட், கேக், சிஃப்ஸ் போன்ற உணவுப் பொருட்களை முழுவதாகத் தவிர்க்கவேண்டியதில்லை. எப்பொழுதாவது நீங்கள் இவைகளைச் சாப்பிடலாம். ஒரு நாள் சாப்பிட்டால், அடுத்த நாட்களில் கவனமாக இருக்கவேண்டும்.
4. ஒரு நாளில் 3 முதல் 4 லிட்டர் திரவபானங்களைக் குடிக்க வேண்டும். இதில் 70% குடிதண்ணீராக இருக்க வேண்டும். பழச்சாறுகள் நமது ஆரோக்கியதிற்கு மிகவும் முக்கியமானவை. நீங்கள் விரும்பினால் ஒரு நாளில் இரண்டு டம்ளர் காப்பி அல்லது தேநீர் குடிக்கலாம். கோலா முதல் எல்லா மென்பானங்களையும் தவிருங்கள். எப்பொழுதாவது ஒரு டம்ளர் குடிக்கலாம்.
5. தினமும் வேகமாக நடத்தல், நீந்துவது அல்லது உங்களுக்குப் பிடித்த, தகுந்த உடற்பயிற்சியைச் செய்யுங்கள்.
6. குடும்பத்திலிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ உண்டாகும் மனஅழுத்தத்தைக் குறைக்கக் கட்டாயம் முயற்சி செய்யுங்கள்.

இங்கு கூறிய விதிமுறைகளை அடிப்படையாகக்கொண்டு உங்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான விதிமுறைகளை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.