வர்த்தகம் மற்றும் தொழில்துறை செழிக்க இது சுங்கவரி நீக்கப்பட்ட இடமாக இருந்து இந்தியாவிற்கு அளவில்லா வளத்தைக் கொண்டு வர வேண்டும்.

ராமர் தீவு கீழக்கரையின் தெற்குப் பக்கத்தில் ஆரம்பித்து தேவிப்பட்டிணம் தாண்டி கடலில் சேர வேண்டும். இது ஒரு நேரான கால்வாயாக இருப்பதால் பலவித அனுகூலங்கள் இருக்கின்றன. கட்டுவது, பாதுகாப்பது, பராமரிப்பது எளிதானது. கப்பல் பிரயாணத்திற்கும் சிறந்தது. சிங்கப்பூரோடு இணைத்துப் பார்க்கும் பொழுது ராமர் தீவுக்கு இந்தக் கால்வாயின் இரு பக்கங்களிலும் வசதியிருக்கிறது. கால்வாய்க்கு மறு பக்கத்திலிருக்கும் இடங்களில் தொழிற்சாலைகள் மற்றும் ராமர் தீவுக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளையும் உண்டாக்கலாம், ஒழுங்கு படுத்தலாம். இதனால் இந்தத் தீவு எந்த விதப் பிரச்சினையும் இல்லாத நமது உலகின் நந்தவனமாக மாறும் வாய்ப்பும் இருக்கிறது என்று நினைத்தான் ராமன்.

இங்குள்ள இயற்கை வளங்களுக்கு எந்தவிதப் பிரச்சினைகளும் உண்டாக்கக்கூடாது. இங்குள்ள பூமி மட்டுமில்லாமல் கடலிலுள்ள செடி, கொடி மற்றும் மரங்களிலிருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் பாதுகாக்கப்பட்டு வருங்காலத்திலும் இப்பொழுதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டும். தனித்தன்மை வாய்ந்த இங்கு இருக்கும் இயற்கையான இடங்கள், கடல் இதனால் எப்பொழுதும் பாதுக்கக்கப்படும் என்று எண்ணினான் ராமன்.

குயின்மேரி-2 மற்றும் வேறு உல்லாசக் கப்பல்களிலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான உல்லாசப் பிரயாணிகள் அவன் கண்கள் முன்பு வந்தார்கள். அங்கிருந்து அவர்கள் மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கன்னி, நாகூர் மற்றும் தஞ்சாவூருக்கு பஸ்களில் இடங்களைப் பார்க்கப் போகிறார்கள். இதனால் தெற்குத் தமிழ்நாட்டில் மற்றும் கேரளாவில் அதிக வேலை வாய்ப்புகள் உண்டாக வழி உண்டாகிறது. இதன் நல்ல விளைவுகள், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் இங்கு வேலை செய்ய வருவார்கள். நாட்டின் ஒற்றுமை கூடும். மேலும் சென்னையின் மக்கள், தொழில் அடர்த்தியை மிதப்படுத்துவதற்கும் இது உதவும். ஆனால் இவற்றிற்கிடையில் ராமர் தீவு புனிதமான, திவ்யத்தன்மை வாய்ந்த இடமாக என்றும் நிற்கும்.

அதே நேரத்தில் இந்த ராமர் தீவு அன்புடன் நேசிக்கும் அனைவருக்கும் மிக அருகிலேயே இருக்கும் என்று எண்ணினான் ராமன். திட்டம் போட்டுக் கட்டப்பட்ட இந்தத் தீவில் பழமையையும் புதுமையையும் இணைக்கும் பொழுது அவை சமாதானமாகச் சேருவது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணியது அவன் மனம்.

பவளப் பாறைகள், பலவித நிறமான மீன்கள், நடனமாடும் டால்பின்கள் இந்த இடங்களில் எப்பொழுதும் இருக்க வழி உண்டாகும். இது உலகிலுள்ள உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்கமாக மாறும். உயிரினங்களின் வளர்ச்சியைப் பற்றி முதன் முதலில் உண்டான ஒரு முதுகெலும்பு விலங்குடன் குருசடைத் தீவு உலகிலுள்ள எல்லா உயிரியல் மாணவர்களுக்கும் எப்பொழுதும் மெக்காவாக இருக்கும்.

நமது இந்தியக் கடற்கரை 7517 கி.மீ. நீளமானது. ஒவ்வொரு 50 கி.மீ. க்கு ஒரு துறைமுகம் இருக்கவேண்டும் என்று அவன் கனவு கண்டான். அதில் மீன் பிடிக்கும் விசைப்படகுகளுக்கும், டிராலர்களுக்கும், கடல் விளையாட்டிற்கும் மற்றும் வர்த்தகக் கப்பல்களுக்கும் இடமிருக்கவேண்டும். ஆனால் அதில் பெரும்பகுதி பலவிதத்திலும் உபயோகப்படும் ஒரு நவீன வர்த்தகத் துறைமுகமாக இருக்கவேண்டும் என்பது ராமனின் கனவு. மூன்று அல்லது நான்கு மீனவர்களுக்குச் சேர்ந்து ஒரு விசைப் படகை கொடுக்கலாம். ஒவ்வொரு மீனவக் கிராமத்திற்கும் ஒரு ஆழ்கடல் மீன்பிடிப்புக் கப்பல் இருக்கவேண்டும்.

கடலில் காற்றிலிருந்து மின்சார உற்பத்திக்கான பெரிய காற்று விசிறிகளுக்குள்ள பூங்காக்கள், கடல் நீரைக் குடிதண்ணீராக மற்றும் தொழிற்சாலைகள் இவைகளெல்லாம் இந்தியர்களின் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் உயர்த்தும் என்று நம்பினான் ராமன். இந்தத் திட்டத்தினால் அனைவருமே வெற்றியடைவார்கள் என்ற எண்ணம் அவனுக்கு உறுதியானது.

காலை மணி 7 ஆகிவிட்டது. கீதா எழுந்து தன்னைத் தயார் செய்துவிட்டாள். ஆனால் ராமன் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான். இல்லை, இன்னும் கனவு கண்டு கொண்டிருந்தான். அவனது அழகான ஆனால் மர்மமான சிரிப்பும் எப்பொழுதும் அவனது உதடுகளில் தெரிந்தது. கீதா அவளது தலையணையை எடுத்து, அவனது மூக்கு நுனியைத் தொட்டாள். அவன் கண்களைத் திறந்தான். அவனுக்கு முன் அழகான சிரித்த முகத்துடன் நின்ற கீதாவை அவன் பார்த்தான்.

"உங்கள் டிக்கட்டும் வந்துவிட்டது. முற்பகல் 11.30 மணிக்கு மதுரை விமானம் இங்கிருந்து புறப்படுகிறது", என்றால் கீதா.

அவன் அவளை நன்றாகப் பார்த்தான். "காலை வணக்கம் கீதா. காலை உணவிற்கு நீ மாத்திரம் போ. எனக்கு ஒரு முக்கியமான வேலையை முடிக்க வேண்டியதிருக்கிறது", ராமன் கூறினான்.

இதுவரை அவளை நீங்கள் என்று அழைத்த ராமன் இக்கணம் அவளை நீ என்று சுருக்கியத்தை உணர்ந்தான். உடனே அவன் தொடர்ந்து மன்னிக்கவும் என்று சொல்லவும் கீதா சட்டென்று "நீங்கள் என்னை இப்படி உரிமையுடன் கூப்பிடுவதே எனக்குப் பிடித்திருக்கிறது", என்று கூறி அவனது குற்ற உணர்ச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்.

"என்னைவிட அந்த வேலை முக்கியமா?" கீதா அவனைக் கேட்டாள்.

அவனும் ஆமாம் என்று தலையை அசைத்தான். அவளுக்கு ஒரே ஏமாற்றமாக இருந்தது. ஆனால் ஒரு பதிலும் சொல்லாமல் அவள் அறையை விட்டு வெளியேறினாள்.

"அவள் நல்ல கொபத்திளிருக்கிறாள்", ராமன் நினைத்தான். "நாளைக்கு எல்லாவற்றையும் என்னால் அவளிடம் விளக்கமாகக் கூற முடியும்", என்று எண்ணி தனது மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டான்.

காலை உணவு அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த கீதாவுக்கு ராமன் ஏன் ஆவலுடன் சேர்ந்து சாப்பிட விரும்பவில்லை என்பது புரியாத புதிராக இருந்தது. ஆண்களுக்கு எதிலாவது விருப்பம் இல்லாவிட்டால் அதை முக்கியமான வேலை இருப்பதாகக் கூறித் தட்டிக்கழித்து விடுகிறார்கள். இதற்கு ராமனும் விதிவிலக்கில்லை என்று எண்ணினாள்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8