ராமன் தனது பெட்டியிலிருந்து தாளை எடுத்துத் தனது கனவைப் பற்றி எழுத ஆரம்பித்தான். ஒவ்வொரு சிறு விஷயங்களையும் அவன் விளக்கமாக எழுத விரும்பினான். எதையாவது எழுத மறந்து விடுவோமோ என்று நினைத்துப் பயந்தான். அவன் நிறுத்தாமல் எழுதிக் கொண்டேயிருந்தான். திடீரென்று கீதா அவன் முன்னால் வந்து நின்றாள்.

"என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?" அவள் கேட்டாள். "நான் மறக்கக்கூடாத சில விஷயங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்", ராமன் பதிலளித்தான்.

"அதை இப்பொழுது நான் பார்க்கவேண்டும்", என்று முனுமுனுத்தாள் அவள்.

"முடியாது, நாளை அல்லது நாளை மறுநாள் வரை நீ காத்திருக்கவேண்டும்", புன்னகையுடன் பதிலளித்தான் அவன்.

முதன்முதலாக அவளுக்கு அவன் மேல் கோபம் வந்தது. ஆனால் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தனது பெட்டியை அடுக்கத் தொடங்கினாள். ராமன் எழுதி முடித்தான். தாள்களைப் பத்திரமாகத் தனது பெட்டியில் வைத்துப் பூட்டினான். அதன் பிறகு அவன் குளியலறைக்குச் சென்றான். அன்று அவன் காலையுணவு சாப்பிடவில்லை. அவனுடைய இந்த வினோதமான நடத்தையை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

மதுரை விமான நிலையத்தில் அவர்களது விமான நிலையம் இறங்கியது. ஒரு டாக்சியில் ஏறி பாட்டி வீட்டை அடைந்தார்கள். பாட்டியும் அவர்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள். அவள் மகன் அருநாச்சலத்திடமிருந்து அவர்கள் வருவது பற்றிய தகவல் அவளுக்கு முன்பே கிடைத்துவிட்டது. பாட்டி விடாமல் தொடர்ந்து அவர்களை ஏதாவது கேட்டுக்கொண்டே இருந்தாள்.

சாப்பிட்டு முடிந்தவுடன் தான் மறுநாள் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரத்திற்குச் செல்ல விரும்புவதாகக் கூறினான் ராமன். இது கீதாவிற்கு எதிர்பாராட ஆனால் மகிழ்ச்சியான ஆச்சரியத்தை உண்டாக்கியது. உடனே அவள் ராமேஸ்வரத்திலுள்ள அந்த அழகான கோவிலைப் பற்றி எண்ணினாள். எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் கீதாவும் சரி என்று கூறினாள்.

"பாட்டி நீங்களும் கூட வாருங்கள்?" என்று கீதா கேட்டாள்.

ஆனால் பாட்டி நாள் முழுவதும் பிரயாணம் செய்ய விரும்பவில்லை.

"ராமனோடு நல்ல பிக்னிகிக்குப் போய்விட்டு வா. அதற்குத் தேவையானதெல்லாம் நான் தயார் செய்கிறேன்", விளக்கம் காணமுடியாத புன்னகையுடன் பதிலளித்தாள் பாட்டி.

கீதாவும் ராமனும் மறுநாள் காலையில் டாக்சியில் கிளம்பினார்கள். காரின் டிரைவர் கீழக்கரையைச் சேர்ந்தவர்.

"எனக்கு இங்கு எல்லா இடங்களும் தெரியும். உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள். நான் அதன்படி போகிறேன் ஐயா", என்றார் டிரைவர்.

"கீழக்கரை, முத்துப்பேட்டை, ராமநாதபுரம், மண்டபம், இருமேனி, பானல்க்குளம் மற்றும் தேவிப்பட்டினம் வழியாகக் காரை ஒட்டுங்கள். நாங்கள் இந்த இடங்களைப் பார்க்க விரும்புகிறோம். இறுதியாக ராமேஸ்வரம், பாம்பனையும் சென்று பார்க்கவேண்டும்", என்று பதிலளித்தான் ராமன்.

"சரி", என்றார் டிரைவர். காரும் நகர ஆரம்பித்தது. அவன் சொன்னது ஒன்றும் கீதாவிற்குச் சரியாக புரியவில்லை. அவன் இந்த ஊர்களிலெல்லாம் எதைப் பார்க்க விரும்புகிறான் எனத் தனக்குள் கேட்டுக்கொண்டாள். இதற்கான பதில் எனக்கு இன்று கிடைக்கும் அல்லது நாளை கிடைக்கும் அல்லது மதுரை திரும்பிச் சென்ற பிறகு இரவிலும் கிடைக்கலாம் என்று அவள் எண்ணினாள். அவளுக்கு எல்லாமே மர்மமாக இருந்தது. ராமன் ஒரு புதுமையான ஆனால் வித்தியாசமான மர்ம மனிதனாக அவளுக்குத் தோன்றினான். ஏதோ ஒரு பெரிய திட்டத்தை நடத்தப் போகிறான் அல்லது ஒரு வேலை இதெல்லாம் அர்த்தமில்லாத வேலையாகவும் இருக்கலாம் என்று எண்ணினாள் கீதா.

அது ஒரு நல்ல நாள். அன்று முழுவதும் அவர்கள் காரிலேயே சுற்றி வந்தார்கள். அதே நேரத்தில் அது ஒரு கடினமான நாளும் கூட. ஆனால் எல்லா இடங்களையும் அவர்கள் பார்த்துவிட்டார்கள். ராமன் கடலை மிட்டாயைச் சாப்பிட்டான். கீதா ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டாள். நாள் முழுவதிலும் இரண்டு அல்லது மூன்று இளநீரையும் குடித்தார்கள். டிரைவரும் பல கிளாஸ் தேநீரைக் குடித்திருந்தார்.

"எனக்கு இப்பொழுது ஒரு நல்ல எண்ணம் உண்டாகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த நாட்டிற்கு மிகவும் அருமையான இடமாகும்", என்றான் ராமன்.

"நீங்கள் என்ன அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்று எனக்குச் சரியாகப் புரியவில்லை. எனக்கு இந்த விஷயங்களெல்லாம் விளங்கவேயில்லை", என்றாள் கீதா.

"இன்னும் ஒரு நாள் பொறுத்துக்கொள். அதன்பிறகு நான் எல்லாவற்றையும் உனக்கு விளக்கமாகச் சொல்கிறேன்", என்றான் ராமன்.

மேலும் படிக்க:
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 3 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 5 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 2
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 3
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 4
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 6 : பாகம் 5
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 1
சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 7 : பாகம் 2

சேது சமுத்திரத் திட்டம் - ராமர் தீவு - அத்தியாயம் 8