தத்துவப்படி இது சரியே. ஆனால் நடைமுறையில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதிக அளவில் எல்லா உலோகங்களும் நச்சுத்தன்மை வாய்ந்தவையே. இரும்புச்சத்தினால் ஹீமோகுளோபின் அளவைக் கூட்ட முடியும். பொதுவாக இது நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே இரத்தத்திற்குள் செல்வது நல்லது.

நீங்கள் இரும்புச்சத்து மாத்திரையைச் சாப்பிட்டால் இரத்தத்திற்குப் போகும் எல்லா இரும்புச்சத்தும் ஹீமோகுளோபினாக மாற்றப்படாது. அளவுக்கு அதிகமான
இரும்பு இருதயம், சிறுநீரகங்கள், ஈரல் மற்றும் பல உறுப்புக்களிலுள்ள தசைகளில் படிகிறது. நமது உடம்பின் வெப்பம் 37° செல்ஸியஸ். மேலும் உடம்பில் தேவையான அளவில் தண்ணீர் இருக்கிறது. இதனால் தசைகளில் படிந்த இரும்பு துருப்பிடிக்கிறது. இதனால் உடம்பில் அளவுக்கதிகமாக நச்சுத்தன்மை வாய்ந்த, வினை வீரியம் கொண்ட ஹைட்ராக்சில் ஃப்ரிராடிக்கல் (Free Radicals) பெண்டன் இயக்கத்தால் உண்டாகிறது. ஃப்ரிராடிக்கல் நது உடம்பிற்கு மிகவும் முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அளவிற்கு அதிகமாக இருந்தால் இவை நமது மூட்டுக்கள் மற்றும் உறுப்புக்களைத் தாக்கி நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

இரும்புச்சத்து மாத்திரைகளை 14 நாட்களுக்கு எந்த விதமான பிரச்சினையுமில்லாமல் சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிட வேண்டுமென்றால், மருத்துவரின் அனுமதியோடு, அவரின் தொடர்ந்த மேற்பார்வையுடந்தான் உபயோகிக்கலாம்.

ஒரு நல்ல உணவுமுறை வல்லுநர் இரத்தத்தில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் கூட எந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடவேண்டும் என்பதை உங்களுக்குக் கூற முடியும். இதுதான் மிகச்சிறந்த முறையும் கூட. அவசர காலத்தில் உடனே கூட்ட ஒரு சில நாட்களுக்குச் சாப்பிடலாம்.

இரும்புச்சத்து மற்றும் அலுமினியம் உரிஞ்சப்படிவதற்கு வைட்டமின் சி யின் தேவையையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இரும்புச்சத்து மாத்திரைகள் குழந்தைகளுக்கு விஷம். ஆகையால் மாத்திரைகளை எங்காவது பூட்டி வைக்க வேண்டும்.